top of page

வரி தழும்புகள் மங்குவதற்கான 7 எளிமையான வீட்டுக் சிகிச்சை முறைகள்



வரித்தழும்புகள் யாருக்கும் பிடிக்காதுதான்! ஆனால் என்ன செய்ய? நாம் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே! வரித்தழும்புகள் கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படுவது சகஜம். மேலும் பெரும்பாலான பெண்களுக்கு திடீரென்று எடை குறையும் பொழுதோ அல்லது கூடும் பொழுதோ இத்தழும்புகள் ஏற்படுகின்றன. இந்த அழகற்ற செம்மண்ணிறத்தில் இருக்கும் தழும்புகள் மார்பின் மேல், தொடையில், வயிற்றில், தோள்பட்டையில் பெரும்பாலும் ஏற்படுகின்றது. வரித்தழும்புகள் ஒருவரின் நிறம் மற்றும் அவரின் மரபியல் பொறுத்து மாறு படும்! பெண்களுக்கு வரித்தழும்புகள் ஏற்படும் பொழுது, அவர்களால் அவர்களுக்கு பிடித்த உடைகளை அணிய முடிவதில்லை.


இதைபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இந்த வரித்தழும்புகளை எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் மங்க வைக்க முடியும்.


இங்கே உங்களுக்காக அதிக பயனுள்ள 7 வீட்டு வைத்தியங்கள்:

Table of Contents

1.விக்ஸ் வேப்போரப்

2.காப்பி ஸ்க்ரப்

3.தயிர் மற்றும் மஞ்சள்

4.உருளை சாறு

5.பாதாம் எண்ணெய்

6.வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு

7.வீட்டிலேயே செய்யும் வரித்தழும்புக்கான களிம்பு


1.விக்ஸ் வேப்போரப்


விக்ஸ் வேப்போரப்பில் நிறைய பயனுள்ள எண்ணெய்கள் இருப்பதால், அவை வரி தழும்புகளை மங்க செய்கின்றன.

உபயோகிக்கும் முறை: பாதிக்கப்பட்ட இடத்தில் விக்ஸ் தடவி கிளிங் வ்ராப் கொண்டு மூடவும். இரவு முழுவதும் வைத்திருக்கவும்.

2.காப்பி ஸ்க்ரப்


காப்பியில் உள்ள காஃபினில் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்து இருப்பதால் வரித் தழும்புகளை மங்கச் செய்கிறது.

உபயோகிக்கும் முறை: சிறிதளவு காப்பி பீன்களை தண்ணீர் சேர்த்து அரைத்து அந்த விழுதை சருமத்தின் மீது தடவவும். அதை சுற்றி 3 – 5 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்யவும். பிறகு சுத்தம் செய்யவும்.

3.தயிர் மற்றும் மஞ்சள்


மஞ்சளில் உள்ள அபரிதமான ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் சருமத்தை வெளுக்கச் செய்யும் காரணிகள் வரித் தழும்புகளை மங்கச் செய்கின்றன. தயிர் சருமத்திற்கு ஊட்டமளித்து மிருதுவாக்குகிறது.

உபயோகிக்கும் முறை: ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை தயிருடன் கலந்து தழும்புகளின் மீது தடவவும். 10 – 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

4.உருளை சாறு


உருளைக்கிழங்கில் பல வகையான தாதுக்கள், வைட்டமின்கள் இருக்கின்றனன். மேலும் அதற்கு இயற்கையிலயே வெளுக்க வைக்கும் தன்மை உண்டு.

உபயோகிக்கும் முறை: ஒரு உருளைக்கிழங்கின் சாறை எடுத்து வரி தழும்புகளின் மீது தடவவும். 15 – 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவவும்.

5.பாதாம் எண்ணெய்


பாதாம் எண்ணெய் வைட்டமின் E மற்றும் பல சத்துக்கள் நிறைந்தது. அதனால் பாதாம் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. வரிதழும்புகளை நிறம் மங்கச் செய்கிறது.

உபயோகிக்கும் முறை: 1 – 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயை 1 – 2 துளிகள் மற்ற எண்ணெயுடன் கலந்து லேசாக சூடு படுத்தவும். அதை தினமும் இரவு தழும்புகள் மீது தடவவும்.

6.வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு


வெள்ளரி சருமத்தை குளிர்வித்து, எலுமிச்சை சருமத்தை குணமடைய வைக்கிறது.

உபயோகிக்கும் முறை: சரி பங்கு வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் தடவவும். 10 – 15 நிமிடங்கள் கழித்து வெதுப்வெதுப்பான நீரில் கழுவவும்.

7.வீட்டிலேயே செய்யும் வரித்தழும்புக்கான களிம்பு


இந்த வீட்டு சிகிச்சைக்கான களிம்பு முட்டை, பாதாம் விழுது, எலுமிச்சை சாறு மற்றும் ஓட்மீல் கொண்டு செய்யப்படுகிறது, இந்த பொருட்கள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி , சருமத்தின் தன்மையை மேம்படுத்துகிறது.


உபயோகிக்கும் முறை: இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்து கலக்கவும். அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, தலா 2 தேக்கரண்டி பாதாம் விழுது , ஓட்மீல் சேர்த்து நன்கு கலக்கவும். அதை இப்பொழுது வரி தழும்புகள் மேல் தடவவும். அது நன்கு காய்ந்தவுடன், சிறிதளவு நீர் விட்டு தேய்த்து எடுக்கவும்.


மேற்கூறிய சிகிச்சை முறைகளை தவறாமல் பின்பற்றினால் வரித்தழும்புகளை மங்கச் செய்ய பெரிதும் உதவும். இதை தவிர உங்களுக்கு வேறு சிகிச்சை முறைகள் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.

Image Source: central readers, stylecraze, youtube, the health site, healthline, askonyeka, NDTV food, ricky’s beauty guide


Thanks for te Sources.

Credited to https://bit.ly/3G9vCNQ

2 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page