ஒவ்வொரு குழந்தையின் உணவுப்பழக்கத்திலும் சேர்க்கவேண்டிய 5 அத்தியாவசிய உணவுப்பொருள்கள்
- 1stopview Vasanth
- Jan 7, 2023
- 2 min read

ஒவ்வொரு குழந்தைக்கும் சமச்சீர் உணவு தர வேண்டும் என்பது அணைத்து பெற்றோர்களுக்கும் தெரியும். தங்கள் குழந்தைக்கு சத்தான உணவு தருவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளனர். குழந்தைகள் வளரும் பருவத்தில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருந்தால் தான் செவ்வனே வளர இயலும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் உணவு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
குழந்தைக்கு தினமும் தர வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இங்கே தரப் பட்டுள்ளன-
Table of Contents
1. முழு தானியங்கள்
2. ராகி
3. உலர் பழங்கள்
4. ஃபாக்ஸ்நட்
5. சர்க்கரைவள்ளி கிழங்கு
1. முழு தானியங்கள்

வளரும் குழந்தையின் உணவில் முழு தானியங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் கனிமச்சத்து பெற சிறந்த வழி முழு தானியங்களை உட்கொள்ளுவதே ஆகும். முழு தானியங்களின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? ஒரு தானியத்தில் தோல், விதை மற்றும் நரம்பு ஆகிய மூன்றும் அதன் அசல் வடிவிலேயே இருந்தால் தான் அந்த தானியம் முழுமையாகும். அத்தகைய தானியத்தை உண்டால், நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உதாரணமாக, வெள்ளை கோதுமை மாவு ஆலையில் அரைத்து வெளி வரும் போது, அதன் வித்து மட்டுமே உபயோகப்படுகிறது. மற்ற சத்துக்களான நார்ச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் கனிமச்சத்து ஆகியவை தோலுடன் வெளியேற்றப் படுகிறது. உமியுடன் கூடிய முழு கோதுமை மாவையே உங்கள் குழந்தைக்கு பயன்படுத்துங்கள். கூழ், புல்லரிசி, சோளம் மற்றும் சிகப்பரிசி ஆகியவையும் முழு தானியங்களே.
2. ராகி

சுண்ணாம்பு மற்றும் இரும்புச்சத்து கொண்ட மிகவும் சத்துவாய்ந்த சிறு தானியம் ராகி ஆகும். குழந்தையின் எடை உயர கொடுக்கவேண்டிய முக்கிய உணவு இதுவே ஆகும். நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து, கனிமச்சத்து மற்றும் உயிர்ச்சத்து கொண்டது. எளிதில் செரிமானம் அடையாக கூடியது. இதயத்தை பலப்படுத்துவதோடு அல்லாமல் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கவல்லது.
3. உலர் பழங்கள்

நம் முன்னோர் காலத்தில் இருந்தே, உலர் பழங்களை, அதுவும் பாதாம் பருப்புகளை குழந்தைகளுக்கு காலையில் தருவது மரபாகும். உடம்பின் சூட்டை அதிகரித்து, நோயையும் பாதிப்புகளையும் தள்ளி வைக்கும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி இவை. தேவையான கொழுப்புச்சத்து, புரதச்சத்து நார்ச்சத்து, வைட்டமின் E மற்றும் செலினியம் நிறைந்த பாதாம் பருப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க வல்லது. குழந்தையின் மூளையை வளர்க்கபாதாமின் புரதச்சத்து மிகவும் உதவுபவை.
அதே போல, வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலின் கொழுப்பை குறைப்பதோடு தூக்கத்தையும் வரவழைக்கும். மூளையின் முன்னேற்றத்தை வளர்ப்பதால் இதனை மூளைக்கான உணவு என்றும் அழைப்பார்கள். இதர உலர் பழங்களான பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் பேரீட்சை பழங்களும் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உதவும்.
4. ஃபாக்ஸ்நட்

வளரும் குழந்தைகளுக்கு நிறைய நன்மைகளை ஃபாக்ஸ்நட் தரக்கூடியது. 100 கிராம் ஃபாக்ஸ்நட்டில் 350 கலோரியும் 1 அவுன்ஸில் 5 கிராம் புரதச்சத்தும் கொண்டது. குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். நிறைய நார்ச்சத்து கொண்ட இந்த ஃபாக்ஸ்நட் பசியை அதிகரிக்கும். எலும்பை பலப்படுத்தும் சுண்ணாம்புச்சத்து நிரம்பக்கொண்டது.
5. சர்க்கரைவள்ளி கிழங்கு

பொட்டாசியம், வைட்டமின் A மற்றும் பீட்டா கரோடின் கொண்டது சர்க்கரைவள்ளி கிழங்குகள். குழந்தைகளுக்கு சுவையான காலை உணவாகத் தரலாம். இதில் வைட்டமின் E, சுண்ணாம்புச்சத்து மற்றும் போலேட் உள்ளது. கனிமச்சத்து இருந்தால் உடல் இயக்கங்கள் செவ்வனே நடக்கும். குழந்தையின் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்தது.
பட மூலம் – பிக்ஸாபே.காம், மேலுகா.நவ், பிட்னெஸ்ப்லாக்.நோ, பிக்ஸ்ஹியர்.காம், விக்கிமீடியா.காம்
Writer. Nithya Lakshmi
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3IvMK3d
Comments