வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்
- 1stopview Vasanth
- Dec 2, 2022
- 1 min read
வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்
By Satheesh
வயிற்று வலி ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளன. கெட்டுப்போன உணவை உண்பது அதிகப்படியான உணவை உண்பது, சூடு, வாய்வு தொல்லை போன்ற பல காரணம் உண்டு. வயிற்று வலி வந்த உடன் சில கை மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் வலி குறையும். அந்த வகையில் வயிற்று வலி போக்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1 : ஒரு டம்பளர் நீரை நன்கு கொதிக்க வைத்து பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்கும் பதத்திற்கு நீரை ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.
குறிப்பு 2: முருங்கை இலையில் இருந்து சாறு பிழிந்து அதோடு 50கிராம் நற்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்

குறிப்பு 3: உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வந்தால் தீராத வயிற்று எரிச்சல் குணமாகும்.
குறிப்பு 4: சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு அதை வறுத்து பின் அதோடு 100 கிராம் கற்கண்டு சேர்த்து மூன்று வேலையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

குறிப்பு 5: வெந்தயத்தை நெய்யோடு சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து பின் அதை மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்
Comments