வயிற்று புற்றுநோயின் காரணம் மற்றும் அறிகுறிகள்
தற்போதைய காலகட்டத்தில், வயிற்று புற்றுநோய் மிகவும் பரவலாக காணப்படும் உயிரை பறிக்க வல்ல நோயாகும். மரபு சார்ந்த காரணம் அல்லாமல், தவறான வாழ்க்கை பழக்கம், ஒழுங்கற்ற உண்ணும் பழக்கம் ஆகியவையே வயிற்று புற்றுநோயின் முக்கிய காரணங்கள். பெண்களை விட ஆண்களையே வயிற்று புற்றுநோய் அதிகம் தாக்குகின்றன. வயிற்று புற்றுநோயை இரைப்பை புற்றுநோய் எனவும் கூறுவர். ஒழுங்கற்ற அணுக்கள் ஒரு இடத்தில தங்கி அங்கே இருந்து பரவுவதே இந்நோயாகும். வயிற்றின் உட்பகுதியில் ஆரம்பித்து, குடல், கல்லீரல் மற்றும் உணவு குழாய் போன்ற பகுதிகளுக்கும் இது மெல்ல பரவும். பெரும்பாலும் வயிற்று புற்றுநோய் ஒரு கட்டியாக இருக்கும். மூன்று வகையான வயிற்று புற்றுநோய் இருக்கிறது – நிணநீர் புற்றுநோய், இரைப்பை குடல் கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டி. இதில் புற்றுநோய் கட்டி பெரும்பாலும் இருப்பதில்லை.
Table of Contents
வயிற்று புற்றுநோய் எதனால் ஏற்படுகின்றது?
1.எச்.பைலொரி தொற்று
2.அதிகப்படி புகை பிடித்தல் மற்றும் குடித்தல்
3.அதீத உடல் எடை
4.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்
வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள்
1.வயிற்று வலி மற்றும் பசியின்மை
2.வயிற்றில் வீக்கம்
3.பலவீனம், சோர்வு மற்றும் ரத்தசோகை
4.கருப்பு நிற மலம்
வயிற்று புற்றுநோய் எதனால் ஏற்படுகின்றது?
வயிற்று புற்றுநோய்க்கு குறிப்பிட்ட கரணம் எதுவுமில்லை என்றாலும், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் வயிற்று புற்றுநோய் ஏற்படலாம். அந்த காரணங்களை இங்கே காணலாம்:
1.எச்.பைலொரி தொற்று
இந்த தொற்றின் காரணி ஹெலிகோபாக்டர் பைலொரி என்னும் ஒருவகை நுண்ணுயிரி. இது வயிற்றின் பிசுபிசுப்பான பகுதியில் தாங்கும். இது வயிறில் நெடு நாட்கள் தங்கினால், தொற்று ஏற்பட்டு வீக்கம் மற்றும் புண் ஏற்படும். இது நாளடைவில் புற்றுநோயாக மாறும்.
2.அதிகப்படி புகை பிடித்தல் மற்றும் குடித்தல்
அதிகமாக புகை பிடிப்பவர்கள் அல்லது மது அருந்துபவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
3.அதீத உடல் எடை
சில ஆய்வுகளின் படி வயிற்றை சுற்றி சேரும் அதிக கொழுப்பு மற்ற நோய்களுடன் வயிற்று புற்றுநோயாகவும் மாற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இது தான் முக்கிய காரணம் என்று நிரூபிக்க படவில்லை என்றாலும், அதீத உடல் எடை பல்வேறு நோய்களை உண்டாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
4.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்
அதிகப்படி காரம் மற்றும் உப்பு சேர்த்த உணவு பொருட்களை தினமும் உண்டு வந்தால் வயிற்று புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அதிக மசாலா தடவிய மீன் மற்றும் கோழி உண்பதால் கூட வயிற்று புற்றுநோய் வரலாம்.
வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள்
பல நேரங்களில், வயிற்று புற்றுநோய் பெரிதாக தெரியாத காரணத்தினால் வெளியே தென்படுவதில்லை. ஒருவர் நோயின் அறிகுறிகளை அறியும் முன் புற்றுநோய் முற்றிய நிலைக்கு சென்று விடுகிறது.
வயிற்று புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் இவை:
1.வயிற்று வலி மற்றும் பசியின்மை
அடிக்கடி வயிற்று வழியால் அவதிப்பட்டாலோ பசியின்மை ஏற்பட்டாலோ பிரச்சனை இருக்கிறது என்று பொருள். உடனடியாக மருத்துவரை அணுகவும்.
2.வயிற்றில் வீக்கம்
உண்ட பிறகு வயிறில் வீக்கம் ஏற்படுதல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிறில் நீர் தங்குவது மாதிரி தோன்றினால், அது முற்றிய நிலை புற்றுநோயாக இருக்கலாம்.
3.பலவீனம், சோர்வு மற்றும் ரத்தசோகை
வயிற்று புற்றுநோயால் அவதி படுபவர்கள் பலவீனம் மற்றும் சோர்வினாலும் அவதியுறுவர். இதனால் உடலின் ரத்த அளவு குறைய வாய்ப்புண்டு.
4.கருப்பு நிற மலம்
முற்றிய நிலை புற்றுநோய் இருக்கும் பொழுது, ரத்தம் வெளியேறுவதால் கருப்பு நிற மலம் வெளியேறலாம்.
மேற்கண்ட எந்த அறிகுறி உங்களுக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். வயிற்று புற்றுநோயை தவிர்க்க சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மேற்கொள்ளுதல், சரியான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்தல்.
பட மூலம்: பிக்ஸாபே, விக்கிமீடியா காமன்ஸ், பிக்ஸ்ஹியர், லிப்ர்ஷாட்.காம்
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3uOO7ls
Comments