top of page

விரல்களில் முத்திரைகளை செய்வதால் இத்தனை நன்மைகளா !!


உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது. ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு. கை விரல்களினால் செய்யப்படும் முத்திரைகள் குறித்து பல்வேறு புராதனமான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தில் இருக்கும் ஐந்து மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே மனித உடலிலும் உள்ளன.

மனித உடல், மனம் ஆகியவற்றை இயக்கவும் செய்கின்றன. உடல், மன நலத்திற்கு இந்த அய்ந்து மூலகங்களும் சீரான அளவில் இருத்தல் இன்றியமையாததாகும்.


மனித உடலின் ஒவ்வொரு விரலோடும் ஒவ்வொரு மூலகம் தொடர்புடையது. பெருவிரல் - நெருப்பு, சுட்டு விரல் - காற்று, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், நீர் - சிறு விரல். குறிப்பிட்ட விரல்களை குறிப்பிட்ட முறைகளில் சேர்க்கும் பொழுது அவ்விரல்களோடு தொடர்புடைய மூலகத்தின் இயக்கம் சீராகிறது.


ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது.

நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது. இருதயத்தின் செயல்பாடுகளைச் சீராக்குகிறது. மூளையில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. பிராண ஆற்றலை வளர்க்கிறது. சருமத்தைப் பாதுகாக்கிறது. சீரண இயக்கத்தை சரி செய்கிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது. அமைதியின்மையைப் போக்குகிறது.


முகுள முத்திரை செய்வதால் உண்டாகும் பலன்கள் !!


உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் முகுள முத்திரையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம். பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே முகுள முத்திரையின் தத்துவமாகும்.

செய்முறை: வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடிக்க வேண்டும்.


நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனசக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

பலன்கள்: நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.


வாயு முத்திரையை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?


வாயு முத்திரையை தினமும் 15 நிமிடங்கள் இம்முத்திரையை கடைப்பிடித்தால் தூக்கம் வரவில்லை என்று இனி புலம்ப மாட்டீர்கள். காதில் இரைச்சல் குறைந்து நல்ல தூக்கம் வரும். பெருங்குடலில் வாயு சேர்வதைத் தடுக்கும். பக்கவாத நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும். ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும். இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது.

ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கனுவைத் தொடவேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். பலன்கள்: இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. உட்கார்ந்திருக்கும்போது, நிற்கும்போது அல்லது படுக்கும்போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.


45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்ய முடியும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும். ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும்.


Thanks to Sources.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/there-are-so-many-benefits-of-making-mudras-on-fingers-122082600076_1.html

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-doing-vayu-mudra-122082600037_1.html

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page