top of page

வாய் துர்நாற்றத்தை அகற்ற 7 பயனுள்ள முறைகள்


ree

7 effective ways to eliminate mouth odor in tamil

Writer. Subhashni Venkatesh


ஒரு பார்ட்டியில், அழகான தோற்றமுடைய ஒருவரை சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் உங்களிடம் பேச வாயை திறக்கும் பொழுது கெட்ட சுவாசம் வீசுகிறது என்றால் உங்களுக்கு எப்பிடி இருக்கும்?? வாய் துர்நாற்றம் மற்றும் சுகாதார முறையில பராமரிப்பற்ற பற்கள் மோசமான பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். நம் வாழ்வில் ஒரு முறையேனும் வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப் பட்டிருப்போம். இது வெட்கப்படவேண்டிய விஷயமில்லை. சில சமயங்களில் நமக்கு அறியாமலேயே நம் வாயிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், சிலர் நம் அருகில் வந்து பேசுவதை தவிர்த்திருக்கலாம். இதற்கு நாமே நம்மை சோதித்துக்கொள்ள ஒரு சிறிய வழி இருக்கிறது. உங்கள் மணிக்கட்டை நாக்கால்,லேசாக நக்கி, சரியாக 10 நொடிகளில் அவ்விடத்தை முகர்ந்து பார்க்கவும். நீங்கள் நாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் வாய்துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது நிச்சயம். இதனால் கவலைப்பட தேவையில்லை. சில எளிமையான முறைகளை பின்பற்றுவதன் மூலம் இதனிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

Table of Contents

1.பற்களின் சுகாதாரம் மிக அவசியம்


ree

தினசரி இருமுறை பல் துலக்குதல், நிறைய நீர் அருந்துதல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல்மருத்துவரிடம் பற்களை சோதனை செய்தல் வேண்டும். சிலர் வருடக்கணக்கில் பல்துலக்கும் பிரஷை மாற்றாமல் இருப்பார்கள். சேதமடைந்த பிரஷ் முட்களால் பற்களை சரிவர சுத்தம் செய்ய இயலாது. இதுவும் வாய் துர்நாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


தயிர் சாப்பிடுங்கள்


ree

தயிர் அல்லது இனிப்பில்லாத யோகர்ட் உண்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அது வாயில் ஏற்படும் ஹைட்ரஜன் சல்பைட் உற்பத்தியை குறைக்கிறது. வாயில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு இக்கலவையே காரணமாகும்.


பெருஞ்சீரகம் உண்ணுங்கள்


ree

பெருஞ்சீரகம் ஒரு இயற்கை நறுமணம் அளிக்கும் வாய் ஃபிரஷனர் ஆகும். பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை பெருஞ்சீரகத்தில் இருப்பதால், வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. அதை அப்படியே வாயில் போட்டு மென்று உண்ணலாம். அல்லது தேநீரில் சேர்த்தும் அருந்தலாம்.


இலவங்கப்பட்டை


ree

இதில் உள்ள சினிமிக் அல்டிஹைட்ஸ் எண்ணெய், வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது. ஒரு மேஜைக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி, ஏலக்காய், பிரிஞ்சி இலை மூன்றையும், நீரில் நன்கு கொதிக்கவைத்து, அந்த நீரினால் வாயை கொப்புளிக்கவும். மாற்றம் தரும் புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்.


சிட்ரஸ் பழங்கள்


ree

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உண்ணும் பொழுது, அவை வாயில் அதிகமான உமிழ் நீர் சுரக்க உதவி செய்து வறண்ட தன்மையை குறைக்கிறது. எலுமிச்சையின் அமிலத்தன்மை பாக்டீரியா உண்டாவதை தடுக்கிறது. ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நீரில் கலந்து வாயை கொப்புளிக்கவும்.


கிராம்பு


ree

கிராம்பின் பாக்டிரீயா எதிர்ப்புத்தன்மை வாய் துர்நாற்றத்தை நிமிடங்களில் நீக்குகிறது. பெருஞ்சீரகத்தை போல கிராம்பையும் நம் உணவிலோ, தேநீரிலோ சேர்த்து உபயோகிக்கலாம்.


பச்சை கொத்தமல்லி


ree

பச்சை கொத்தமல்லியை வாயில் போட்டு மெல்வது மற்றொரு வீட்டு சிகிச்சையாகும். அதில் உள்ள க்ளோரோபில் என்னும் பச்சையம, வாயில் வீசும் கெட்ட சுவாசத்தை அகத்ற்றுகிறது. பச்சை கொத்தமல்லி இலைகளை அப்பிடியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது சாறு எடுத்து குடிக்கலாம்.


Thanks to Sources.

Credited to https://bit.ly/3VYcQQ1


 
 
 

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page