மூட்டு வலி நீங்க சித்த மருத்துவம்
- 1stopview Vasanth
- Dec 2, 2022
- 1 min read
மூட்டு வலி நீங்க சித்த மருத்துவம்
By Satheesh-
50 வயதை கடந்த பெரும்பாலானோருக்கு மூட்டு வலி என்பது மிக சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் ஆகி விட்டது. எலும்பு தேய்மானமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முற்காலத்தை போல அல்லாமல் நமது உணவு பழக்கத்தில் இப்போது பல மாறுதல்கள் உள்ளதாலேயே இது போன்ற நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. சித்த மருத்துவம் மூலம் மூட்டு வலியில் இருந்து விடுபட சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

குறிப்பு 1 சிறிதளவு கறுப்பு எள்ளை கால் டம்பளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
குறிப்பு 2 மூட்டு வலி உடனடியாக குறைய தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து பின் வெதுவெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்தால் உடனே வலி குறையும்.
குறிப்பு 3 எலுமிச்சை சாறு விட்டு சுக்கை நன்கு அரைத்து அதில் பத்து போட்டால் மூட்டு வலி குறையும்.
குறிப்பு 4 வேப்பம் பூ, வாகைப் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை உலர்த்தி பின் பொடி செய்து அரை ஸ்பூன் உண்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
குறிப்பு 5 கடுகு, சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து சூடு படுத்தி பின் அதில் சிறிது கற்பூரம் கலந்து வெது வெதுப்பாக வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை குறையும்.

இஞ்சி, மஞ்சள், வெங்காயம், ஆரஞ்சு, செர்ரி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு வலி குறையும்.
Comments