மூட்டு வலிக்கான 5 பயனுள்ள வீட்டு சிகிச்சை முறைகள்
நடுத்தர வயதில் ஒருவரால் எந்த வலியுமின்றி, யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க முடிகிறதென்றால் அவர் நிஜமாகவே பாக்கியசாலி எனலாம். மூட்டு வலி நம் வாழ்வை பரிதாபமிக்கதாக்கும் பொழுது தான் அதை நாம் உணர்கிறோம். அதற்கான வலி நிவாரண மாத்திரைகள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், இயற்கை முறையில் நிவாரணம் கிடைத்தால் நல்லது தானே?
இதோ பெட்டர் பட்டர் உங்களுக்காக மூட்டு வலியை குறைக்கக் கூடிய எளிமையான, எந்த பக்க விளைவும் அளிக்காத வீட்டு சிகிச்சை முறைகளை உங்களுக்கு அளிக்கிறது:
Table of Contents
1. உங்களுக்கான சூடான திண்டு உங்கள் தயாரிப்பில்
2. வீட்டில் செய்யப்படும் கேப்சாய்சின் களிம்பு
3. அழுக்கு, பிசுக்கு படிந்த பாத்திரங்களை கழுவவும்
4. சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடம்
5. கெமோமில் தேநீர் ஒத்தடம்
1. உங்களுக்கான சூடான திண்டு உங்கள் தயாரிப்பில்
இரண்டு பருத்தி காலுறைகளை (SOCKS) அரிசியைக் கொண்டு நிரப்பவும். காலுறையை கட்டவும். 2-3 நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் பொழுது வலி உள்ள பகுதியில் அதைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். லாவண்டர் போன்ற வாசனை தரும் மூலிகை மலர்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே நறுமணமுடைய அரோமாதெரப்பியின் பயனை அடையலாம்!
2. வீட்டில் செய்யப்படும் கேப்சாய்சின் களிம்பு
நீண்ட காலமாக பழக்க வழக்கத்தில் உள்ள ஒரு வீட்டு சிகிச்சை இது. P கலவையை குறைத்து, வலிக்கான சமிக்ஞை, மூளையை சென்றடையாமல் தடுக்கிறது. நாம் வலி நிவாரண மாத்திரைகளை உண்ணும் பொழுது, மெய்யாக வலி போவதில்லை. ஆனால் வலிக்கான சமிக்ஞை மூளைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டதால் வலியை நாம் உணர்வதில்லை. இந்த கேப்சாய்சின் களிம்பு செய்வதற்கு, சில மிளகாய் வற்றலை எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் 2-3 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து களிம்பு உண்டாக்கலாம். இந்த களிம்பை உங்கள் மூட்டுகளில் தடவுங்கள். தொடக்கத்தில் இது மிகுந்த எரிச்சலைக் கொடுக்கும். ஆனால் ஒரு வாரத்தில் பழகி போகும். தினமும் 4-5 முறை இவ்வாறு செய்வது மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
3. அழுக்கு, பிசுக்கு படிந்த பாத்திரங்களை கழுவவும்
இது சற்றும் சம்பந்தமில்லாத பைத்தியக்கார யோசனையாக தோன்றுகிறதா? ஆனால் உங்கள் கை, மூட்டு மற்றும் விரல்களில் வலி இருக்கும் பட்சத்தில் இது நல்ல தீர்வாகும். உங்கள் கை விரல்களை சுடு நீரில் அமிழ்த்தும் பொழுது, உங்கள் கை தசைகளும் மூட்டுகளும் தளர்த்தப்பட்டு நீங்கள் பாத்திரங்களை தேய்க்கும் பொழுது உங்கள் கைகள் மற்றும் விரல்கள் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்படைகின்றன.
4. சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடம்
இதற்கு உங்களுக்கு இரண்டு கிண்ணங்கள் தேவை. ஒன்றில் ஜில்லென்ற ஐஸ் நீர், மற்றொன்றில் சூடான நீர் எடுத்துக் கொள்ளவும். சூடான தண்ணீரானது நீங்கள் தொட முடியாத அளவிற்கு சூடாக இருக்கக் கூடாது. முதலில் குளிர்ந்த நீரில் தொடங்கவும். பாதிக்கப்பட்ட பகுதியை முதலில் ஒரு நிமிடத்திற்கு குளிர்ந்த நீரில் அமிழ்த்தி பின் 30 வினாடிகள் சூடான நீரில் அமிழ்த்தவும். இதை 15 நிமிடங்கள் தொடர்ந்து செய்யவும். இது மூட்டுகளில் உள்ள வீக்கத்தையும், இறுக்கத்தையும் குறைக்க உதவும்.
5. கெமோமில் தேநீர் ஒத்தடம்
கெமோமில் தேநீரில் உள்ள அழற்சி நீக்கும் தன்மை மூட்டு வலிகளை நீக்க மிகவும் உதவுகிறது. 20 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் 4 கெமோமில் தேநீர் பைகளை அமிழ்த்தி மூடி வைக்கவும். பின் தேநீர் பைகளை பிழிந்து விடவும். ஒரு சுத்தமான துணியை சூடான தேநீரில் முக்கி எடுத்து லேசாக பிழிந்து வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து அழுத்தவும்.
மேற்கூறிய சிகிச்சை முறைகள் பயனளிக்கவில்லை எனில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
Image Source: instructable,austin pace,reader digest,medium, medical news today
Writer. Subhashni Venkatesh
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3vY0HQ1
Comments