top of page

முடி உதிர்வதை நிறுத்த 5 சூப்பர் உணவுகள்



ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் காலையில் நீங்கள் கண் விழிக்கும் பொழுது உங்கள் தலையணையில் முடி உதிர்ந்து இருப்பதை கண்டு அப்படியே என்றாவது கவலையில் உறைந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? தினசரி குறைந்தது 100 முடி உதிர்வது சகஜம் என்றாலும், அதைவிட அதிக எண்ணிக்கை முடி உதிர்ந்தால், எச்சரிக்கையுடன் ஏதாவது அதற்கு செய்தாக வேண்டும். அதிர்ஷ்டவசமாக, உங்கள் உணவு முறையில் சில சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் இப்பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். சூப்பர் உணவு என கூறப்படும் சில உணவுகள் இதற்கு மிகவும் உதவுகின்றன. உங்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடிய ஆற்றல் உடைய 5 சூப்பர் உணவுகள் என்ன என்று பார்ப்போம்:

Table of Contents

1. நட்ஸ்

2. சீமைத் திணை / கியினோ

3. முட்டை மற்றும் பால் பொருட்கள்

4. பசலைக் கீரை

5 .ஸ்ட்ராபெர்ரி


1. நட்ஸ்



பாதாம் மற்றும் வால்நட்களில் பயோட்டின், ஒமேகா – 3, 6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B யுடன் கூடிய புரதம், மாக்நீசியம் போன்ற சத்துக்கள் புதையுண்டு இருக்கின்றன. இச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் கேசம் வலுவடைய உதவுகின்றன. உங்கள் உணவில் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சேர்த்துக் கொண்டால் குறுக்கிய காலத்திலேயே உங்கள் கூந்தல் வலுப் பெற்று நீண்டு வளர்வதை காணலாம்.

2. சீமைத் திணை / கியினோ



அனைத்து 9 வகை அமினோ அமிலங்களும் நிறைந்துள்ள சீமைத் திணை / கியினோ ஒரு தானியம் கிடையாது. இது ஒருவித விதையாகும். உங்கள் கேசத்திற்கு மட்டும் இல்லாமல், உங்கள் தலைக்கும் நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதில் நிறைந்துள்ள நீரோடை புரதங்கள் உங்கள் முடி நுனி விரிசல் அடையாமல் தடுத்து அதில் உள்ள வைட்டமின் E முடி உதிர்வதை தடுக்கிறது.

3. முட்டை மற்றும் பால் பொருட்கள்



புரதங்கள் நிறைந்துள்ள இந்த சூப்பர் உணவானத்து உங்கள் கேசத்தின் அடர்த்தி மற்றும் வலிமை இரண்டையும் பாதுகாக்கிறது. வைட்டமின் B 12, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் (zinc) போன்ற ஊட்டச்சத்துக்கள் தயிர், பால், முட்டையில் இருக்கின்றன. இவை அனைத்தும் போதாதென்றால், உங்கள் முடி உதிர்வதை தடுக்கும் பையோடின் பால் பொருட்களில் நிறைந்துள்ளன.

4. பசலைக் கீரை



விட்டமின்கள், இரும்புச்சத்து, மாக்நீசியம், துத்தநாகம்(zinc), , ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்தது இந்த பசலைக் கீரை. இவை அனைத்துமே ஆரோக்கிய கூந்தலுக்கு மிகவும் தேவையானவை. மேலும் முடி உதிர்வதை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன.

5. ஸ்ட்ராபெர்ரி



உணவில் முக்கியமாக ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக்கொள்வதன் அவசியம் என்னெவென்றால் முடி மெல்லியதாக மாறுவதை இது தடுக்கிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்துள்ள அசெடிக் அமிலம் முடி வேர்களுக்கு சக்தியை அளிப்பதால், அவை அறுந்து போவதில்லை. மேலும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் போலிக் அமிலம், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B5 உள்ளன.


இந்த சூப்பர் உணவுகள் அனைத்தும் சுவையானவை மட்டும் அல்ல, மிக்க ஆரோக்யமானவையும் கூட!

Image Source: Alison pantry, Amazon.com, Good decisions, Good housekeeping, The new daily.


Subhashni Venkatesh


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3GrOw2u

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page