top of page

முடி உதிர்தல் மற்றும் நரை முடி பிரச்சனைக்கு இந்த ஒரு பொருள் போதும்



  • நரை முடி பிரச்சனைக்கு இதோ நிரந்தர தீர்வு.

  • சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இந்த ஒரு பொருள் போதும்.

  • அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் தீர்வு.

நரை முடி மற்றும் முடி உதிர்தல் என்பது இன்றைய காலத்தில் அனைவரின் பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது, அதன்படி நாம் உண்ணும் உணவு மற்றும் நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர் தங்களின் நரை முடி பிரச்சனையை மறைக்க கெமிக்கல் டை பயன்படுத்துகின்றனர், இதன் மூலம் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கலாம், ஆனால் அதன் பக்க விளைவு ஏராளம். இந்த காரணத்திற்காகவே, ஒரு சிலர் வெள்ளை முடியை பற்றி கவலைக் கொள்ளலாமல் ரசாயன வண்ணங்களிலிருந்து விலகி இருக்கிறார்கள். இனி இந்த கவலை வேண்டாம், கருப்பு எள் இயற்கையாகவே முடியை கருமையாக்கவும், பொடுகு பிரச்சனையை நீக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் செயல்படுகிறது. ஆம், கறுப்பு எள் முடி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை தருவது மட்டுமின்றி, எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

கருப்பு எள் சத்துக்களின் சுரங்கம்:

கருப்பு எள் பொதுவாக அடிக்கடி சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப் பொருளாகும். ஆனால் இதைப் பயன்படுத்தினால் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாறும் என்பது பலருக்குத் தெரியாது. கருப்பு எள்ளில் ஒமேகா-3 மற்றும் 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலின் கொலாஜனை அதிகரிக்கின்றன. அத்தடன் இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. மேலும் முடி உதிர்வதைத் தடுக்கவும், இயற்கையான முறையில் முடியை கருமையாக்கவும் இது உதவுகிறது. முடிக்கு கருப்பு எள்ளை எவ்வாறு பயன்படுத்துவது?

முதலில் கருப்பு எள்ளை நன்கு காய வைத்துக் கொள்ளவும். அதன்பின் இதை அரைக்கவும். பின் அதனுடன் வெங்காய சாறு மற்றும் கற்றாழை சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முடியை கழுவவும். இப்படி மாதம் மூன்று முதல் நான்கு முறை செய்து வந்தால் வெள்ளை முடி படிப்படியாக குறையத் தொடங்கும்.

கருப்பு எள் கூந்தலுக்கு எவ்வாறு நன்மை பயக்கும்?

கருப்பு எள் பேஸ்ட்டை தலைமுடியில் தடவினால் முடியின் வேர்கள் வலுவடையும். அத்துடன் இது முடி உதிர்வை குறைக்கிறது. அதுமட்டுமின்றி தலைமுடியில் ஏற்படும் தொற்று பிரச்சனையும் இது நீக்க உதவும். அதேபோல் கருப்பு எள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது இதனால் இது குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும்.


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3vrcBkY

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page