top of page

முகப்பரு நீங்க கை வைத்தியம்

முகப்பரு நீங்க கை வைத்தியம்

Mugapparu-neenga


இந்த கால இளஞ்சர்கள் பலருக்கும் முகப்பரு என்பது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாக உள்ளது. இளமை காலத்தில் ஒரு வித ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால் பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும். இதன் காரணமாக தூசிகள் எளிதில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய் சுரக்கும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பினால் தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணெய் பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாகிறது. இப்படி தான் முகப்பரு வருகிறது. முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.


Mugapparu

ree

குறிப்பு 1 :

சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.


குறிப்பு 2 :

வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும்.


Neem

ree

குறிப்பு 3 :

பாசிப்பயிறு மாவில் எலுமிச்சை சாறு கலந்து அதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.


குறிப்பு 4 :

கடலை மாவோடு சந்தனப்பொடி, தயிர் மற்றும் எழுமிச்சை சாறை சேர்த்து குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும்.


Curd (Thayir)

ree

குறிப்பு 5 :

தினமும் நன்கு வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் உள்ள அழுக்குகள் வியர்வையோடு சேர்ந்து வெளியில் வரும். இதனால் முகப்பரு நீங்கும்.


அடிக்கடி முகம் கழுவுதல், எண்ணெய் அதிகள் உள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் முகப்பரு வாராமல் தடுக்கலாம்.


Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page