முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அழகு குறிப்புகள் !!
![](https://static.wixstatic.com/media/79b069_1e6d32fd087248fd997d23fd67599868~mv2.png/v1/fill/w_606,h_340,al_c,q_85,enc_auto/79b069_1e6d32fd087248fd997d23fd67599868~mv2.png)
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொழிவுடன் காணப்படும்.
பாதாம் எண்ணெய்யிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
பப்பாளி முகத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.பப்பாளி துண்டுகளை நன்கு மசித்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சிடும்.
தோலில் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப்பருக்கள் ஆகியவற்றை நீக்க வேம்பை பயன்படுத்துவது நல்லது. வேம்பின் இலையை அரைத்து சோப் போல பயன்படுத்தலாம். வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுயிற்களை அழித்து முகம் பொலிவாக இருக்கும். முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கவும் உதவும். சுருக்கங்களை நீக்கவும் வேம்பில் சக்தி உள்ளது.
தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதடு மற்றும் கன்னத்தை சுற்றி தடவி வர கருமை நீங்க சிறந்தது. லெமன் ஜுஸ் & ரோஸ் வாட்டர் சேர்த்து தடவி 10 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.
முகத்தில் படிந்துள்ள அழுக்கை நீக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!
![](https://static.wixstatic.com/media/79b069_9939351700fd408c81b5d6ee79bd7fb8~mv2.png/v1/fill/w_602,h_338,al_c,q_85,enc_auto/79b069_9939351700fd408c81b5d6ee79bd7fb8~mv2.png)
தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.
குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போடலாம். இதனால் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும்.
எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.
இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெய்யை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
முகப்பரு வாராமல் தடுப்பதற்கான அழகு குறிப்புகள் !!
![](https://static.wixstatic.com/media/79b069_cfe590a0bcb64a7983cfbd5b420d76e0~mv2.png/v1/fill/w_600,h_335,al_c,q_85,enc_auto/79b069_cfe590a0bcb64a7983cfbd5b420d76e0~mv2.png)
பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும். இதன் காரணமாக தூசிகள் எளிதில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய் சுரக்கும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பினால் தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணெய் பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாகிறது. இப்படி தான் முகப்பரு வருகிறது.
சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும்.
பாசிப்பயிறு மாவில் எலுமிச்சை சாறு கலந்து அதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
கடலை மாவோடு சந்தனப்பொடி, தயிர் மற்றும் எழுமிச்சை சாறை சேர்த்து குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும்.
தினமும் நன்கு வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் உள்ள அழுக்குகள் வியர்வையோடு சேர்ந்து வெளியில் வரும். இதனால் முகப்பரு நீங்கும்.
அடிக்கடி முகம் கழுவுதல், எண்ணெய் அதிகள் உள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் முகப்பரு வாராமல் தடுக்கலாம்.
Thanks to Sources.
https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/some-beauty-tips-to-prevent-acne-122062400049_1.html
Comments