முகத்தை ஒல்லியாக்க செய்யவேண்டிய பயிற்சிகள்
- 1stopview Vasanth
- Dec 15, 2022
- 2 min read

do these exercises to get a slimmer face in tamil
Writer. Subhashni Venkatesh
உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க விரும்புபவரா நீங்கள்? உங்களின் இரட்டை தாடை அல்லது அதிகப்படியான தசை உங்கள் முக அழகை கெடுக்கிறதா? கவலைப்பட வேண்டாம். குறைந்த கலோரி உணவை உண்பதுடன் முறையான பயிற்சிகள் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களை உங்கள் முகத்தில் தரும். உங்கள் உடல் முழுவதற்கும் ஏகப்பட்ட உடல் பயிற்சிகள் இருப்பது போல், உங்கள் முகத்தின் தசைகளுக்கும் பிரத்யேகமான பயிற்சிகள் உள்ளன. அந்த பயிற்சிகள் உங்கள் கழுத்தை சுற்றியுள்ள தசைகள், தாடை மற்றும் கன்னத்திலுள்ள தசைகளை தளர்த்துகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை பின்பற்றினால் ஒல்லியான முகத்தை பெறலாம்.
Table of Contents
1.கைகள் மற்றும் தாடை

உங்கள் கை விரல்களை மடக்கி தாடையில் வைத்து மேல் நோக்கி அழுத்தவும்.
உங்கள் நாக்கை, கீழ் வரிசை பற்களின் அடியே வைத்து உங்கள் கைகள் கொடுக்கும் அழுத்தத்திற்கு எதிராக கீழ் நோக்கி அழுத்தவும்.
20 லிருந்து 30 நொடிகள் அப்படியே வைத்திருந்து பின் விடுவிக்கவும்.
இது தாடை தசைகளை மினுமினுப்பாக்குகிறது.
சிறு இடைவேளைக்கு பிறகு இதை 5 லிருந்து 10 முறை செய்யவும்.
இந்த பயிற்சியை செய்வது எப்படி என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள கானொளியில் பாருங்கள்:
2.தாடையை உயர்த்தல்

உங்கள் கீழ் உதட்டை உபயோகப்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டு அறையின் கூரையை தொட வேண்டும் என்று கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.
நிமிர்ந்து நேராக நின்று, தலையை மேலே உயர்த்தவும்.
கீழ் உதட்டை பிதுக்கி மேலே கூரையை அடைய முயற்சி செய்யுங்கள்.
5-10 நொடிகள் அதே நிலையில் வைத்திருந்து பின் சாதாரண நிலைக்கு திரும்பவும்.
இதை 2-3 முறை சிறு இடைவெளியில் தொடரவும்.
இந்த பயிற்சியை செய்வது எப்படி என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள கானொளியில் பாருங்கள்:
3.X மற்றும் O எழுத்து பயிற்சிகள்

நீங்கள் தொலைகாட்சி பார்க்கும் பொழுது அல்லது சமைக்கும் பொழுது இந்த X மற்றும் O பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்.
உங்கள் வாயை அகலமாக திறந்து வைத்துக் கொண்டு X என்று சொல்லிக்கொண்டே உங்கள் முக தசைகளை அசைக்கவும். இதே முறையில் O எழுத்தையும் கூறவும்.
இதை 10 லிருந்து 20 முறை செய்யவும்.
ஒரு சிறு இடைவேளைக்கு பின் தொடரவும்.
இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள கானொளியில் காணுங்கள்:
4.பென்சில் பிடித்திருத்தல்

உங்கள் வாயில் ஒரு பென்சிலை வைத்து இறுக்கமாக பிடித்து கொள்ளுங்கள்.
உங்கள் பெயரை வாயால் காற்றில் எழுத முயற்சி செய்யுங்கள்.
இவ்வாறு செய்வதனால் உங்கள் தாடையை சுற்றியுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. அதன் மூலம் அங்குள்ள கொழுப்புகள் குறைக்கப் படுகிறது.
இப்பயிற்சியை குறைந்தது மூன்று நிமிடங்களுக்காவது செய்யவும்.
சிறு இடைவேளைக்கு பின் இதை தொடர்ந்து செய்யவும்.
இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள கானொளியில் காணுங்கள்:
5.காற்று நிரப்பிய வாய்

உங்கள் வாயினுள் முடிந்தவரை காற்றை உள்ளிழுத்து அதை பிடித்து வைத்திருக்கவும்.
உங்கள் கைகளைக் கொண்டு, வாயை காத்து வரை மூடுமாறு வைக்கவும்.
இப்பொழுது உங்கள் கண்களை கைகளைக் கொண்டு, உப்பிய வாயை எதிர்த்து அழுத்தவும்.
சில நொடிகள் அப்படியே வைத்திருந்து பின் சாதாரண நிலைக்கு திரும்பவும்.
இதை தொடர்ந்து செய்யவும்.
இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள கானொளியில் காணுங்கள்:
Thanks to Sources.
Credited to https://bit.ly/3FsKKFz
Comentários