புலங்களின்(ஹார்மோன்) மாறுபாடுகளைத் தவிர்க்க ஆறு உணவுகள்
![](https://static.wixstatic.com/media/79b069_3eb87347c0434226be6a5270c6f4e351~mv2.png/v1/fill/w_601,h_312,al_c,q_85,enc_auto/79b069_3eb87347c0434226be6a5270c6f4e351~mv2.png)
இன்றையை பரபரப்பான வாழ்க்கை, நிதிநிலை உடல் மற்றும் மனம் சார்ந்த அழுத்ததிற்கு காரணமாகிறது, மேலும் இந்த அழுத்தம் நம் உணவுப்பழக்கத்தை பெரிதும் பாதிக்கின்றது. நீண்ட நாட்களாக, மனஅழுத்தம் மற்றும் பதற்றம் கொண்டிருப்பது, உடல் நல பாதிப்பை உண்டாக்கி புலங்களில்(ஹார்மோன்) மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. இந்த மாறுபாடு ஆண்களில் டெஸ்டோஸ்டெரோன் பெண்களில் ஈஸ்ட்ரோஜென் ஒழுங்கில்லாமல் உற்பத்தியாக வழிவகுக்கிறது. அதனால், நம் பரபரப்பான வாழ்க்கையில் நமது உண்ணும் பழக்கத்தை கவனிப்பது மிகவும் முக்கியம், மேலும் நம் புலங்கள் சமநிலையில் வைக்க உதவும் உணவு திட்டப்படி சாப்பிடுங்கள். நீங்கள் அதற்கு உதவும் உணவுகள் என்ன என நினைக்கலாம்? அதற்கான விடை தேவையான புரதச்சத்துமிக்க உணவு, ஒமேகா த்ரீ மற்றும் ஒமேகா சிக்ஸ் கொழுப்பு அமிலங்கள், கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ள உணவே ஆகும்.
Table of Contents 1) நிறையத் தண்ணீர் குடிக்கவும்
2) அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்
3) ஃபிளாவனாய்டு அதிகம் உள்ள பழங்கள்
4) பச்சை, இலை காய்கள்
5) நார்ச்சத்து-மிகுந்த உணவு
6) அவகேடோ அல்லது வெண்ணெய் பழங்கள்
1) நிறையத் தண்ணீர் குடிக்கவும்
![](https://static.wixstatic.com/media/79b069_9751adbbfe7740e99d17317e441eab9e~mv2.png/v1/fill/w_707,h_491,al_c,q_85,enc_auto/79b069_9751adbbfe7740e99d17317e441eab9e~mv2.png)
சரியான அளவு நீர் அருந்துவது உடலை நீர் நிறைந்ததாக வைக்கவும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. மன அழுத்தம்தான் புலங்கள்(ஹார்மோன்) மாறுபாட்டிற்கு மிகப்பெரிய காரணமாகும் மேலும் ஒரு பெரிய அளவில், வெறுமனே தண்ணீர் குடிப்பதால், அதைக் கட்டுப்படுத்த முடியும்.
2) அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்
![](https://static.wixstatic.com/media/79b069_76d5529ffd3b44a687158d8a0737698a~mv2.png/v1/fill/w_715,h_519,al_c,q_90,enc_auto/79b069_76d5529ffd3b44a687158d8a0737698a~mv2.png)
புலங்கள்(ஹார்மோன்) சமநிலைக்கு, உணவு முறையில் அபரிமிதமான இயற்கை கொழுப்பு அமிலங்களை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் ஏராளமான பழங்கள், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் கிழங்கான் மீன், டிரௌட் மீன் மேலும் சூரை மீன் ஆகியவற்றை உண்ண வேண்டும். இந்த எல்லா உணவிலும் ஒமேகா த்ரீ இருக்கிறது அது நரம்பு மண்டலத்தை இருதயத்துடன் திடப்படுத்துகிறது. அதே சமயம், இதில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் உங்கள் உடம்பில் புலங்கள்(ஹார்மோன்) மாறுபாடுகளை தடுக்கிறது.
3) ஃபிளாவனாய்டு அதிகம் உள்ள பழங்கள்
![](https://static.wixstatic.com/media/79b069_ffeb58b7064948c98906b832197d1163~mv2.png/v1/fill/w_700,h_507,al_c,q_85,enc_auto/79b069_ffeb58b7064948c98906b832197d1163~mv2.png)
புலங்களை (ஹார்மோன்) சமநிலையில் வைத்திருக்க, ஃபிளாவனாய்டு அதிக அளவில் உள்ள பழங்களை கட்டாயம் உண்ண வேண்டும். ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், பேரிக்காய்கள், அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள், சிவப்பு திராட்சைகள், ஆப்பிள்கள் மற்றும் தர்பூசணிகள், இவற்றுடன் சேர்த்து அனைத்தும் ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ள ஆகாரங்கள்
4) பச்சை, இலை காய்கள்
![](https://static.wixstatic.com/media/79b069_75cb46c87d0e4fa98b1a2279c7bd9ab4~mv2.png/v1/fill/w_711,h_520,al_c,q_90,enc_auto/79b069_75cb46c87d0e4fa98b1a2279c7bd9ab4~mv2.png)
பச்சை, இலை காய்கள் சத்துள்ளது அதுமட்டுமல்ல உடலின் புலங்களை(ஹார்மோன்) சமநிலைபடுத்தவும் பராமரிக்கவும் மிகவும் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் பசலைக்கீரை, வெந்தயக்கீரை மற்றும் சாலட் இலைகள் போன்ற பச்சைக் காய்களை உங்கள் இரவு விருந்தின்போது சாப்பிடவும்.
5) நார்ச்சத்து-மிகுந்த உணவு
![](https://static.wixstatic.com/media/79b069_c10606b7f0474dda8ccfb539c779b7a8~mv2.png/v1/fill/w_715,h_534,al_c,q_90,enc_auto/79b069_c10606b7f0474dda8ccfb539c779b7a8~mv2.png)
அதிக நார்ச்சத்து கொண்ட உணவுமுறை, எப்பொழுதும் உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. புலங்களை(ஹார்மோன்) சமநிலையில் வைக்கவும் அது பயன்படுகிறது. முழு தானியங்கள் மற்றும் பருப்புகள், ஏராளமான காய்கள் மற்றும் எல்லா வகையான பழங்கள் ஆகியவை அதிக நார்ச்சத்து உள்ள உணவு. முளைகட்டிய பாசிப்பருப்பு, கொள்ளுப்பருப்பு மற்றும் வேர்க்கடலை போன்ற தானியங்களும் நார்ச்சத்திற்கு ஒரு நல்ல ஆதாரமாகும்.
6) அவகேடோ அல்லது வெண்ணெய் பழங்கள்
![](https://static.wixstatic.com/media/79b069_dbdb84e1f9134921963a49bc5a41d6a9~mv2.png/v1/fill/w_718,h_520,al_c,q_90,enc_auto/79b069_dbdb84e1f9134921963a49bc5a41d6a9~mv2.png)
நிரம்பாத கொழுப்பு, அதிகம் கொண்ட அவகேடோக்கள் உடல் சத்திற்கு ஒரு நல்ல ஆதாரம். இந்த பழங்கள் சத்துக்கள் நிறைந்ததாகவும், குறிப்பாக போலிக் அமிலம், மற்றும் நிறைய விட்டமின்கள் புலங்களை(ஹார்மோன்) சமநிலையில் பராமரிக்க முக்கியம் ஆகிறது. அதற்குள் ஸ்டெரோலும் இருக்கிறது, அது ஈஸ்ட்ரோஜென் புலங்கள்(ஹார்மோன்) மற்றும் புரோஜெஸ்டெரோன் மீது ஒரு சிறப்பு விளைவு தருகிறது- கருப்பை மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் புலங்கள்(ஹார்மோன்).
இதைப் படித்த பின், இதற்கு எதுவும் சிறப்பான முயற்சி தேவையில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் வார உணவில் இவை எல்லாவற்றையும் ஏதாவது ஒரு விதத்தில் வழக்கமாக சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றைப் பின்பற்றுவது உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைக்க நிச்சயம் உதவும்.
படத்தின் ஆதாரங்கள்: லிப்ரேஷாட், பப்ளிக்டொமைன்பிக்சர்ஸ், பிக்ஸாபே
Writer. Nithya Lakshmi
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3CuF911
Comments