top of page

பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க

Piles Cure: மூலநோய்க்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar


  • மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கும் என்பதால், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் நல்லதல்ல.

  • பால், பாலாடைக்கட்டி, தயிர் என உங்கள் தினசரி பால் உட்கொள்ளலைக் கண்காணித்து கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



மூலநோய் பைல்ஸ் அல்லது ஹெமோர்ஹாய்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஆசனவாய் மற்றும் மலப் பாதைகளைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுகிறது. பைல்ஸ் பிரச்சனை இருந்தால், மலக்குடலில் இருந்து ரத்தம் வந்து, குடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும். மூலநோய் என்பது பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நிலையாகும். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.


பைல்ஸ் பிரச்சனை உள்ளதா? தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்


சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்


நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் மலச்சிக்கலை (அதனால் மூலநோய்) மோசமாக்கலாம். ஆகையால் அவற்றை உட்கொள்ளும் அளவில் அதிகபட்ச கட்டுப்பாடு இருப்பது மிக நல்லது. அதிக நார்ச்சத்து கொண்ட தானியங்களை மட்டுமே உட்கொண்டால், பைல்ஸ் நோயாளிகள் நிலைமை மோசமாகாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.


பால் பொருட்கள்


மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கும் என்பதால், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் நல்லதல்ல. பால், பாலாடைக்கட்டி, தயிர் என உங்கள் தினசரி பால் உட்கொள்ளலைக் கண்காணித்து கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்


உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், உடனடியாக பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவும். துரித உணவை சாப்பிடுவதற்கான ஆசை அதிகமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே மலச்சிக்கல் அல்லது மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிக உப்பை உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகள்


இரும்புச்சத்து மலச்சிக்கலை உருவாக்கும் ஒரு அம்சம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், அதிகப்படியான இரும்புச்சத்து பைல்ஸ் பிரச்சனைகள் உள்ளவர்களின் உபாதையை அதிகரிக்கும். இருமல், சளி என நாம் உட்கொள்ளும் பல அன்றாட மருந்துகளில் பைல்ஸை இன்னும் மோசமாக்கும் கூறுகள் அடங்கும். இவற்றை நீங்கள் அடிக்கடி உட்கொண்டால், உங்கள் மருத்துவரை அணுகி, நீங்கள் தினமும் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றி அவரிடம் தெரிவிக்கவும். மூலநோய் பிரச்சனையிலிருந்து முழுமையாக குணமாகும் வரை மாற்று மருந்துகளை பயன்படுத்தலாம்.


பழுக்காத பழங்கள்


பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் நன்கு பழுத்த பழங்களை உட்கொள்வதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். பகலில் பழுத்த பழங்களை சாப்பிடுங்கள், ஆனால் பழுக்காத வாழைப்பழங்கள் போன்ற பழுக்காத பழங்களை சாப்பிட வேண்டாம். பைல்ஸ் நோயை மோசமாக்கும் சில மலச்சிக்கல் மற்றும் எரிச்சலூட்டும் கலவைகள் அவற்றில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற சில உணவுகளின் பட்டியல் இதோ:


- பருப்பு வகைகள் - ப்ரோக்கோலி மற்றும் பிற க்ரீசிஃபெரஸ் காய்கறிகள் - கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகள் - மிளகு - கீரை - வெள்ளரி



மூலநோய் உள்ளவர்கள் பால் அருந்தலாமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?


Piles Cure: எந்தவொரு ஆரோக்கியமான நபருக்கும் வாத, பித்த மற்றும் கபத்தின் சமநிலை மிகவும் முக்கியமானதாகும். பைல்ஸ் என்பது இந்த மூன்றின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நோயாகும்.

Written by - Sripriya Sambathkumar


  • பைல்ஸ் நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  • பால் பொருட்கள், குறிப்பாக பாலை தவிர்க்க வேண்டும்.

  • ஏனெனில் பாலினால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


பைல்ஸ் என்பது இந்நாட்களில் பலரை அச்சுறுத்தும் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதன் காரணமாக வேறு பல நோய்களும் ஏற்படலாம். எந்தவொரு ஆரோக்கியமான நபருக்கும் வாத, பித்த மற்றும் கபத்தின் சமநிலை மிகவும் முக்கியமானது. பைல்ஸ் என்பது இந்த மூன்றின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நோயாகும்.


ஆகையால் இதனை 'திரிதோஷஜ்' என்றும் அழைப்பார்கள். பைல்ஸ் நோயாளிகளில், வயிற்றில் சுத்தமின்மை, கழிவறைக்கு மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் உணர்வு, மலம் கழிக்கும் போது எரியும் உணர்வு மற்றும் அரிப்பு, சளி வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆசனவாயிலும் வீக்கம் ஏற்படும். பைல்ஸ் நோயாளிகள் உணவு விஷயத்தில் சிறப்பு முன்னெச்சரிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பைல்ஸ் நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பால் பொருட்கள், குறிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலினால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மலச்சிக்கல் ஏற்பட்டால், பைல்ஸ் நோயாளிக்கு அதிகமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.


அதிக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களையும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பொருட்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். இதன் காரணமாக வீக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது. துரித உணவுகளில் இருந்து விலகி இருப்பதும் நல்லது.


பைல்ஸ் நோயாளிகள் அதிகப்படியான டீ மற்றும் காபி அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காஃபின் உடலில் நீரிழப்பை ஏற்படுத்துவதோடு மலத்தின் கடினத்தன்மையை அதிகரிக்கும். இதனால் பிரச்சனை அதிகரிக்கலாம்.


பைல்ஸ் நோயாளிகள் கிட்னீ பீன்ஸ், பருப்பு, பீன்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவையும் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இதைத் தவிர மிளகாயை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. இல்லையெனில் எரியும் பிரச்சனை ஏற்படும்.


பைல்ஸ் நோயாளிகளும் பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவற்றால் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றிலிருந்து தூரமாக இருப்பது நல்லதாகும்.


Piles Cure: ஆபரேஷன் இல்லாமல் பைல்ஸுக்கு நிவாரணம் பெற இவற்றை உணவில் சேருங்கள்



Piles Control: பைல்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். பைல்ஸ் பிரச்சனை இருந்தால், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar


Piles Cure: Eat These Things to Get Rid of Piles Without Operation


பைல்ஸ் என்பது ஒரு தீவிர நோயாகும். இதில் நோயாளியின் மலக்குடல் வீக்கமடைகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வலியைத் தாங்க வேண்டியிருக்கும். இரண்டு வகையான பைல்ஸ் உள்ளன. ஒன்று உட்புற பைல்ஸ் மற்றொன்று வெளிப்புற பைல்ஸ். உட்புற மூல நோயில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. வெளிப்புற மூல நோய்களில் ஆசனவாயைச் சுற்றி வீக்கமடைவதால் கடுமையான வலி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல், நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து இருப்பது, மலம் கழிக்கும் போது சிரமப்படுதல், எடை அதிகரிப்பு, கனமான பொருட்களை தூக்குதல் போன்றவற்றால் பைல்ஸ் ஏற்படலாம். உணவு மற்றும் பானங்களில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். பைல்ஸ் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?

பைல்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். பைல்ஸ் பிரச்சனை இருந்தால், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்கவும்

வயிற்றில் ஏதேனும் நோய் இருந்தால், அந்த நோய்க்கான சிகிச்சையில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் பைல்ஸால் பாதிக்கப்பட்டிருந்தால், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடல் நீரேற்றமாக இருக்கும், இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். போதுமான நீர் உடலில் இருப்பது மலம் கழிப்பதையும் எளிதாக்குகிறது. குடிநீருடன் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, வெள்ளரி, கேரட் போன்றவற்றின் சாறும் அருந்தலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.


முழு தானியங்களை சாப்பிடுங்கள்


முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பைல்ஸ் நோயில் அதிக நன்மை பயக்கும். பைல்ஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் கோதுமை போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முழு தானியங்களை உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.


பழங்கள் பயனளிக்கும்


பழங்களை உட்கொள்வது பைல்ஸ் அறிகுறிகளைக் குறைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன, இது மூல நோயை குணப்படுத்த உதவுகிறது. இதனுடன் இரவு உணவில் பப்பாளியை கண்டிப்பாக சாப்பிடுங்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. இதனால் மலம் கழிக்கும் போது வலி ஏற்படாது.

பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்


பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் பலவிதமான ஆண்ட்-ஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை பைல்ஸின் அறிகுறிகளைக் குறைக்கின்றன. கீரை, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளை உட்கொள்ளலாம்.


மோர் குடிப்பதால் நிவாரணம்


மோர் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. மோர் உங்கள் உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது. மோரை உட்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால் பைல்ஸ் அறிகுறிகளை திறம்பட குறைக்கலாம்.


மூலிகை தேநீர் பயனுள்ளதாக இருக்கும்


நீங்கள் பைல்ஸால் பாதிக்கப்பட்டிருந்தால், மூலிகை டீ குடிப்பது மிகவும் உதவியாக இருக்கும். மூலிகை தேநீர் உட்கொள்வது வீக்கத்தை குறைக்கிறது மற்றும் குடல் இயக்கத்தின் போது இரத்தப்போக்கையும் குறைக்கிறது. சந்தையில் பல வகையான மூலிகை டீக்கள் கிடைக்கின்றன. மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு சரியான மூலிகை தேநீரைத் தேர்வு செய்யலாம்.


பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க


Piles Cure: பைல்ஸ் நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மலச்சிக்கல் நோயைக் கட்டுப்படுத்துங்கள். ஓமத்தை உட்கொள்வது பைல்ஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar


Piles Control: Include Ajwain in your Diet in this way

  • ஓமம் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மசாலா ஆகும்.

  • ஓமத்தில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகள் உள்ளன.

  • இதன் காரணமாக பைல்ஸ் பிரச்சனைக்கு பெரிய அளவில் இது உதவ முடியும்.



பைல்ஸ் நோய்க்கு நிவாரணம் அளிக்கும் ஓமம்: மன அழுத்தம், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் விளைவாக பைல்ஸ் நோய் ஏற்படுகிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான உணவுப்பழக்கத்தால், மக்கள் மலச்சிக்கலால் சிரமப்படுகிறார்கள். அது பைல்ஸ் நோய்க்கு காரணமாகிறது. மலச்சிக்கல் பைல்ஸ், பிளவு, ஃபிஸ்துலாவை ஏற்படுத்துகிறது. பைல்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கமாகும். பைல்ஸ் நோயில், ஆசனவாயின் நரம்புகள் வீங்கத் தொடங்கும். மூல் நோய் காரணமாக, ஆசனவாயின் உள் அல்லது வெளிப்புற பகுதியில் புண்கள், மருக்கள் உருவாகின்றன. இவற்றில் சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது.


மலச்சிக்கல் ஏற்பட்டால், இந்த பகுதிகளிலிருந்து ரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. இந்த நோயின் வளர்ச்சிக்கு தவறான உணவு முக்கிய காரணமாகும். வறுத்த உணவுகள், அதிக எண்ணெய், காரமான உணவுகள், ஆல்கஹால், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை உணவில் உட்கொள்வது இந்த பிரச்சனையை அதிகரிக்கும்.


பைல்ஸ் நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மலச்சிக்கல் நோயைக் கட்டுப்படுத்துங்கள். ஓமத்தை உட்கொள்வது பைல்ஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓமம் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் பசி அதிகரிக்கும். ஓமத்தை உட்கொள்வது வயிற்று வலி மற்றும் மூட்டு வலியைப் போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ஓமம் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மசாலா ஆகும். சமீபத்தில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஓமம் பல நோய்களை குணப்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது. பல ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ள கூறுகள் ஓமத்தில் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆராய்ச்சியின் படி, ஓமத்தில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகள் உள்ளன. இதன் காரணமாக பைல்ஸ் பிரச்சனைக்கு பெரிய அளவில் இது உதவ முடியும்.


பைல்ஸ் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது:


பைல்ஸில் பயனுள்ளதாக இருக்கும் ஓம விதைகளில் மலமிளக்கிய கூறுகள் நிறைந்துள்ளன. இவை பைல்ஸ் பிரச்சனையை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். பைல்ஸ் உள்ள இடத்தில் ஓம எண்ணெயைப் பயன்படுத்தினால் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


ஓமத்தை பயன்படுத்துவது எப்படி:


- ஓமத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் கட்டுப்படும்.


- ஓமம் மற்றும் சாதத்தை வறுத்து சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்த ஓமம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


- ஓமத்தை உணவில் சேர்த்து உட்கொள்வதன் மூலமும் பைல்ஸ் அறிகுறிகளை அகற்றலாம்.


Piles Home Remedy: Add These 5 Things in your Diet

பைல்ஸில் சாப்பிட வேண்டிய உணவுகள்: பைல்ஸ் எனப்படும் மூல நோய், இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு நோயாக உருவெடுத்து வருகிறது. இதனால் மலம் கழிக்கும்போது வலி, அசௌகரியம் மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது. மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகளின் வீக்கம் காரணமாக இது ஏற்படுகிறது. பைல்ஸில் உட்புற பாதிப்பு வெளிப்புற பாதிப்பு என இரு வகைகள் உள்ளன. சிலர் இரண்டு வகைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். முதுமை, நாள்பட்ட மலச்சிக்கல், கர்ப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி உட்கொள்வதன் விளைவாக மலக்குடலின் கீழ் பகுதி சேதமடைகிறது. மலம் கழிக்கும்போது மட்டுமின்றி, எப்போது வெண்டுமானாலும் இது ரத்தக்கசிவை ஏற்படுத்தக்கூடும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயின் பாதிப்பை சரி செய்ய அவர்களது உணவைக் கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பைல்ஸ் நோயை சிறந்த முறையில் சமாளிக்க உதவும் சில உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். பைல்ஸ் நோயாளிகளுக்கான 5 பயனுள்ள உணவுகள்: பைல்ஸ் பிரச்சனையால் சிரமப்படும் நோயாளிகள் இந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் செரிமான ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதோடு குடல் இயக்கத்திற்கும் உதவுகின்றன. மேலும் படிக்க | மூல நோய்க்கு 'குட்பை' சொல்லணுமா? அப்ப இதையெல்லாம் உணவிலிருந்து விலக்கிடுங்க முழு தானியங்கள்:

பைல்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள், தவிட்டு தானியங்கள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், முழு கோதுமை பாஸ்தா போன்ற ஆரோக்கியமான முழு தானியங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை நார்ச்சத்து நிறைந்தவை. மேலும் இவை மலத்தை மென்மையாக்குகின்றன, வலியைக் குறைக்கவும் உதவுகின்றன.

பச்சைக் காய்கறிகள் / கீரை வகைகள்:

பச்சைக் காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை செரிமானத்திற்கு உதவும். மூல நோய் ஏற்பட்டால் ​​செரிமான அமைப்பை வலுப்படுத்துவது அவசியமாகும். ப்ரோக்கோலி, முளை கட்டிய தானியங்கள், கேரட், பிரஸ்ஸல்ஸ் முளைகள், முட்டைக்கோஸ், தக்காளி, அஸ்பாரகஸ், காலிஃபிளவர், வெங்காயம், வெள்ளரி ஆகியவை பைல்ஸ் நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய சில காய்கறிகளாகும்.

பழங்கள்:

பழங்களில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் குடல் இயக்கத்தை சீராக்க இவை உதவுகின்றன. ஆப்பிள், கொடிமுந்திரி, திராட்சை, பெர்ரி போன்ற பழங்களை தோலுடன் சேர்த்து உண்ணலாம். இவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை தோல் இல்லாமல் சாப்பிடுவதும் நல்லது.

ராஜ்மா, காராமணி, பச்சை பட்டாணி, மொச்சை ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பைல்ஸ் நோயாளியின் வழக்கமான உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர்:

இது ஒரு உணவாக இல்லாவிட்டாலும், பைல்ஸ் சிகிச்சைக்கு தண்ணீர் இன்றியமையாத பொருளாகும். தினமும் குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது குடல் இயக்கம் சீராக இயங்க உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Thanks to Sources.

Credited to Zeenews.india.com

https://bit.ly/3URtO17


0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page