top of page

பேரீச்சம் பழத்தின் நன்மைகள் - காலையில் இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை வரவே வராது!!!


பேரீச்சம் பழத்தின் நன்மைகள் | Dates Benefits in Tamil - Update Thamizha சித்த மருத்துவம் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடு பழக்கத்தைக் கொண்ட மக்கள் எந்த வித நோயாலும் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவாகவும் உடலின் பல குறைகளை நீக்கவும் உதவும் ஒரு அருமையான பழம் பேரிச்சம்பழம். இந்த பேரிச்சம் பழத்தை உண்பதால் ஏற்படும், நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் நாம பார்க்கலாம்.

எலும்பு

பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்கள் அதிக அளவில் உள்ளது. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் குறைக்கிறது. மேலும், எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது பேரீச்சம் பழம். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கண்

ஒவ்வொருவருக்கும் கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டியது மிக அவசியம். உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண் பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றது.

தினந்தோறும் பேரிச்சம்பழம் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வைத்திறன் மேம்பட்டு கண்புரை போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

இரும்புசத்து

பேரீச்சம் பழம், இரும்பு சத்து, அதிகம் நிறைந்தது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும்.

கருவுற்றிருக்கும் பெண்கள், பேரிச்சம் பழங்களை, அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

நரம்புத் தளர்ச்சி

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது மலட்டுத் தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரீச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்பு வலுப்பெற்று ஆண்மை குறைபாடு நீங்கும்.

ஒவ்வாமை

நாம் சில குறிப்பிட்ட பொருட்களை சாப்பிடும் போதோ, சுவாசிக்கும் போதோ உடல் அதை ஏற்க முடியாமல், எதிர்வினை ஆற்றுவது ஒவ்வாமை எனப்படும்.

இந்த ஒவ்வாமை, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பேரீச்சம் பழங்களை அடிக்கடி அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடை

மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் இயல்பான எடை குறைவால் உடல் எடை கொண்டவர்கள், தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து அதை சூடான பாலில் கலந்து இரண்டு வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும்.நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும். போதை பழக்கம்

இன்று பலரும், புகையிலை, சிகரெட், பீடி, மது போன்ற பல வகையான போதை வஸ்துக்களை அதிகம் உபயோகித்து, உடல் மற்றும், மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, சில பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம் கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். மேலும், உடல் நலத்தையும் மேம்படுத்தும்.

வயிற்றுப் போக்கு

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது மாசடைந்த நீரை அருந்துவது மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தாலும் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இந்த வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் தினமும் மூன்று வேளையும் சில பேரீச்சம் பழங்களை, சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

புற்றுநோய்

பேரீச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்க கூடிய சக்திகள் அதிகமாக உள்ளது. பேரிச்சம்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும், பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவதாக, பல மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

மலசிக்கல்

மாமிசம் மாவுப் பொருளால் ஆன உணவுகளை அதிகம் உண்பது அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ஆகியவையால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் மூன்று வேளையும் உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.


காலையில் இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை வரவே வராது!!!


குடல் இயக்கம் சீராக இருப்பவர்களுக்கும் குளிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். குளிர்காலத்தில் வெப்பநிலை குளிர்ச்சியாக இருப்பதால், நமக்கு தாகம் ஏற்படாததால் தண்ணீர் குறைவாக குடிக்கிறோம். காலை நேரம் பொதுவாக குளிர்ச்சியாக இருப்பதாலும், வழக்கத்தை விட அதிகமாக தேநீர் மற்றும் காபி குடிக்கிறோம். ஆக மொத்தம், குறைந்த நீர் உட்கொள்வது, குறைவான உடற்பயிற்சி செய்தல், டீ மற்றும் காபி நிறைய குடிப்பது மற்றும் போதுமான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.

எனவே, குளிர்காலத்தில் நமது உணவை மாற்றியமைத்து, குடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க, நார்ச்சத்து, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், நல்ல கொழுப்பு மற்றும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை அதில் சேர்த்துக் கொள்வது அவசியம்.



மலச்சிக்கலுக்கான காலை உணவுகள்:-


1. பேரீச்சம் பழம்:

இவை இயற்கையில் இனிப்பு மற்றும் குளிர்ச்சியானவை. மலச்சிக்கல், அதிக அமிலத்தன்மை, மூட்டு வலி, பதட்டம், முடி உதிர்தல் மற்றும் குறைந்த ஆற்றல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவுகின்றது.

காலையில் வெறும் வயிற்றில் 2-3 பேரிச்சம்பழங்களை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து சாப்பிடவும்.


2. வெந்தய விதைகள்

1 டீஸ்பூன் வெந்தய விதைகளை (வெந்தய விதைகள்) இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் முதலில் சாப்பிடலாம். நீங்கள் விதைகளை தூள் செய்யலாம் மற்றும் படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி வெந்தய பொடியை சாப்பிடலாம். அதிக உடல் வெப்ப பிரச்சனைகள் உள்ளவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.


3. பசு நெய்

பசு நெய் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை உடலில் பராமரிக்க இது உதவுகிறது. 1 டீஸ்பூன் பசு நெய்யுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பசும்பால் சேர்த்துக் குடிப்பது நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்குச் சிறந்தது.


4. நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஒரு அற்புதமான மலமிளக்கியாகும். மேலும் தலைமுடி உதிர்தல், நரை முடி, எடை இழப்பு மற்றும் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் சாப்பிடும் போது மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் உதவுகிறது.


5. இரவில் ஊறவைக்கப்பட்ட திராட்சைகள்

கருப்பு திராட்சைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. உலர்ந்த உணவுகள் உங்கள் வாத தோஷத்தை மோசமாக்கும் மற்றும் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் திராட்சையை ஊறவைப்பது அவசியம். ஊறவைத்தால் அவை எளிதில் ஜீரணமாகும்.

https://www.updatenews360.com/health/food-items-that-help-with-constipation-091222/

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page