top of page

பெண்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் ஆறு வீட்டு வைத்திய முறைகள்



பெரும்பாலான பெண்கள் இரும்புச் சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கும், இக்குறைபாட்டிற்கு ஒரு காரணமாகிறது. இதன் காரணமாக, தளர்வுற்று, உடல் மஞ்சள் நிறமாகி,எரிச்சலை ஏற்படுத்துகிறது. மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொண்டாலும், சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரும்புச் சத்தை அதிகரிக்கச் செய்யலாம்.


பெண்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் சில உணவுகளை இப்போது பார்க்கலாம் –

Table of Contents 1. கீரைவகைகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்:

2. பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தை உங்கள் பத்திய உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்:

3. பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகவும்:

4. வைட்டமின் பி 12 அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்ளவும்:

5. வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்:

6. உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ளவும்:


1. கீரைவகைகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்:


எளிதாக இரும்புச் சத்துக் குறைபாட்டை நீக்க வேண்டுமெனில், தவறாது கீரை வகைகளை நிறைய உண்ணவேண்டும். பசலைகீரை, ப்ரோக்கோலி போன்ற கீரை வகைகள் குளோரோஃபைல் என்னும் வேதிப்பொருள் நிறைந்தவை. குறிப்பாக பசலைக்கீரையில், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி9, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, நார்ச்சத்து மற்றும் பேட்டா-கரோடீன் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளது அரை கப் பசலைக்கீரையை வேக வைத்தால் 3.2 மில்லிகிராம் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய பசலைக்கீரையை உண்பதால், பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு விரைவில் நீங்கிவிடுகிறது.

2. பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தை உங்கள் பத்திய உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்:


இரும்புச் சத்து குறைபாட்டை நீக்க வீட்டு வைத்தியமாக நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், பீட்ரூட் மற்றும் மாதுளை சாறு எடுத்துக் கொள்வது சாலச் சிறந்த்து. பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இதனை ஆப்பிள் மற்றும் காரட்டுடன் பச்சையாக நறுக்கி சாலட்டாகவும் சாப்பிடலாம். இதைத்தவிர, மாதுளையில், பொட்டஸியம், காப்பர், இரும்பு போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது.

3. பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகவும்:


அதிக சத்துக்கள் நிறைந்த பால் மற்றும் மஞ்சள் தூள் கலவை இரும்புச் சத்து அதிகரிக்க உதவும். தினமும் காலை மாலை இரு வேளையும் மஞ்சள் கலந்த பாலை அருந்துவது சீக்கிரத்தில் இரும்புச் சத்து அதிகரிக்க உதவும்.

4. வைட்டமின் பி 12 அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்ளவும்:


இரும்புச் சத்து குறைபாட்டிற்கு வைட்டமின் பி 12 குறைவதும் ஒரு காரணம். இரும்புச் சத்து குறைபாட்டை நீக்க விரும்பினால், நீங்கள் முதலில் வைட்டமின் பி 12 அளவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு பால், கோழி, மீன் மற்றும் சிவப்பு மாமிச வகைகளை உட்கொள்ளவேண்டும். வைட்டனமின் பி 12, இரத்த்த்தின் சிவப்பணுக்களை அதிகரித்து, நரம்பு மண்டல அணுக்களை ஆரோக்கியாமாக வைத்திருக்க உதவுகிறது.

5. வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்:


வைட்டமின் சி கலந்த உணவுகளை முறையாக எடுத்துக்கொண்டால், உடலின் இரும்புச் சத்தினை உள்வாங்கும் திறன் அதிகரித்து, இரும்புச்சத்து குறைபாடு நீங்கிவிடும். ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, கொய்ய, ஆப்பிள், வாழப்பழம் போன்ற பழச் சாறுகளையும், பலாப்பழம், முட்டைகோஸ் மற்றும் பச்சைக்கொத்துமல்லியை யும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

6. உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ளவும்:


உலர் கொட்டைகள், உலர் திராட்சை, பேரீச்சை போன்றவை உடலின் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது. இவற்றை நொறுக்குத் தீனியாக உட்கொள்ளலாம். உலர் பழங்களில் வைட்டமின் சி அதிகமுள்ளது. இதிலுள்ள இரும்புச் சத்து உடனடியாக உடலுக்குள் செல்கிறது. நீங்கள் ஆப்ரிகாட் பழத்தினையும் இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.


மூலப்படங்கள் நச்சுரல் ஃபுட் சீரிஸ், ஸ்டைல்கிரேஸ், சோசியல் ஐஸ், ஜோனாஸ் ரிசிப்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டாக்டர் வெய்ல், திஜுவானா பாரியாட்ரிக் செண்டர் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

Writer. Nithya Lakshmi

Thanks for the Sources.

Credited to https://bit.ly/3WQ4CKk

0 views

Yorumlar


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page