top of page

நவதானியங்கள் பெயர்கள் | Navathaniyam names in Tamil

நவதானியங்கள் பெயர்கள் | Navathaniyam names in Tamil

By

Hariprasath


நவதானியங்கள் எத்தனை வகைகள் | Navathaniyam list in Tamil

நவதானியங்கள் தானியங்கள் என்பது ஒன்பது வகையான தானியங்களை குறிப்பதாகும் நமது நாட்டில் பன்னெடுங் காலமாகவே இந்த ஒன்பது வகையான நவதானியங்கள் உணவு பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்படுகின்றன நவதானியங்கள் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் அனைவருக்குமே அந்த நவதானியங்களில் இருக்கின்ற ஒன்பது வகையான தானியங்கள் என்ன என்பது தெரியாமல் உள்ளது அந்தவகையில் நவதானியங்கள் என்றால் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Navathaniyam list in Tamil


நவதானியங்கள் உணவுத் தேவைக்காக மட்டுமன்றி சில ஆன்மீக ரீதியான காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை சடங்கின் பொழுதும் திருமண சடங்கின் போதும் பயன்படுத்தப்படுகின்றன சிலவகை ஆன்மீக பரிகாரங்கள் முளைப்பாரி யாக வளர செய்த நவதானியங்களை பயன்படுத்துகின்றனர்.


நவதானியங்களில் மனிதர்களின் உடலுக்கு தேவையான தாதுக்கள் வைட்டமின்கள் சுண்ணாம்புச் சத்து புரதச்சத்து நார்ச்சத்து மாவுச்சத்து கரோட்டின் நியாசிக் பாஸ்பரஸ் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.


நெல்கோதுமைகொண்டை கடலைதுவரம் பருப்புஉளுத்தம்பருப்புபாசிப்பருப்புகொள்ளுஎள்மொச்சை

நவதானியங்களை ஆன்மீக ரீதியில் 9 கிரகங்களுக்கு உரியதாக வகுத்துள்ளனர் அந்த ஒன்பது கிரகங்களுக்குரிய நவதானியங்கள் என்னென்ன அந்த நவதானியங்களை அந்த கிரகத்திற்கு சமர்ப்பித்து வழிபாடு செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்


நவகிரக நவதானியங்கள் | Navagraha dhanya list Tamil


சூரியன் – கோதுமை

சந்திரன் – நெல்

செவ்வாய் – துவரை

புதன் – பச்சைப்பயிறு

குரு – கொண்டைக்கடலை

சுக்கிரன் – மொச்சை

சனி – எல்

ராகு – உளுந்து

கேது – கொள்ளு

நவதானிய பரிகாரங்கள்

நவதானிய பரிகாரம் – சூரியன்

சூரியனுக்குரிய கோதுமை தானியத்தில் உணவு வகைகளை செய்து சூரியனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும் தந்தையின் உடல் நலம் மேம்படும் வலதுகண் எலும்புகள் தொடர்பான நோய்கள் தீரும்


நவதானிய பரிகாரம் – சந்திரன்

சந்திர பகவானுக்குரிய தானியம் நெல் எனினும் நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சந்திரனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடுவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும் தாயாரின் ஆயுள் அதிகரிக்கும்


நவதானிய பரிகாரம் – செவ்வாய்

செவ்வாய் பகவானுக்குரிய தானியம் துவரை. துவரை கொண்டு செய்த உணவுப் பண்டங்களை நெய்வேத்தியம் வைத்து வழிபட்டு பிறருக்கு கொடுப்பதால் பகை எதிர்பாரா விபத்து ஏற்படாமல் காக்கும் திருமணத்தில் ஏற்படுகின்ற தடை தாமதங்களை நீக்கும்


நவதானிய பரிகாரம் – புதன்

புதன் பகவானுக்குரிய தானியம் பச்சைப்பயிறு பச்சைப் பயிரை உங்கள் பூஜையறையில் வைத்து வழிபட்டு அதனை பிறருக்கு தானமாக கொடுப்பதால் வீட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் பேச்சாற்றல் சிறக்கும் வியாபாரங்களில் சிறந்த வெற்றியை கொடுக்கும்


நவதானிய பரிகாரம் – குரு

குரு பகவானுக்குரிய தானியம் கொண்டைக்கடலை கொண்டைக்கடலையை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு அதனை தானமாக கொடுப்பது வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே நடக்கும்


நவதானிய பரிகாரம் – சுக்கிரன்

சுக்கிர பகவானுக்குரிய தானியம் மொச்சை பயிரை உங்கள் பூஜையறையில் வைத்து வழிபட்டு பிறருக்கு தானம் செய்வதால் கலைகளில் சிறக்கலாம் செல்வவளம் பெருகும்


நவதானிய பரிகாரம் – சனி

சனி பகவானுக்குரிய தானியம் ஆகும் எல் இல்லை ஒரே அறையில் வைத்து படித்து பிறருக்கு தானம் செய்வதால் ஈடுபடுகின்ற காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும் ஆயுள் பெருகும் வீண் விரோதங்கள் மறையும்

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page