நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன?
அடிக்கடி ஜங்க் ஃபுட்ஸ்களை சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்டராலின் அளவும் அதிகரித்துவிடும்.
Written by - RK Spark
பெரும்பாலும் ஜங்க் ஃபுட்ஸ்கள் பதப்படுத்தப்படுகிறது.
ஜங்க் ஃபுட்ஸ்களை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
கெட்ட கொலஸ்டராலின் அளவும் அதிகரித்துவிடும்.
பொதுவாக ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது என்று நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் குறைந்த அளவில் ஊட்டச்சத்தும் அதிகளவில் கலோரிகளும் நிறைந்துள்ளது, இதுதவிர இவற்றில் அதிகளவு கெட்ட கொழுப்புகளும் நிறைந்துள்ளது. பெரும்பாலும் ஜங்க் ஃபுட்ஸ்கள் பதப்படுத்தப்படுகிறது, அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அடிக்கடி ஜங்க் ஃபுட்ஸ்களை சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்டராலின் அளவும் அதிகரித்துவிடும். இதிலுள்ள பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள் விரைவில் செரிமானமடையும் என்றாலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் இது இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கும், நமது செல்கள் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது கணையம் இன்சுலினை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இப்போது அதிகளவில் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி இங்கே காண்போம்.
1) பதப்படுத்தப்பட்ட உணவுகள் விரைவில் ஜீரணமடைந்து விடுகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.
2) ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக்கூடும், இதனை சாப்பிடுவதால் உங்கள் உடல் அதிகப்படியான உணவை தேடும். இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கும்.
3) இதில் அதிகளவு டிரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்குகிறது.
4) ஜங்க் ஃபுட்ஸில் அதிகளவு சோடியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் ஆபத்தை அதிகரிக்கிறது.
உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்:
1) காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானியங்கள் போன்ற உணவு வகைகளை அதிகமாக உண்ணவேண்டும்.
2) குறைந்த அளவிலான உணவை உட்கொள்ளுங்கள்.
3) குறைந்த அளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.
4) தினசரி போதுமான அளவு புரதம் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.
5) குறைந்த அளவு டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
6) தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.
Thanks to Sources.
Credited to Zeenews.india.com
https://bit.ly/3hmKwIf
Comentarios