top of page

நீரிழிவு நோய்க்கான உணவில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகள்



உலகம் முழுவதும் ஆரோக்யமற்ற உணவு பழக்க வழக்கங்களால் நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோயாகிவிட்டது. ஆரோக்யமற்ற உணவுமுறைகளின் தாக்கம் அதிகமாகும் பொழுது உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையானது குழந்தை பருவத்திலேயே இயற்கையாக வருவது, இரண்டாவது வகையானது மிக பொதுவாக உடல் பருமனாலும், முறையற்ற உணவு முறைகளாலும் உண்டாவது.


இரண்டாவது வகை நீரிழிவு நோயில், சில சமயங்களில், சர்க்கரையை எரிப்பதற்குத் தேவையான இன்சுலின் ஹார்மோனை செல்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கக்கூடும். சில சூழல்களில் கணையத்தால் போதுமான அளவு இன்சுலினைச் சுரக்க முடியாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறன் முற்றிலுமாகக் குறைந்து , இரண்டாம் வகை சர்க்கரை நோயை உருவாக்கிவிடுகிறது. அதனால் உடலின் எடை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கிறது. இச்சூழலுக்கான முக்கிய காரணம் ஒருவரின் உணவு பழக்க வழக்கமே ஆகும். இருந்தாலும் உணவு மருத்துவர் Dr. ஷிகா ஷர்மா கூறுகிறார், “ சர்க்கரை நோய் வெறும் உணவு முறையால் மட்டும் உண்டாவது அல்ல, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், மன அழுத்தம், உடற்பயிற்சி பற்றாக்குறை போன்றவையும் காரணமாகும்”.


Table of Contents

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ணவேண்டிய உணவுகள்:

1. நெல்லிச்சாறு

2. வெங்காயம்

3. பழங்கள்

4. காய்கறிகள்


தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:

1. இனிப்பூட்டப்பட்ட உணவுகள்

2. உப்பு

3. அரிசி சாதம்

4. பால் பொருட்கள்


நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ணவேண்டிய உணவுகள்:

1. நெல்லிச்சாறு



நெல்லிக்காயில் வைட்டமின் C அதிகம் உள்ளதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் நெல்லி ஜூஸ் அல்லது இரு ஸ்பூன் நெல்லிச்சாறு தினமும் அருந்துவது பலனை தரும்.

2. வெங்காயம்



வெங்காயம் ஒரு இயற்கையான டையூரிடிக். தினசரி ஒரு துண்டு பச்சை வெங்காயத்தை உண்டு வந்தால் செரிமானத்தை எளிதாக்கி நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.

3. பழங்கள்



ஆப்பிள், கிவி, ஆரஞ்சு, பீச் போன்ற பழங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அந்த பழங்கள் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு அல்லாமல் அதில் உள்ள பிரக்டோஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகிறது.

4. காய்கறிகள்



உங்கள் உணவில் அதிகமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். கீரை, வெங்காயம், பூசணி , பாகற்காய், காலிப்ளவர், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை நீங்கள் உண்ணும் பொழுது, உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு எளிதாக சில மாதங்களிலேயே கட்டுபாட்டுக்கு வந்துவிடும்.


தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:


அதிகமான சர்க்கரையுடைய உணவுகள் கிளைசெமிக் குறியீட்டை அதிகரிக்கச் செய்வதால், அவை தவிர்க்கப்பட வேண்டியவை. அவை வெள்ளை சர்க்கரை, ஐஸ்க்ரீம், மைதா, ரஸ்க், ஜீரோ கலோரிகள் உடையவை என விளம்பரப் படுத்தப்படும் டின்னில் அடைப்பப்பட்டுள்ள ஜூஸ்கள் போன்றவை, சப்போட்டா, மாம்பழம் போன்ற மிக இனிப்பான பழங்கள் போன்றவைகள் என Dr. ஷிகா ஷர்மா கூறுகிறார்.

1. இனிப்பூட்டப்பட்ட உணவுகள்



அனைத்துவகை இனிப்புகள், ஐஸ்க்ரீம் அல்லது சாக்லேட்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்யும்.

2. உப்பு



சர்க்கரை நோயாளிகள், உப்பு சேர்த்துக் கொள்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. அது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

3. அரிசி சாதம்



வெள்ளை அரிசி சாதம், வெள்ளை ப்ரெட் போன்ற உணவுகள் தேவைக்கும் அதிகமான கலோரிகளை அளிப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டும்.

4. பால் பொருட்கள்



உங்கள் உடலுக்கு தேவையான கால்ஷியத்தை அளிக்கக் கூடிய தயிர், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவை புரதம் மற்றும் வைட்டமின்களையும் அளிக்கின்றன. ஆனால் அதிக கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக் கட்டி போன்றவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து இதய நோயை உண்டாக்கும்.


மேலும் Dr.ஷிகா ஷர்மா சொல்வது என்னெவென்றால் – “ஒரு நீரிழிவு நோயாளி தன் உணவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், முறையான உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் போன்றவைகளையும் செய்தால் நல்ல பலனை பெறலாம்”


அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஆரோக்யமான வாழ்வை பெறவும்:

  • நிறைய நீர் பருகி, உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும்.

  • எப்பொழுதும் முறையான இடைவெளியில் உண்ணவும். இரு வேலை உணவுகளுக்கு நடுவில் நீண்ட இடைவெளியை தவிர்க்கவும்.

  • உங்கள் மெட்டபாலிசம் மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்க 30-45 நிமிட பயிற்சி கண்டிப்பாக தேவை.

  • சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறையை தவறாமல் பின்பற்றவும்.

  • அளவுக்கு மீறி உண்பதை கட்டுக்குள் வைத்திருக்கவும்.


Image source – pixabay, pixino, wikipedia commons, pxhere

Writer. Subhashni Venkatesh


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3GJNTTo

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page