நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
- 1stopview Vasanth
- Dec 15, 2022
- 2 min read
causes symptoms and treatment of typhoid in tamil

டைபாய்ட் நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
Writer. Subhashni Venkatesh
சால்மோனெல்லா டைஃபி என்னும் பாக்டீரியாவல் ஏற்படும் ஒரு தொற்று நோய் டைபாய்ட் ஆகும். இந்நோய் உண்டாக முக்கிய காரணம் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவே ஆகும். அதனால் எப்பொழுதும் கைகளை கழுவுவது மிக அவசியம். சிறுநீர், மலம், இரத்த பரிசோதனை மூலம் சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா கண்டறியப்படுகிறது. இதற்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். இந்த நோய்க்கு பயனுள்ள சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கடந்த சில வருடங்களில் இதன் தாக்கம் குறைந்து வந்தாலும், 3-5% மக்கள் இந்த தொற்றை தங்களுக்குள் சுமந்து வந்த வண்ணம் தான் இருக்கின்றனர். இது மனிதர்கள் மூலம் தான் பரவுகிறது, ஏனெனில் மிருகங்கள் இதை பரப்புவது இல்லை.
Table of Contents
எந்த வகையான நிகழ்வு டைபாய்ட் நோயை விளைவிக்கிறது?

சுகாதாரமற்ற சுற்றுப்புறம் தான் இந்த நோய் ஏற்பட தூண்டுகோல். இந்த பாக்டீரியா பெரும்பாலும் மனித கழிவுகளில்தான் இருக்கின்றன. இந்த நோய் அதை தாக்கியவர்களின் சுற்றுபுறத்தில் உள்ள தண்ணீரை அசுத்தப்படுத்தி, அந்த நீரை உபயோகப்படுத்தி சமைக்கப்படும் உணவையும் அசுத்தப்படுத்துகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை அசுத்தமான நீரால் கழுவும் பொழுது இந்த பாக்டீரியாக்கள் உட்செலுத்தப் படுகின்றன. இந்த வகை பாக்டீரியாக்கள் மலம், நீர், கழிவு நீர் ஆகியவற்றில் பல நாட்கள் வாழ முடியும். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் தொடக்கத்தில் தெரிவதில்லை. நோய் தீவிரமடையும் சமயத்தில் தான் அறிகுறிகள் தென்படுகின்றன.
சுகாதாரமற்ற உணவை உண்ணும் பொழுது பாக்டீரியா உங்கள் வாய் வழியாக பித்தப்பை, கல்லீரல், வயிறு , இரத்த ஓட்டம், மற்ற உறுப்புகள் ஆகியவற்றை அடைந்து குடலுக்குள் செல்கிறது. பாதிக்கப்பட்டவரின் உடலினுள் அவரின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வரை வார கணக்கில் மறைந்திருக்கிறது.
டைபாய்ட் நோயின் அறிகுறிகள்
30-40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதிக காய்ச்சல்
சோம்பேறித்தனம், அலுப்பு
தலை வலி
தசை வலி
வாந்தி
வயிற்று போக்கு
பசியின்மை
கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சிவப்பு நிற தடிப்பு
இந்நோய்க்கான அறிகுறிகள் ஒரு வார காலத்திற்கு பிறகு தான் வெளியே தெரிய தொடங்கும். தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் வரை இருக்கும். சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், குடலின் உட்புற திசுக்களில் துளைகள் விழுந்து விடும். அது மிக ஆபத்தான நிலைமைக்கு வழி வகுக்கும்.
டைபாய்ட் நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை முறைகள்

டைபாய்ட் நோய்க்கான ஒரே சிகிச்சை ஆன்டிபயாடிக்ஸ் ஆகும். மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது உங்களிடம் தென்பட்டால், உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெறவும். ஆன்டிபயாடிக்ஸ் தவிர உங்கள் உடலிலிருந்து பாக்டீரியவை வெளியேற்ற நிறைய நீர் அருந்தி உடலை சுத்தமாக்க வேண்டும்.
டைபாய்ட் நோய்க்கான தடுப்பூசி

டைபாய்ட் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீங்கள் பயணப் படுகிறீர்கள் என்றால், நீங்கள் செல்வதற்கு முன் இதற்கான தடுப்பூசி போட்டுக் கொண்டு போவது சாலச் சிறந்தது.
டைபாய்ட் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள்

பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேட்டட் நீர் அல்லது கொதிக்க்கப்பட்ட சுடு நீர் மட்டுமே அருந்த வேண்டும்.
தெருவோரக்கடைகளில் விற்கப்படும் உணவுகளை உண்பதை தடுக்க வேண்டும்.
நீங்களே உங்களுக்கு தேவையான, அப்பொழுது உண்ணக் கூடிய பழத்தை பறித்து, தோலை அகற்றி நன்கு கழுவிய பிறகு உண்ணவும்.
உண்பதற்கு முன் கைகளை நன்கு கழுவவும்.
மற்றொருவர் கைப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம்.
சுகாதாரம் மற்றும் சுத்தம் மிக அவசியம். இந்த நோயை தடுக்க சுத்தமான சுற்றுப்புறத்தை பேணி காப்பது மிக அவசியம்.
Thanks to Sources.
Credited to https://bit.ly/3Wl3Rbv
Comentários