நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அக்கி எனப்படும் ஹெர்பெஸ் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
![](https://static.wixstatic.com/media/79b069_9802a28f62d44c68a2a9b35ebd419ad8~mv2.png/v1/fill/w_562,h_474,al_c,q_85,enc_auto/79b069_9802a28f62d44c68a2a9b35ebd419ad8~mv2.png)
symptoms and causes of herpes in tamil
Writer. Subhashni Venkatesh
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் , ஹெர்பெஸ் என்று அழைக்கப்படும் இந்த தொற்று வைரஸ் வெகு பொதுவான ஒரு தொற்றுநோய். பெரும்பாலும் வாயை சுற்றி அல்லது பிறப்புறுப்புகளில் இது தோன்றுகிறது. ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் அதிக வலியுடையதாக இருந்தாலும் இதனால் ஆரோக்யத்திற்கு எந்த தீங்கும் இல்லை. ஹெர்பெஸ், HSV -1 மற்றும் HSV-2 என இரு வகைப்படுகிறது. ஒரே வகையான இவ்விரண்டு வைரஸ்கள் பொதுவாக பிறப்புறுப்பு, தொடை, உதடு, வாய் போன்ற இடங்களிலும், அரிதாக கண் மற்றும் பிற உறுப்புகளையும் தாக்குகிறது.
ஹெர்பெஸ் பாதிப்பிற்கான காரணங்கள்-
![](https://static.wixstatic.com/media/79b069_a90cd35d7f0349e8ae1e5dd2114fcad6~mv2.png/v1/fill/w_597,h_446,al_c,q_85,enc_auto/79b069_a90cd35d7f0349e8ae1e5dd2114fcad6~mv2.png)
ஹெர்பெஸ் மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடிய ஒரு தொற்று நோய். ஒருவரை தொட்டால் தான் பரவும் என்பதில்லை, பிறப்புறுப்பு தொடர்பும் காரணமாகிறது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவிய உடனே, HSV அறிகுறியாக உடலில் கொப்புளங்கள் ஏற்படும். ஒரு குழந்தைக்கு ஹெர்பெஸ் தாக்கினால், அக்குழந்தைக்கு தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே தாயிடமிருந்து இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க கூடும். அல்லது இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் குழந்தையிடம் தொடர்பு கொண்டிருந்தால் அதனால் பாதிப்படைந்திருக்கக் கூடும்.
ஹெர்பெஸ் பாதிப்பிற்கான மற்ற காரணங்கள் – பாத்திரங்கள், உதட்டுச்சாயம், உதட்டு தைலம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுதல், குளிர் புண்கள் உடையவரிடம் வாய்வழி செக்ஸில் ஈடுபடுதல், பாதிக்கப்பட்டவருடன் உடலுறவில் ஈடுபடுதல், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, பாதிப்படைந்த பகுதியை தொட்டுவிட்டு, கை கழுவாமல் மற்ற உடல் பாகங்களை தொடுதல் போன்றவையும் காரணங்கள் ஆகும். ஹெர்பெஸ் நீர் அதிவேகமாக பரவும் தொற்று தன்மை உடையதாகும்.
ஹெர்பெஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள்-
![](https://static.wixstatic.com/media/79b069_a3bcc8b8d64b4f008b22b8790b61554d~mv2.png/v1/fill/w_599,h_449,al_c,q_85,enc_auto/79b069_a3bcc8b8d64b4f008b22b8790b61554d~mv2.png)
ஹெர்பெஸ் தொற்று ஏற்பட்ட உடனேயே அதன் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். வாயை சுற்றி குழிப்புண்கள், சிவப்படைதல், பாதிப்படைந்த பகுதியில் கொப்புளங்கள், சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு , அரிப்பு, வீக்கம், சோர்வடைதல், அசௌகரியமாக உணர்தல் போன்றவை ஏற்படலாம்.
இருந்தாலும், HSV தொற்று அடிக்கடி ஏற்பட்டால் முதலில் ஏற்பட்ட தாக்கத்தை விட சற்று அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் லேசான கொப்புளங்கள், புண்கள் வாயை சுற்றி ஏற்படுகின்றன. அதனால் நமைச்சல், அரிப்பு உண்டாகிறது. இவை அனைத்தும் 10 நாட்களுக்கு மேல் நீடிப்பதில்லை.
மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படாதவர்களுக்கும் ஹெர்பெஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும். சில நபர்களுக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் தோன்றுவதில்லை. அதனால் இதை கணிப்பது கடினம்.ஒருவரின் உடலினுள் பல வருடங்கள் இந்த வைரஸ் இருப்பது உண்டு. HSV வெளிப்புற பகுதிகளில் வெகு நேரம் தங்குவதில்லை. அதனால் ஒருவரை கட்டித் தழுவது, தொடுவது, கழிப்பறை இருப்பிடம் போன்றவற்றால் ஏற்படுவதில்லை.
தற்காப்பு முறைகள்
![](https://static.wixstatic.com/media/79b069_3dae7215f643495384648f6718454511~mv2.png/v1/fill/w_596,h_448,al_c,q_85,enc_auto/79b069_3dae7215f643495384648f6718454511~mv2.png)
வாயில் புண் இருப்பவரை முத்தமிடுவதை தவிர்க்கவும்.
பாதிக்கப்பட்டவரிடம் உடலுறவு கொள்ள வேண்டாம்.
உப்பு கலந்த நீரில் குளிக்கவும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம்.
பாதிப்படைந்தவரை தொட நேர்ந்தால், கைகளை நன்கு சுத்தமாக கழுவவும்.
பாதிக்கப்பட்ட புகுதியில் பெட்ரோலியம் ஜெல்லி தடவவும்
Thanks to Sources.
Credited to https://bit.ly/3Pr0j5m
Comentários