top of page

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்


*தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......*

😆😅😂🤣😀😄😁

கரியையும் சாம்பல்தூளையும்

கொடுத்து பல் விளக்கச்

சொன்னபோது ,


பட்டிக்காடு என இளித்த பற்கள்

இன்று வேரற்று போனபோது ,


ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க...


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


வெந்தயமும் சீகைக்காயும்

வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி என்றபோது ,


பித்துக்குளிகள் என

எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை

சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்

வந்தபின்பு ஓடுகின்றேன்

சீகைக்காய் வாங்க......


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


பாசிப் பயறோ கடலை மாவோ

அரைத்துக்குளி என்ற போது ,


லிரில் , லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்

அழகு சோப் என அத்தரித்திரங்கள்

கைகாட்டிய கட்டிகளை எல்லாம்

போட்டு தோள் சுறுங்கி

வயோதிகம் தெரிந்த பின்பு ,


ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


இருமலோ தும்மலோ வந்தபோது

துளசி தூதுவளை சுக்கு மிளகு

போட்டு கசாயம் தந்தபோது ,


முகத்தை சுளித்து காஃப் சிரப்

குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு ,


ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்

செடி வளர்க்க.....


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


வயிற்று வலி என்றபோது

வெறும் வயிற்றில் வெந்தயக் களியோ கற்றாழைச் சாறோ கொண்டு வந்து தந்தபோது

சீறி தூக்கி எறிந்து ,


ப்ருஃபென்னும் பெயின்கில்லரும் போட்டு கருப்பை பளுதடைந்த பின்பு ,


ஓடுகின்றேன் கற்றாழை

வளர்க்க......


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி

மணமாய் தந்தபோது ,


சன்ஃபிளவர் ஆயில் பார்

முகம் காட்டும் தூய்மை

எனக் கூறி முகத்தில் அறைய

பதிலுரைத்துவிட்டு ,


இன்று

உடல் நோய்க்கு இடமாக ஓடுகின்றேன்

செக்கு நோக்கி .....


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


மண்பானை சமையல்

மண்பானை குளிர் நீரை எல்லாம்

மாற்றி விட்டு ,


ஆர்வோ வாட்டர்

என புழு பூச்சி கூட வாழத்தகுதி

அற்ற நீரைக்குடித்து குடித்து

சவமானபின்பு


ஓடுகின்றேன் மண்பானை

வாங்க.....


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்.......


படித்த தலைமுறை எனும்

நாகரீகத்தில் திளைத்து

குருகுலக் கல்வியை

கோடிக்கணக்கான ரூபாய்

கல்வியாக்கி ,


கொல்லைத்துளசி

வைத்தியம் மறந்து ,


மாடிகளில்

குளீருட்டப்பட்ட அறைக்கு இலட்ச

இலட்சமாய்க் கொட்டி , நடைப்பிணமாக


வாழ்வில் எங்கே சுதந்திரம்

ஏது சுகாதாரம் என்று

எங்கெங்கோ திாிந்து அலைகிறேன்.....


*தாத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்.........


********


"மூத்தோா் சொல் வார்த்தையும்

முதுநெல்லிக்காயும்

முன்னே கசக்கும் ,

பின்னே இனிக்கும்.."

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page