top of page

சருமத்தை மிக மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் அழகு குறிப்புகள் !!


வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூடாது. நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும். தினமும் முடியாவிட்டாலும் வாரம் 3 நாட்கள் உபயோகியுங்கள். அற்புதமான மூலிகை மருந்து இது. குறிப்பாக வெயில் காலத்தில் பயன்படுத்தலாம்.

வறண்ட சரும பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்துவிடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது.


எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள் அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். வறண்ட சருமம் உடையவர்கள் பழங்களை முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் மிருதுவாகும்.

பயத்தம் மாவு அரைத்து வைத்துக் கொண்டு அதனை முகம் மற்றும் உடல் முழுக்க தேய்த்து சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் தொய்வாக, வறண்டுபோய்க் காட்சியளிக்கிறது என்றால், அதற்கு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் கிடைப்பதைவிட சூரிய ஒளியில்தான் அதிக அளவில் வைட்டமின் டி கிடைக்கும்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.

காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் முகம் புத்துணர்வோடு இருக்கும்.


சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் அழகு குறிப்புகள் !!


கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் முகத்தில் நிறம் கூடும். தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும். அல்லது, 1 தேக்கரண்டி கடலை எண்ணெய்யில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.

சிறிது சுத்தமான தேனை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இதைப் பயன்படுத்திய பிறகு சருமம் நிறமாகவும் மென்மையாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.


ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஃபேஸ் பேக் மாதிரி முகத்தில் பயன்படுத்தலாம்.

முகம் மற்றும் கழுத்து பகுதியில் இந்த கலவையை பூசி சுமார் 20 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் மிதமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இது முக ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


முக வறட்சி போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் திராட்சை சாறு !!


முக அழகை இரட்டிப்பாக்கவும் முகத்தின் கருமை, முகப்பருக்கள், முக வறட்சி போன்ற பல பிரச்சினைகளை திராட்சை சரி செய்கிறது. 1. யோகர்ட் 1 ஸ்பூன், 4 திராட்சை, எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன். செய்முறை : முதலில் திராட்சையுடன் யோகர்ட் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதன் பின் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, பொலிவான முகத்தை பெறலாம்.

2. தேவையானவை : முல்தானி மட்டி 1 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன் திராட்சை 4 எலுமிச்சை சாறு 1 ஸ்பூன். செய்முறை : முதலில் திராட்சையை அரைத்து கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முல்தானி மட்டியுடன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மாற்றும்.


3. தக்காளி 1, திராட்சை 8. செய்முறை : தக்காளியை முதலில் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் சேர்த்து திராட்சையையும் அரைத்து முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

4. பப்பாளி ஜுஸ் 1 ஸ்பூன் திராட்சை 4 தேன் 1 ஸ்பூன். செய்முறை : திராட்சை மற்றும் பாப்பாளியை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முக வறட்சி நீங்கி, என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.


உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பீச் பழம் !!



கோடைகாலத்தில் பீச் பழங்களை அதிகம் சாப்பிடலாம். இதில் உள்ள நீர்ச்சத்து உடல் வறட்சியை போக்கும். இரவில் படுக்கும் போது தோலுடன் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும். பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது. இந்த பழத்தை வைத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கலாம். மேலும் சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.

பீச் பழம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பீச் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் அதிக பசி எடுக்கும் உணர்வை குறைக்கும். இது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.


மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்த பீச் பழம் பயன்படுகிறது. பழத்தில் உள்ள சத்துக்கள் உணவுக்குழாய் பகுதியை சீராக இயங்க வைக்கும். பீச் பழம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். பீச் பழத்தின் இலைகளை கசாயம் செய்து அருந்தலாம். இதனால் வயிற்றுப் புழுக்கள் அழியும்.

பீச் பழத்தில் பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன.


Thanks to Sources.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/peach-fruit-provides-the-body-with-the-necessary-immunity-122052700074_1.html

10 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page