top of page

சருமக்கறைகளை அகற்றும் இந்த வீட்டு வைத்தியங்கள்!


ree

எல்லாப் பெண்களும் சுத்தமான பளபளக்கும் சருமம் வேண்டும் என ஏங்குவார்கள் ஆனால் சருமம் தூசிக்கும், சூரியக் கதிருக்கும், தூய்மை கேட்டிற்கும் மேலும் வேறு சுற்றுப்புற தனிமங்களுக்கும், அடிக்கடி கரும் புள்ளிகளும் கறைகளும் ஏற்படுத்தி முகத்தை பொலிவில்லாமல் செய்யும். இதற்கு சூரிய கதிர்வீச்சின் விளைவுதான் மிகப்பெரிய காரணம். சூரியக் கதிரில் ஒரேவிதமாக வெளிக்காட்டினால் சருமத்தின் மெலனின்(கருநிறம்வழங்கி) கூறு அதிகரிக்கும் மேலும் இது சருமத்தின் நிறத்தை பல இடங்களில் மாற்றி, கரும் புள்ளிகளை விளைவித்து சீரற்ற தோல் நிறத்திற்குகூட வழிவகுக்கும். குறைவான ஊட்டச்சத்தும் மேலும் பல மருந்துகளை உட்கொள்ளுதல்கூட முகத்தில் கரும் புள்ளிகளையும் கறைகளையும் ஏற்படுத்தலாம்.


இன்று, நாங்கள் கறைகளை நீக்க ஒரு சில வளமுடைய வீட்டு நிவாரணங்களை உங்களுக்குச் சொல்லப் போகிறோம்:


Table of Contents

  1. எலுமிச்சைச்சாறு மற்றும் தேன்

  2. பால் மற்றும் பாதாம் மாஸ்க்(முகக்காப்பு)

  3. உருளைக்கிழங்குகள்

  4. வேம்பு முகப்பூச்சு

  5. தக்காளிச் சாறு

  6. மசூர் பருப்பு மற்றும் சிரோஞ்சி பூச்சு

  7. ஆரஞ்சு தோல்

  8. கற்றாழை

1) எலுமிச்சைச்சாறு மற்றும் தேன்

ree

அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறையும் ஒரு தேக்கரண்டி தேனையும் கலந்து அதை பாதித்த இடங்களில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கழுவவும். எலுமிச்சைச் சாறு கரும் புள்ளிகள் மங்க உதவும் மற்றும் தேன் சருமத்தை ஈரப்பதமாகவும் ஊட்டமாகவும் வைக்கும். தொடர்ந்து ஒரேவிதமாக இந்தக் கலவையை முகத்தில் பயன்படுத்துவது கறைகளைக் குறைக்க உதவும்.

2) பால் மற்றும் பாதாம் மாஸ்க்(முகக்காப்பு

ree

ஒரு இரவு முழுதும் சில பாதாம் பருப்புகளை ஊற வைத்து பின் காலையில் அவற்றை ஒரு சாந்தாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது அதனுடன் இரண்டு தேக்கரண்டி பச்சைப் பாலை கலந்து உங்கள் முகத்தில் தடவவும். தொடர்ந்து ஒரேவிதமாக இந்த மாஸ்க்கை(முகக்காப்பை) தடவி வருவது உங்கள் முகம் தெளிவு பெற உதவும்.

3) உருளைக்கிழங்குகள்

ree

உங்கள் முகத்தில் தினமும் ஒரு சிறிய துண்டு பச்சை உருளையை தேய்த்தால் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களை உண்டாக்கும்! அது உங்கள் முகத்திலிருந்து புள்ளிகளையும் கறைகளையும் அகற்ற உதவும். தவிர நீங்கள் ஒரு பச்சை உருளை சாறுடன் பியூலர்ஸ் எர்த்தை (முல்தாணி மிட்டியை) கலந்து அதை வைத்து ஒரு மாஸ்க்(முகக்காப்பு) செய்யுங்கள். இந்த மாஸ்க்(முகக்காப்பு) முகத்தில் பயன்படுத்துவதால் கறைகளை அகற்றலாம் மேலும் உருளையில் இயற்கை சார்ந்த வெளிறச்செய்யும்(ப்ளீச்சிங்) பண்புகள் இருப்பதால், அது ஒரு தோள் பதனிடுதலிற்கு எதிரான பூச்சா(ஆன்டி-டேனிங்பேக்கா)க வேலை செய்யும்,


4) வேம்பு முகப்பூச்சு

ree

ஒரு கை வேப்ப இலைகளை ஒரு சில துளிகள் தண்ணீர் விட்டு அரைத்து பின் இந்த முகப்பூச்சை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். ஒரு அரை மணி நேரம் அப்படியே அதை வைத்து பின் கழுவவும். வேம்பின் நுண்ணுயிர் எதிர்ப்பு(ஆன்டிபாக்டீரியல்) பண்புகள் முகத்தைத் தெளிவாக்க உதவும்.


5) தக்காளிச் சாறு

ree

தக்காளிச் சாறு ஒரு இயற்கை சார்ந்த வெளிறச்செய்யும்(ப்ளீச்சிங்) தனிமம் மட்டுமல்லாமல், அது சருமத்திற்கு ஒரு வண்ணப்பூச்சா(டோன்னரா)கவும் வேலை செய்யும். ஒரு புதிய தாக்களியின் சாறை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். தொடர்ந்து ஒரேவிதமாக பயன்படுத்துவது கரும்புள்ளிகளையும் கறைகளையும் நீங்க உதவும்.


6) மசூர் பருப்பு மற்றும் சிரோஞ்சி பூச்சு

ree

தண்ணீரில் சில மசூர் பருப்புகளையும் பச்சைப் பாலில் சிரோஞ்சிகளையும் ஒரு சில மணி நேரங்கள் ஊற வைக்கவும். இப்பொழுது இவை அனைத்தையும் சேர்த்து கலவையாக்கி, ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறும் ஒரு தேக்கரண்டி தேனும் அதனுடன் சேர்க்கவும். ஒரு சுத்தமான மற்றும் ஒரு தெளிவான முகத்திற்கு இதை வாரத்திற்கு மூன்று முறை உங்கள் முகத்தில் பயன்படுத்தவும்.

7) ஆரஞ்சு தோல்

ree

சில ஆரஞ்சு தோல்களை எடுத்து பின் அவற்றை வெய்யிலில் காயவைக்கவும். இப்பொழுது அவற்றை நன்றாக பொடியாகும் வரை அரைத்து பின் ஒரு ஒரு தேக்கரண்டி தேனும் தயிரும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தில் இந்த சாந்தை தடவி 15-20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பாதிக்கப்பட்ட இடங்களில் சிறுது வட்டமாக அழுத்தி(மசாஜ் செய்து) விடவும் மேலும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.


8) கற்றாழை

ree

இப்போதெல்லாம், கற்றாழை மிக அதிக அளவில் சருமப் பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது மேலும் இந்தத் தாவிரத்தை பெரும்பாலான வீடுகளில் காணலாம். கற்றாழை கரைசலின் குணப்படுத்தும் பண்புகள் சூரிய புள்ளிகளையும் கறைகளையும் கையாளப் பயன்படுகிறது. கற்றாழை தாவிரத்தின் ஒரு கிளையில் இருந்து கரைசலை நீக்கவும். அதனுடன் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பின் உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் கழுவவும்.

படமூலம்: பப்லிக்டொமைன்பிக்சர்ஸ், பிலிக்கர், பெக்செல்ஸ், பிக்ஸாபே, 123ஆர்எப்


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3Ia4HE1

 
 
 

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page