top of page

சந்தனம் / குங்குமம் இடுவதின் உண்மை/பயன்கள்


சந்தனம் / குங்குமம் இடுவதின் உண்மை/பயன்கள்


Author: mprszen

2-3 minutes


சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு!


நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து.


குங்குமம் :-


மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு , நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.

0 views

Comentários


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page