சித்தர் வழிபாட்டில் அதி அற்புத அறிவியல்
சித்தர் வழிபாட்டில் அதி அற்புத அறிவியல்
நம்முடைய உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளது என்பது உங்களில் சிலர் அறிந்த ஒன்று. ஆனால் உண்மையில் பத்தாம் வாயில் என்கிற ஒரு வாயில் இருக்கிறது.
அதை இறையருளால் திறந்துகொண்டால் உயிர் இருக்கும் இடத்திற்கு செல்லலாம்.
மூச்சு காற்றை மேல் ஏற்றினால் காற்று உயிர் அக்னி வரை சென்று வெப்பத்தை உடம்பு முழுவதும் பாய்ச்சும். அதனால் உடம்பு சுட்டதேகமாக மாறும் பின்னர் ஞானதேகம் பெறலாம்.
பத்தாவது வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.
எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கே
எட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவே.
வள்ளலார் பாடல்.
சுப்பையா என்கிற ஒரு மகான் திருக்கழுக்குன்றத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
அவரின் விருப்பபடி . அவர் ஜீவ சமாதி அடைந்த 48 ஆம் நாள் அவரின் உடலை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து பார்த்ததில் அவருடைய உடல் கெடாமல் அப்படியே இருந்ததை கண்டு ஆச்சிர்யபட்டு அவருக்கு கோவில் கட்டியுள்ளார்கள். இது 1960 ம் ஆண்டு நாளிதழ்களில் பிரசுரிக்கபட்டுள்ளது. இதுவே சுட்டதேகதிற்கு எடுத்துகாட்டு.
மேலும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சில மகான்களின் உடல்கள் அகழ்வாராய்ச்சி பனியின் பொழுது கிடைத்துள்ளது. அவர்கள் உடலில் துளியும் நாற்றம் இல்லை. தாமரை பூ வாசம் வீசியது. அதே சமயம் அவர்கள் உடலில் எவ்வித திரவியமும் தடவப்பட்ட வில்லை. அதற்கான காரணம். சித்தர் வழிபாட்டில் உள்ள அதி அற்ப்புத அறிவியல்.
அந்த முனிவர். உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்தார். என்று நாம் எவ்வளவு புராண கதைகள் படித்து, கேள்விப்பட்டு இருப்போம். அவை கட்டுக்கதை என்று நக்கல் அடிப்பவர்களும் உண்டு. ஆனால். ரமண மஹரிஷி. உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்தவர். 20 ம் நுற்றாண்டில் வாழ்ந்தவர். அவரை நேரில் கண்டவர்களில். லக்சோப, லக்சம் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். நாம் ஏன்? 20 ம் நூற்றாண்டு வரை செல்ல வேண்டும். நாம் வாழும் இந்த காலத்தில் கூட. அவ்வாறு தவம் செய்யும் நூற்றிர்க்கும் மேற்பட்ட தபச்விகள். இந்தியா முழுவதும் உண்டு.
தெய்வ, மகான் படங்களை வரையும் பொழுது. தலைக்கு பின் ஒளிவட்டம் வரைவார்கள் அல்லவா.
அந்த ஒளிவட்டம் பெயர் தான் [ Aura ]
ஒரு மலருக்கு நிறம், மனம், குணம், வடிவம் இவை மட்டுமே உண்டு என்று மட்டுமே பலர் நினைத்தனர். மலருக்கு ஒளி [Aura] உண்டு என்பதை கிர்லியான் போட்டோகிராஃபி உருவாகும் வரை யாருமே அறியவில்லை. ஆனால் கிர்லியான் போட்டோகிராஃபி பற்றி எதுவும் அறிய முடியாத மகா கவி பாரதி.
சோலை மலர் ஒளியோ உன் சுந்தர புன்னகை தான்.
என்று மலருக்கு ஒளி உண்டு. என பாட்டினில் பாரதி பதிவு செய்தார். பாரதிக்கு தகவல் கொடுத்தது எது? பூ.
அது அவரை நேசிக்கிறது. எனவே தன் தகவல்களைப் பாட்டினில் பதிவு செய்யும் படி யாசித்தது.
சுக்கி சிவம்
Aura என்னும் சொல்லை. தமிழில் உள்ளொளி. சமிஸ்கிருதத்தில் தேஜஸ் என்போம். அந்த உள்ளொளியை படம் பிடிக்க என்றே. பிரத்யேகமாக ஒரு கேமரா கண்டு பிடித்த அற்ப்புத விஞ்ஞானி தான் இந்த கிர்லியான். இவரை பற்றி பின்னர் விரிவாக நாம் தனி பதிவே பார்ப்போம்.
அந்த Aura. அணைத்து உயிரினங்களிடமும் இருப்பது. பின்னர் கிர்லியான் போட்டோ கிராபி மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்கள் உட்பட.
அறிவியல் சூத்திரங்களுக்கு அடங்காத, அவற்றுக்கு அப்பாற்பட்ட ஞானத்தை தங்களது ஆராய்ச்சி அளவுகோல்களாலும் நவீன அறிவியல் உபகரணங்களாலும் அளந்து பார்ப்பதில் மேலை நாட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில். 4 ஆண்டுகளுக்கு முன். தியானம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
தியானம் செய்கிறபோது மூளையில் என்னவிதமான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? இதைக் கண்டுபிடிக்க தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் துறவிகளையும், யோகிகளையும் இத்தகைய ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள். சில நுட்பமான கருவிகளைக் கொண்டு தியானம் செய்பவர்களின் மூளையை கண்காணித்ததில், தியானத்தின் மூலம். உலகிலேயே அளவு கடந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிற ஒரு மனிதரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்!
அந்த மனிதரின் பெயர் ரிகார்டு. [ Matthieu Ricard] வயது 70. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புத்த துறவி.
யோகம், இந்திய தத்துவ ஞானம் பற்றிய ஆய்வில் இவரது கவனம் திரும்பியது. தியானம் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தியத் துறவிகளிடம் தியானம் பயின்று ஆராய்ச்சிக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டார்.
தியானம் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதற்காக அவர் இந்தியாவுக்கு வந்தார்.பல ஹிந்து, புத்த யோகிகளை அது சம்பந்தமாக பேட்டி எடுத்தார்.
தியானம் என்றால் என்ன? என்பதை. சொன்னால் புரிந்து கொள்ள முடியாது. அதை நீ கற்று கொண்டு பயிற்ச்சி செய்ய வேண்டும். அதை நீ அனுபவபூர்வமாக உணர வேண்டும். என்பதே. அணைத்து யோகிகளின் பதில்.
ரிக்கார்ட்ம் நான் தியானம் கற்று கொள்ள தயார் என்று. தான் பேட்டி எடுத்த அணைத்து துறவிகளிடமுமே. தியானம் கற்று கொண்டார். தியான முறைகளில் பல உண்டு. அவை அனைத்தையுமே இவர் கற்றார். அவற்றில். தனக்கு எந்த தியான முறை ஒத்துவரும் என்பதை சிந்தித்து. பின்னர் அதையே தொடர்ந்து தினமும் பயிற்ச்சி செய்தார்.
தியானம் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியா வந்த இவர் பின்னர் அதே தியானத்தால் ஈர்க்கப்பட்டு புத்த துறவியாக ஆனார்.
தொடர்ந்து 26 வருடங்கள் மௌன விரதம், தியானம் முதலியவற்றை இவர் மேற்கொண்டார்.
இவரது தலைமீது 256 சென்ஸார் கருவிகள் பொருத்தப்பட்டு “ஸ்கேன்’ செய்து பரிசோதித்து பார்த்ததில்.
ரிக்கார்டு தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர் மூளையில் இருந்து எல்லையற்ற ஆனந்தத்தை பிரதிபலிக்கும் “காமா’ கதிர்கள் [Gamma Brain Wave] வெளிப்படுவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
[Gamma Rays வேறு. Gamma Brain Wave வேறு].
இதுவரை. தியானம் சம்பந்தமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட. யோகிகளில் முதல் இடத்தில். இந்த ரிக்கார்ட் இருக்கிறார்.
குண்டலினி தியானம் தொடர்ந்து செய்தால். ஏழாம் ஆதாரமான சகஸ்ர தளத்தில் உள்ள அமிழ்து நமது உடல் முழுவதும் பரவும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த காமா கதிர் தான். அந்த அமிழ்து.
மிக கடுமையான தியானம், தவம் செய்தால். வெறும் கண்களுக்கு புலப்படாத. அந்த Aura என்னும். நமது உடலில் உள்ள உள்ளொளி. கண்களுக்கு புலப்படும்.
சக்தி வாய்ந்த மகான்களின் கோவில்களுக்கு. அதுவும் உயிர்நிலை கோவில்கள் எனப்படும் ஜீவ சமாதிகளுக்கு நாம் ஏன்? செல்ல வேண்டும். எதற்க்கு? செல்ல வேண்டும் என்பதன் காரணம் புரிகிறதா. இது வரை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தபட்ட துறவிகளில். Mathiew மிக அமைதியானவர், சக்தி வாய்ந்தவர். அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத ஞானிகளில். பலர். இவரை விட அமைதியானவர்கள், சக்தி வாய்ந்தவர்கள் இருப்பார்கள்.
Mathiew 26 ஆண்டுகள் மௌன விருதம் இருந்தார். சென்னை அம்பத்தூரில் 1991 இல் ஜீவசமாதி அடைந்த அம்பத்தூர் மௌன சாமிகள்
50 ஆண்டுகள் மௌன விருதம் இருந்திருக்கிறார். அவரை இதே போன்ற அறிவியல் கருவிகளின் மூலம் ஆராய்ந்து இருந்தால்?
அழிவு உடலுக்கு தான். ஆத்மாவுக்கு இல்லை. அதே போல். நமது மரபணுவுக்கும் இல்லை.
இது போன்ற ஞானியர் கோவில்களுக்கு நாம் செல்ல, செல்ல. நமது மனம் பக்குவம் அடைவது மட்டும் அல்ல. அங்கே படரும் அந்த தெய்வீக அதிர்வலை. பல ஜென்மங்களாக. நாம் சேர்த்து வைத்துள்ள தீய கர்ம வினைகளை சுட்டு எரித்து விடும். அதன் பின்னர் உங்கள் ஜாதகமே மாறி விடும். [ நல்ல விதமாக]
பல்லாயிரம் கோவில் படிகள் ஏறி இறங்கினாலும் கிடைக்காத புண்ணியம். பலகோடி முறை கங்கையில் முங்கி எழுந்தாலும் கிடைக்காத புண்ணியம். மௌன குரு, ஸ்ரீ சக்கரை அம்மன் போன்ற ஞானிகளை தொழுவதால் கிடைக்கும்.
ஞானிகளின் அதிச்டானங்களில் நாள். ஆக, ஆக காமா கதிர்கள் அதிகரிக்குமே ஒழிய குறையாது.
Comments