top of page

சோடசக்கலை அற்புதமான நேரமாக கருதப்படுவது ஏன்...?


அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். ஆவணி அமாவாசை திதி இன்று பிற்பகல் தொடங்கி நாளை வரை உள்ளது. சோடசக்கலை தியான நேரம் மாலை 3.36 முதல் 5.36 மணி வரையாகும். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.

மாதம் தோறும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அன்னதானத்திற்காக ஒதுக்கி வையுங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் செய்யும் அன்னதானத்திற்கு அதிக பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். நல்லவை அதிகம் நடக்கும். பணம் வீட்டில் அதிகம் சேரும்.


சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.


Thanks to Souces.

https://tamil.webdunia.com/article/hindu-religion-features/why-shodasa-kalai-is-considered-as-a-wonderful-time-122082600028_1.html

 
 
 

Comentarios


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page