top of page

கவனிக்கப்படாமல் போகக் கூடிய குடல்வால் அழற்சியின் அறிகுறிகள்


Writer. Nithya Lakshmi


இக்காலத்தில் பெரும்பாலான மக்கள் குடல்வால் அழற்சியின் மூலம் வலியினால் அவதிப்பட்டுள்ளனர். குடல்வால் அழற்சி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? குடல்வாலில் ஏற்படும் ஒரு வகை வீக்கமே ஆகும். அடிவயிற்றின் வலது புறத்தில், பெருங்குடலின் விறல் வடிவ நீடிப்பே குடல்வால் ஆகும். குடல்வால் அழற்சி இருந்தால், முதலில் தொப்புளைச் சுற்றியும் பிறகு வயிறு முழுவதும் பரவும் வலி ஏற்படும். வீக்கம் வளர வளர வலியும் அதிகரிக்கும். மருத்துவத் துறையில் காணப்படும் நெருக்கடியான நிலையில் குடல்வால் அழற்சியும் ஒன்றாகும். பெரும்பாலும் இதற்கு உடனடி அறுவை சிகிச்சைத் தேவைப்படும்.


பொதுவாக குடல்வால் அழற்சி எந்த வயதினருக்கும் ஏற்படும் என்றாலும், பெரும்பாலும் இது 10 முதல் 30 வயது உள்ளவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்றது. பல நேரம் இந்த வலி வயிற்றுப்புண் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்படுகிறது என்று தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுகின்றது. எனவே குடல்வால் அழற்சியின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். வீக்கமடைந்த குடல்வால் உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் அது வெடித்து, தொற்றிப் பொருட்கள் அடிவயிறு முழுவதும் பரவிவிடும்.

குடல்வால் அழற்சியைப் புரிந்துக் கொள்ள அதன் அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். எனவே அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வோம் –

Table of Contents 1.அடிவயிற்றின் வலது புறத்தில் திடீரென கடும் வலி

2.பசியின்மை

3.தீடீர் அடிவயிற்று வலி

4.சிறுநீர் கழிக்கும் பொழுது எரித்தல்

5.வாந்தி மற்றும் மயக்கம்

6.லேசான காய்ச்சல்

7.தொப்புள் அருகில் திடீர் வலி


1. அடிவயிற்றின் வலது புறத்தில் திடீரென கடும் வலி


குடல்வால் அழற்சி இருந்தால் வயிற்றில், முக்கியமாக அடிவயிற்றின் வலது புறத்தில் கடுமையான வலி இருக்கும்.

2. பசியின்மை


கடும் வலியுடன் கடும் பசியின்மையும் குடல்வால் அழற்சியுடன் ஏற்படும்.

3. தீடீர் அடிவயிற்று வலி


குடல்வால் அழற்சியின் வலி இருமலின் பொழுது, நடக்கும் பொழுது அல்லது வேறு ஏதேனும் உடல் வேலை செய்யும் பொழுது அதிகரிக்கும்.

4. சிறுநீர் கழிக்கும் பொழுது எரித்தல்


குடல்வால் அழற்சி சிறுநீர் கழிப்பதையும் பாதிக்கும். அது குடலைப் பாதித்து சிறுநீர் கழிக்கும் பொது கடும் வழியை ஏற்படுத்தும்.

5. வாந்தி மற்றும் மயக்கம்


குடல்வால் அழற்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செரிமானக் கோளாறு மிகவும் பொதுவானது. வாந்தியுடன் மயக்கம் மற்றும் வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.

6. லேசான காய்ச்சல்


நோய்தொற்றினால் காய்ச்சல் ஏற்படும். குடல்வால் அழற்சியாகி உடல் சூட்டை அதிகரித்து நோய் எதிர்ப்பு சத்தியை பலவீனப்படுத்தும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும்.

7. தொப்புள் அருகில் திடீர் வலி


தொப்புளைச் சுற்றி வலி ஆரம்பித்து வயிற்றின் வலது புறத்திற்குப் பரவும்.

குடல்வால் அழற்சி ஏற்பட நிறைய காரணங்கள் உண்டு. பல நேரம் சரியான காரணத்தை நாம் சரிவர அறிந்து கொள்ளுதல் கடினம். சில முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன-

  • குடல்வாலினுள் கட்டி

  • குடல்வாலில் சுவற்றில் திசு அதிகரித்தல்

  • வயிற்று வலி

  • வயிற்றில் அடிபடுதல்

  • வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி மற்றும் நுண்ணுயிரி

இதில் ஏதேனும் ஒன்று அல்லது அணைத்து அறிகுறிகளும் உங்களுக்கு உண்டு என்றால் உடனே மருத்துவரை அணுகவும்.

பட மூலம் – பிக்ஸாபே, பிலிக்ர், பேபிபீடியா, பப்ளிக் டொமைன் பைல்ஸ், சிம்ப்டமி, மூடி ஏர் போர்ஸ் பேஸ், பிக்ஸ் ஹியர்


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3Gf6IMG

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page