top of page

கண்டிப்பாக தெரிய வேண்டிய ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்


ree

Writer. Subhashni Venkatesh

இக்காலத்தில், ஹைப்போதைராய்டிசம் ஒரு சாதாரண பிரச்சனை ஆகிவிட்டது. இது எல்லா வயதுடையவர்களிடமும் காணப்படுகிறது, குழந்தைகள் உட்பட. கழுத்தின் அடியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி தைரொய்ட். இந்த சுரப்பி தைரொக்சின் என்னும் ஹோர்மோன் சுரப்பதற்கு பொறுப்பு, இந்த ஹார்மோன் தான் உடலின் சீரான இயக்கத்திற்கு தேவை. தைரொய்ட் சுரப்பி போதுமான அளவு தைரொக்சின் சுரக்க இயலாத பொழுது, அதற்கு பெயர் ஹைப்போதைராய்டிசம். இது உடலின் மெட்டபாலிக் இயக்கத்தை பாதிக்கும் ஏனென்றால் தைரொக்சின் ஹார்மோனின் முக்கிய வேலையே கலோரி மற்றும் ஆக்சிஜனை சக்தியாக மாற்றி உடலின் அணுக்கள் மற்றும் திசுக்களுக்கு அனுப்புவது தான். தைரொக்சின் குறைவாக சுரப்பதனால் உடலில் பல தொந்தரவுகள் ஏற்படும். ஹைப்போதைராய்டிசமின் ஆரம்பகட்ட அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளால் ஏற்படுபவை: Table of Contents 1. உடல் எடை அதிகரித்தல்

ree

உடலில் தைரொக்சின் குறைவதற்கான முதல் அறிகுறி திடீர் உடல் எடை அதிகரித்தல் தான். இது தான் பொதுவான மற்றும் விரைவான ஹைப்போதைராய்டிசமின் அறிகுறி.

2. அதிக குளிர்

ree

குளிராக உணருவது அல்லது அடிக்கடி சளி பிடிப்பது கூட ஹைப்போதைராய்டிசமின் அறிகுறி தான். இது ஏனென்றால் தைரொய்ட் தான் உடலின் தெர்மோஸ்டேட் மாதிரி இயங்கி உடல் சூட்டை சரியாக வைய்க்க உதவுகிறது. தைரொக்சின் குறைவதனால் உடலினால் சிறிது அளவு குளிர் கூட தாங்க முடியாது.

ree

3. தோல் மற்றும் முடி வறட்சி அடைதல்

தோல் வறட்சி ஹைப்போதைராய்டிசமின் அறிகுறியாக இருக்கலாம். தைரொக்சின் குறைபாடு உடலின் மெட்டபாலிசமை குறைக்கும். உடலும் குறைவாக வியர்க்கும். போதுமான அளவு ஈரப்பதம் இல்லாமை தோலை வறட்சியாக்கும். தைரொக்சின் குறைபாடு முடி வறட்சி, முடி கொட்டுதல் மற்றும் முடி உடைதல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

4. மன அழுத்தம் மற்றும் ஏமாற்றம்

ree

மன அழுத்தம் ஒரு தனி வியாதி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், மருத்துவர்கள் இதை ஹைப்போதைராய்டிசமின் அறிகுறியாக கொள்கிறார்கள். மருத்துவர்கள் சொல்கிறார்கள் நோயாளிகள் வெளிப்படையான காரணம் ஏதும் இன்றி அழுத்தத்துடனும் சோகமாகவும் இருப்பார்கள் என. அவர்கள் சோம்பலாகவும், சோர்வாகவும், கவனமின்மையுடன் பயங்கர தூக்கத்துடன் இருப்பார்கள். இவை எல்லாம் ஹைப்போதைராய்டிசமின் அறிகுறிகள்.

5. தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

ree

சிலருக்கு ஹைப்போதைராய்டிசம் தசை மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்படுத்தும். இவை தசைகளில் வலியாக இருக்கலாம், மென்மையடைதல், இடுப்பு மற்றும் தோளில் பிடித்தல், மற்றும் கை மற்றும் கால் மூட்டுகளில் வலி.

6. கழுத்தில் வீக்கம் மற்றும் சிரமம்

ree

தைரொய்ட் சுரப்பி மிகவும் விரிவடைந்தால், அது வீக்கத்தை ஏற்படுத்தும். இது முடிவில், கழுத்தில் வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகிவற்றை ஏற்படுத்தலாம். இருந்தாலும், இந்த அறிகுறி அரிதாக காணப்படுவது.

7. ஒழுங்கற்ற மாதவிடாய்

ree

மாதவிடாய் காலத்தில் பிடிப்பு, அதிக ரத்த போக்கு மற்றும் அதிக நாட்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது ஆகியவை ஹைப்போதைராய்டிசமின் அறிகுறியாக இருக்கலாம். தைரொக்சின் ஹார்மோனின் சுரப்பு குறையும் பொழுது, இரு சுழற்சிக்கு இடையில் இருக்கும் கால அளவு குறையும்.

8. உடலுறவில் நாட்டமின்மை

ree

சிலருக்கு ஹைப்போதைராய்டிசம் குறைந்த உடல் இச்சையை ஏற்படுத்தும். மருத்துவர்களின் நம்பிக்கை படி உடலில் தைரொக்சின் குறைவதே உடலுறவில் நாட்டம் குறைவதற்கான முதல் காரணம் என்கிறார்கள்.


மேலே குறிப்பிட பட்டுள்ள அறிகுறிகளில் உங்களுக்கு ஏதேனும் இருக்கிறதா? ஆம் என்றால், அவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகவும்.


பட மூலம்: விக்கிமீடியா, விக்கிபீடியா, பப்ளிக்டொமைன்பிக்சர்ஸ், பிலிக்கர், பிஸேல்ஸ், பிக்ஸாபே, அல்ஜமீலா, மின்


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3vtghCS

 
 
 

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page