top of page

கடுக்காயை kadukkai இரவு வெந்நீரில் கலந்து பருகினால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றம்

கடுக்காய். இந்த கடுக்காய் பார்த்தீங்கன்னா, பெற்ற தாயை விட மேலானது அப்படின்னு, அகத்தியர் சொல்லியிருக்கார். கடுக்காய் தின்னால், மிடுக்காய் வாழலாம். அப்படிங்கிற பழமொழி, எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். வயசான காலத்துல ஏற்படுற, உடல்நல பிரச்சனை அத்தனையையும் போக்கக்கூடியது, இந்த kadukkai கடுக்காய். நம்ம, தமிழர்கள் வகுத்த, அறு சுவைகள்ல, உப்பு சுவை மட்டும்தான், இதுல கிடையாது. மீதி, அஞ்சு சுவையும், இந்த கடுக்காயில இருக்கு. வாதம், பித்தம், கபம், இதை எல்லாத்தையும், நம்ம உடம்புல, சமநிலைப்படுத்தி, எந்த நோயும், நம்மளை தாக்காம, இது பாதுகாக்கும்.


காலையில் இஞ்சி, கடும் பகல்ல சுக்கு, மாலையில கடுக்காய், அப்படின்னு சொல்லுவாங்க. கடுக்காயை, மாலை வேளைகள்ல எடுத்துக்கிறது, ரொம்ப நல்லது. உடம்புக்கு தேவையான, இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இதை மாதிரி சுவைகள்ல, நாம துவர்ப்பு உணவுகளை, ரொம்ப குறைவாதான் சாப்பிடுறோம். துவர்ப்பு உணவு, அப்படின்னு சொன்னாலே, வாழைப்பூவை சொல்லலாம். அதையும் நாம, எப்பயோதான் எடுத்துக்கிறோம். ஆனா, இந்த kadukkai கடுக்காய் பாத்தீங்கன்னா, துவர்ப்பு சுவை உடையது. இது, நம்ம ரத்தத்துல இருக்கிற அழுக்குகள் எல்லாத்தையும், சுத்தமா நீக்கிடும். நாக்குல, சில பேருக்கு, ருசியே இல்லாம இருக்கும். அப்படிப்பட்டவங்களுக்கு, ருசியை உருவாக்கக் கூடியது, இந்த கடுக்காய்.


வளர்ற பிள்ளைங்கள்ல இருந்து, பெரியவங்க வரைக்கும், எல்லாருமே, இதை எடுத்துக்கலாம். இந்த கடுக்காய் பொடி, நாட்டு மருந்து கடைகள்ல, கிடைக்கும். ஆனா, நாட்டு மருந்து கடைகள்ல, எந்த அளவுக்கு, இதை, சுத்தமா செஞ்சு, விற்கிறாங்க? அப்படிங்கிறது, நமக்கு தெரியது . ஏன்னா, இதோட விதைகள் பாத்தீங்கன்னா, நஞ்சு. kadukkai கடுக்காயை, எப்படி பயன்படுத்தணும்ன்னா, முடிஞ்ச வரைக்கும், நீங்க, கடுக்காயை, கடுக்காயாவே, நாட்டு மருந்து கடைகள்ல, வாங்கணும். இதை, நீங்க, கல்வெட்டுல வச்சு, லேசா, நசுக்குங்க. அப்படி, நசுக்குனீங்கன்னா, இதோட, சதைப்பகுதி, தனியாவும், கொட்டை தனியாவும், வந்துரும். இந்த கொட்டையை, தனியா எடுத்துடணும். இந்த கொட்டைதான், விஷத்தன்மை கொண்டது. இடிக்கிறப்ப, கவனமா இடிக்கணும். கொட்டையை இடிச்சிடக் கூடாது. இதை மாதிரி, கொட்டையை தனியாவும், இதோட சதைப் பகுதியில, தனியாவும் எடுத்துக்கணும்.


இதை, இன்னொரு முறையிலயும், பயன்படுத்தலாம். கடுக்காயை வாங்கி, பசும்பாலை, அதுல விட்டு, வேக வைக்கணும். இது, நல்லா வெந்ததும், அந்த பாலை வடிகட்டிட்டு, வெயில்ல, கடுக்காயை காய வச்சு, அதுக்கப்புறம், மிக்ஸியில அரைச்சுக்கணும். இந்த முறையில, கடுக்காயை விதையோடயே அரைச்சுக்கலாம். ஏன்னா, பால்ல வேக வச்சதுனால, அதுல உள்ள நஞ்சு எல்லாம், நீங்கிடும். பொதுவாவே, கடுக்காய் பாத்தீங்கன்னா, கபத்தை போக்கக்கூடியது. திரிபலா சூரணத்துல, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், மூணுமே இருக்கும்.


இப்ப, இந்த தோலை, ஒரு blenderல போட்டு, நல்லா, பொடியா அரைச்சுக்கணுங்க. இது, கொரகொரப்பா இருந்ததுன்னா, சலிச்சுக்கும். இந்த, நீங்க காற்று புகாத டப்பாவுல வச்சு, ஒரு ஆறு மாசம் வரைக்கும் பயன்படுத்தலாம். சரி, இதை எப்படி பயன்படுத்தணும்? அதனால, என்ன நன்மை? நீங்க தினமும் இரவு படுக்க போறதுக்கு முன்னாடி, ஒரு அரை spoonக்கும் குறைவா, இந்த பொடியை எடுத்துக்குங்க. இதுல, ஒரு முக்கால் டம்ளர் அளவுக்கு, வெந்நீரை விடுங்க. வேற எதையும், இதுல சேர்க்கக்கூடாது. நல்லா கலக்கிக்கிங்க. அப்படியே குடிக்க வேண்டியதுதான். இது, துவர்ப்பு சுவையாகத்தான் இருக்கும்.


இதை தொடர்ந்து, ஒரு 48 நாள், இதை மாதிரி நீங்க இரவு குடிச்சிட்டு வாங்க. உங்க வாழ்நாள்ல, மலச்சிக்கல் அப்படிங்கிற பிரச்சனையே உங்களுக்கு வராது. நீங்க சாப்பிட்ட உணவுகள் எல்லாமே, எளிதா ஜீரணமாகும். Cholesterol அதிகமாக உள்ளவங்க, இந்த பொடியை இரவு வேளைகள்ல எடுத்துக்கும் போது, அவங்க உடம்புல உள்ள, தேவையற்ற கொழுப்புக்கள் எல்லாம் கரையும். உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க கூட, இந்த கடுக்காய் பொடியை, இரவு வேளைகள்ல எடுத்துக்கலாம்.


சில பேருக்கு, கண் பார்வை கோளாறு இருக்கும். அவங்களும், இதை தொடர்ந்து, ஒரு நாற்பத்தி எட்டு நாள் எடுத்துக்கணும். இன்னும் சிலருக்கு, பார்த்தாலுமே, நாக்குல ஒரு விதமான வறட்சி இருந்துகிட்டே இருக்கும். அவங்க, இதை எடுத்துக்கிறது மூலியமா, அந்த வறட்சி நீங்கும். மஞ்சள் காமாலை உள்ளவங்க, இதை தொடர்ந்து எடுத்துக்கிட்டாங்கன்னா, மஞ்சள் காமாலை கட்டுக்குள்ள வரும். தொழுநோய், தேமல், தோல் நோய், இதெல்லாம் உள்ளவங்க, தொடர்ந்து எடுத்துக்கலாம். வாயில, தொண்டயில, இரைப்பையில, குடல்ல, ஏதாவது புண்கள் இருந்ததுன்னா, அந்த புண்ணை ஆத்துற தன்மை, இந்த கடுக்காய் பொடிக்கு உண்டு. பித்த நோய்கள், அத்தனையையும் போக்கும்.


சிலருக்கு, எப்பவும் உஷ்ணமாவே இருக்கும். அவங்க இதை தொடர்ந்து எடுத்துக்கும் போது, அவங்க உடம்புல உள்ள உஷ்ணம் குறையும். சிறுநீர் குழாய்கள்ல உண்டாகிற கல் அடைப்பு, சிறுநீர் எரிச்சல், இது எல்லாத்தையும் இது போக்கும். Insulin போட்டுக்கிற சர்க்கரை நோயாளிகள் கூட, இதை எடுத்துக்கலாம். இது insulin தடையை நீக்கி, சர்க்கரை அளவை குறைக்கிறதுக்கு உதவும். அது மட்டும் இல்லைங்க, நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய, ரத்தக் குழாயில ஏற்படுற பாதிப்பை, இது சரி பண்ணும். உடல் பலவீனத்தைப் போக்கும்.


சமோசா – உடல் நலத்திற்கு கேடு? Read more


மூட்டு வலி இருந்ததுன்னா, குணமாக்கும். ஆண்களோட விந்தணுக்கள் குறைபாட்டை, இது சரி பண்ணும். அதுக்கு, இதை ஒரு மண்டலம், அதாவது 48 நாள், தொடர்ந்து இதை சாப்பிடணும். கடுக்காயை, kadukkai இப்படி மட்டும் இல்லைங்க. பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை உள்ளவங்க, இந்த கடுக்காய் பொடியை, தேங்காய் எண்ணெயிலே கலந்து, காய்ச்சி, தினமும் தலைக்குத் தேய்ச்சிட்டு வந்தாங்கன்னு வைச்சுக்குங்க, பேன், பொடுகு, இதெல்லாம் போயிடும். சில பேருக்கு, ஆசன வாயிலே அரிப்பு, எரிச்சல், இதெல்லாம் இருக்கும். அப்படிப்பட்டவங்க, இந்த கடுக்காய்ப் பொடியை, தண்ணியிலே போட்டு, நல்லா கொதிக்க வைக்கணும். மிதமான சூடு இருக்கிற சமைய அந்த தண்ணீரால, ஆசன வாயை அலம்பிடும். இது, அந்த இடத்துல உள்ள அரிப்பு, எரிச்சல், இதெல்லாம் நீங்குறதுக்கு உதவும். சில பேருக்கு, bacteriaவோட வளர்ச்சி காரணமா, வாயைத் திறந்தாலே, துர்நாற்றம் வீசும். அவங்க, இந்த காய்ச்சின நீரை வச்சு, வாய் கொப்பளிச்சுட்டு, வந்தாங்கன்னு, வச்சுக்கோங்க. நல்ல பலன் கொடுக்கும்.


இது, இந்த கெட்ட பாக்டீரியாக்களை கொன்னு, அந்த துர்நாற்றத்தை போக்கும். பல்வலி, ஈறு வலி, இதை மாதிரிலாம் உள்ளவங்க, கடுக்காய் பொடியை வச்சு, பல் தேய்க்கலாம். பல்லு உறுதியாகும். என்னதான், கடுக்காய் பொடி, இவ்வளவு நன்மை கொண்ட இருந்தா கூட, கர்ப்பமா இருக்கிற பெண்கள், கடுக்காயை, எந்த விதமான முறையிலேயும், சாப்பிடக் கூடாது. இந்த காணொளி, உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா, உங்க விருப்பத்தை, தெரிவியுங்க. உங்க நண்பர்களுக்கும், பகிருங்க. உங்க கருத்துக்களை, கீழ பதிவிடுங்க

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page