top of page

குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்?

குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்?

By Satheesh


குழந்தைகள் தெய்வத்திற்கு சமம் அன்று ஆன்றோர்கள் கூறுவதுண்டு. அனால் ஜோதிட ரீதியாக பார்த்தல் எல்லாருமே மனிதர்கள் தான். அந்த வகையில் ஒரு குழந்தையின் ஜாதக பலன் எப்போதில் இருந்து துவங்குகிறது. ஏன் குழந்தை பிறந்த சில வருடங்கள் கழித்தே ஜாதகம் பார்க்க சொல்கிறார்கள். இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்




பொதுவாக ஒரு கரு உருவாகி ஏறக்குறைய 100 நாட்கள் ஆனா பிறகு அந்த குழந்தைக்கான ஜாதகம், பலனை தர துடங்கிவிடும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதற்கு பல உதாரணங்களை நாமே கண்கூடாக காணலாம்.


கர்ப்பம் தரிக்கும்பொழுது வாடகை வீட்டில் இருந்த சிலர் குழந்தை பிறக்கும் சமயத்தில் புதிதாக வீடு வாங்கி சொந்த வீட்டில் வாழ்வர். இதற்கு காரணம் அந்த குழந்தையின் ஜாதகப்படி அது சொந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்பதே. இந்த உதாரணத்திற்கு நேர் எதிரானதாகவும் சில நிகழ்வுகள் நடப்பதுண்டு.



பொதுவாக குழந்தை பிறந்து 3 வருடங்களுக்கு பிறகுதான் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணிக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவர். இதற்கு காரணம், குழந்தையின் ஜாதகப்படி பெற்றோருக்கு நேரம் சரி இல்லாமல் இருந்தால் அது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான பாச பிணைப்பை பாதித்துவிடும் என்பதாலேயே.



பொதுவாக பெற்றோருக்கு ஜாதக ரீதியாக நல்ல தசாபுக்தி நடக்கும் காலகட்டத்தில் கரு உருவானால், அந்த குழந்தையின் ஜாதகம் சிறப்பாக இருக்கும். பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி இல்லாத காலகட்டத்தில் கரு உருவானால் அதன் ஜாதகம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆகையால் குழந்தையின் ஜாதகம் சிறப்பாய் அமைவதற்கும் அமையாமல் இருப்பதற்கும் பெற்றோர்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.


Sources

Thanks to Dheivegam

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page