கொழுப்பை குறைப்பதற்கு உதவும் ஐந்து உணவுகள்!
- 1stopview Vasanth

- Dec 30, 2022
- 2 min read

Writer. Nithya Lakshmi மனித உடல் இயற்கையாக கொழுப்பு உற்பத்தி செய்கிறது, அது புதிய செல்களை உருவாக்கவும், உணவை செரிக்க, பல ஹார்மோன்ஸ் உற்பத்தி செய்ய மற்றும் விட்டமின் டி உருவாக்கவும் உதவுகிறது. அது இரண்டு வகைப்படும் – நல்ல கொழுப்பு அல்லது ஹச்டிஎல் மற்றும் குறைந்த அழுத்தம் கொண்ட லிப்போ புரதம்(லோ டென்சிட்டி லிப்போப்ரோடீன்) அல்லது கெட்ட கொழுப்பு. கெட்ட கொழுப்பு, எல்டிஎல் என்றும் அழைக்கப்படுகிறது, அது பல வகையான இருதய நோய்களுக்கும் மேலும் இறுதியில் இருதய பாதிப்பிற்கும் காரணமாகிறது. உடலில் உள்ள எல்டிஎல் ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கத்தினால், சக்கரை நோய், ஈரல் அல்லது சிறுநீரக நோய் அல்லது சுறுசுறுப்பான தைரொய்ட் சுரப்பி ஆகியவற்றால் அதிகரிக்கும். டாக்டரின் பரிந்துரைப்படி, மருந்தினால் எல்டிஎல் குறைய உதவுகிறது. உடற்பயிற்சி, எடை குறைப்பது மற்றும் எப்போதும் குறிப்பிட்ட உணவை உண்பது உங்கள் கொழுப்பு அளவுகளை குறைக்கவும் உதவுகிறது. நாம் இந்த உணவு பொருட்கள் என்ன என்று பார்க்கலாம்- 1) பீன்ஸ் அல்லது அவரை பருப்பு வகைகள்

கிட்னி பீன்ஸ், பட்டாணி, மற்றும் லென்டில்ஸ் போன்ற பீன்ஸ் கொழுப்பை குறைக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது வெள்ளை அரிசி மற்றும் இறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் பயன்படுத்துங்கள். அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் தாவர புரதங்கள் எல்டிஎல் அளவு குறைவதற்கு மிகவும் உதவுகிறது. ஒரு நாளில் அவரை பருப்பு வகைகளை அரை கிண்ணமாவது உண்ணவும். இந்த பீன்ஸ்களை அதிக எண்ணெய் அல்லது நெய் அல்லது அதிக உப்புடன் சமைக்க கூடாது என்பது மிகவும் முக்கியம். பல வகையான பீன்ஸ் இருக்கிறது அதனால் உங்கள் சுவைக்கு ஏற்ப உங்களுக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது.
2) பூண்டு

வெகு நாட்களாக பூண்டு ஒரு அற்புதமான மருந்தாக கருதப்படுகிறது. பூண்டு இரத்த அழுத்தத்தை குறைகிறது மேலும் தொடர்ந்து உட்கொள்வதால் எல்டிஎல் மற்றும் ட்ரைகிலிசெரைட்களை கட்டுப்படுத்த தனித் திறன் கொண்டது. பழைய பூண்டு அதிக திறன்கொண்டதாக கருதப்படுகிறது. வெறுமனே இரண்டு முதல் மூன்று இடித்த பச்சை பூண்டு பற்களை தண்ணீருடன் விழுங்குவது அல்லது 300மில்லிகிராம் பூண்டு மாத்திரைகளை தினமும் உட்கொள்வது, உங்கள் கொழுப்பு அளவுகளை குறைப்பதற்கு அது உதவுகிறது.
3) ஓட்ஸ் மற்றும் பார்லி

குறிப்பாக ஆரோக்கியத்திற்கு, முக்கியமாக அதிக கொழுப்பும் மற்றும் உடல் பருமன் இருப்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட மாவு கெடுதல் உண்டாக்கும். வெள்ளை மாவில் செய்த பொருட்களை உண்பதற்கு பதிலாக, முழு தானிய மாவில் செய்த பொருட்கள், பர்கர், பிரட், பாஸ்தா மற்றும் நொறுக்குத்தீனி ஆகியவற்றிற்குகூட அதை பயன்படுத்துங்கள்.
ஒரு நாளில் மூன்று முறையும் முழு தானியங்கள் உணவு முறையில் சேர்த்துக்கொள்வது இருதய நோய் அபாயத்தை இருபது சதவிகிதம் குறைக்கலாம் என்று ஆராய்ச்சி நிரூபித்திருக்கிறது. நீங்கள் அதிகமாக அதை உட்கொண்டால், உங்களுக்கு அதிக பயன்கள் கிட்டும். ஒரு குவளை பார்லி அல்லது முழு கோதுமையுடன்கூடிய போரிட்ஜ் உண்பதால் ஏழு சதவிகிதம் எல்டிஎல் கொழுப்பு குறைகிறது. எந்த வகையாக கொழுப்பையும் சேர்க்காதீர்கள்.
4) பல வகையான காய்கறிகள்

நம் எல்லோருக்கும் பழங்களின் குணங்கள் தெரியும் ஆனால் கேரட், பட்டாணி, பச்சை பீன்ஸ், உருளைகள், மற்றும் கத்தரி போன்ற காய்களில் கரையும் நார்ச்சத்து, மற்றும் ஊட்டச்சத்து நிறைந்து இருக்கிறது. பச்சை பீன்ஸ் மற்றும் பட்டாணிகள் அவரை பருப்பு வகைகள், அதனால் இரட்டிப்பு பயன்கள் கிடைக்கும். பெரும்பாலான காய்கறிகளில் கலோரிஸ் குறைவாக இருக்கிறது, அதனால் அது எடை குறைப்பதற்கு உதவுகிறது. நீங்கள் அவற்றை பச்சையாக, பொரித்து அல்லது ஆவியில் வேக வைத்து உண்ணலாம் மற்றும் அவை அற்புதமாக உங்கள் கொழுப்பை குறைக்க உதவும்.
5) டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேடில் 75 சதவிகிதம் கோகோ இருக்கிறது அது உடலில் எல்டிஎல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. அதை உண்பதால், உங்கள் இனிப்பு தேடல் நின்றுவிடும் மேலும் உங்கள் கொழுப்பை குறைக்க அதிகமாக உதவுகிறது.
நல்ல ஆரோக்கியத்திற்கு கொழுப்பை குறைப்பது மிகவும் முக்கியம். எங்கள் பரிந்துரை என்னவென்றால் மருந்து பயன்படுத்துவதற்கு முன், மேலே உள்ள உணவுப்பொருட்களை உட்கொண்டு உங்களை கட்சிதமாக வைக்க முயற்சி செய்யுங்கள்.
படங்களின் ஆதாரங்கள்: பப்ளிக் டொமைன் பிக்சர்ஸ் பிக்ஸாபே, விக்கிமீடியா காமன்ஸ், பிலிக்கர், விக்கிபீடியா
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3WOE8IP





Comments