top of page

கால் வீக்கம் அடிக்கடி வருதா, இந்த வீட்டு வைத்தியம் பலன் தரும்

உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் ’எடீமா’ என்று பெயர். சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.


எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும். இருப்பினும், அடிவயிறு அல்லது முகத்தில் கூட எடீமா பாதிக்கக்கூடும். பிரசவம், பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் கூட வீக்கம் ஏற்படும்.


கர்ப்பிணிகள் காலில் வீக்கம் ஏற்பட்டால் தவறாது மருத்துவரை அணுக வேண்டும். வீக்கத்துடன் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

கால்களில் வீக்கம் குறைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்யலாம். அவை கீழ்வறுமாறு:

  1. தண்ணீர்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும்.

  2. ஐஸ் பேக், பேண்டேஜ்: காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.

  3. கால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.

  4. மது அருந்தக் கூடாது: மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

  5. கல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.

  6. எலுமிச்சை ஜூஸ்: உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.

  7. மக்னீசியம்: உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

  8. உப்பை குறைக்கவும்: உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

  9. கால் மசாஜ்: கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.

  10. பொட்டாசியம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

கால் வீக்கம் அடிக்கடி வருதா, இந்த வீட்டு வைத்தியம் பலன் தரும்

சிலருக்கு, குறிப்பாக அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு, பாதங்களில் வீக்கம் ஏற்படுவது பொதுவான பிரச்சனை.


கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு இயற்கையான வீட்டு வைத்தியம்: சிலருக்கு குறிப்பாக அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பாதங்களில் வீக்கம் ஏற்படுவது பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக ஏற்படலாம். ஆனால், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இந்தப் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெறலாம்.



பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா கால் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு இரண்டு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி 15 நிமிடம் வைக்கவும். பேக்கிங் சோடாவின் இந்த தீர்வு பாதங்களின் வீக்கத்தைப் போக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


மஞ்சள்: ஆயுர்வேதத்தில், மஞ்சள் ஒரு சிறந்த மருத்துவ ஆதாரமாக கூறப்படுகிறது. கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற மஞ்சளையும் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து பேஸ்ட் செய்து, வீக்கமுள்ள இடத்தில் தடவவும். இந்த பேஸ்ட் காய்ந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


தேங்காய் எண்ணெய் மசாஜ்: நீங்கள் அடிக்கடி வீக்கமடைந்த பாதங்களை அனுபவித்தால், தேங்காய் எண்ணெய் மசாஜ் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். பின்னர், பூண்டு கிராம்புகளை எண்ணெயில் வறுக்கவும். பூண்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை உங்கள் பாதங்களில் தடவி சுமார் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் வீக்கம் குறைவதுடன் வலியும் நீங்கும்.


ஐஸ் பேக்: உங்கள் பாதங்கள் வீங்கியிருந்தால், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளையும் இதற்குப் பயன்படுத்தலாம். வீக்கமடைந்த பகுதியை ஐஸ் கட்டியால் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.


கல் உப்பு: கல் உப்பு பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். சமையலின் சுவையை அதிகரிக்கும் கல் உப்பு, கால் வீக்கத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பை போட்டு அதில் உங்கள் கால்களை வைக்கவும். இது கால் வீக்கத்தில் நிவாரணம் தரும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்?

கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்..! இந்த கால் வீக்கத்திற்கு எடீமா என்று பெயர். இந்த கால் வீக்கமானது உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தேங்கும் போது ஏற்படுகிறது. இந்த வீக்கம் கால் பாதங்களில் மட்டும் தான் தோன்றும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் அடிவயிறு அல்லது முகத்தில் கூட வீக்கம் ஏற்படலாம். இத்தகைய வீக்கங்கள் சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. சரி இந்த கால் வீக்கம் எதனால் வருகிறது மற்றும் கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.

கால் வீக்கம் காரணம்:


  1. ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்த கால் வீக்கம் பிரச்சனை ஒருவருக்கு ஏற்படுகிறது.

  2. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் காரணமாகவும் கால் வீக்கம் ஏற்படும்.

  3. உங்கள் உடலில் ஏதாவது ஆரோக்கிய பிரச்சனை இருந்தாலும் இந்த கால் வீக்கம் ஏற்படலாம். அதாவது இதய நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த கால் வீக்கம் பிரச்சனை ஏற்படும்.

  4. சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் இந்த கால் பகுதியில் வீக்கம் ஏற்படும்.

  5. அதிகம் மது அருந்துபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

தண்ணீர்:


நம் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும். ஆகவே நம் உடலில் திரவங்கள் தேங்குவதால் இந்த வீக்கங்கள் ஏற்படுகிறது என்றால், தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இவ்வாறு தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.


Kaal Veekam Kuraiya – குளிர்ந்த நீர்:


பொதுவாக இந்த கால் வீக்கம் குறைய குளிர்ந்த நீரில் உங்கள் கால்களை சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். இவ்வாறு ஊறவைப்பதன் மூலம் கால் வீக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.


கால்களை உயர்த்தி வைத்தல்:


கால் வீக்கம் குறைய சிறந்த சிகிச்சை முறை என்று இதனை சொல்லலாம். அதாவது உட்காரும் போதோ அல்லது படுக்கும் போதோ தங்கள் கால்களை உயர்த்தி வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம். இப்படி செய்வதினால் கால் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.


மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்:


பொதுவாக அதிகம் மது அருந்துபவர்களுக்கு கால் பகுதி வீங்கிக்கொள்ளும். மது உடலில் உள்ள நீரை வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.


கல்லுப்பு:



கால் வீக்கம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.


எலுமிச்சை ஜூஸ்:


உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை வெளியேற்ற எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.


மக்னீசியம்:


உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.


உப்பை குறைக்கவும்:


இந்த கால் வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். மேலும் பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.


கால் மசாஜ்:


கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.


பொட்டாசியம்:


உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.


Thanks for Sources.

Credited to https://bit.ly/3FTkrdj

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page