top of page

குடலிறக்க நோயின் காரணம் மற்றும் அறிகுறிகள்



குடலிறக்க நோய் மிகவும் பொதுவான மருத்துவரால் குணப்படுத்த கூடிய நோய். இதில், உடலின் ஒரு பகுதி தன்னிடத்தில் இருந்து நகர்ந்து வேறிடத்தில் அமர்ந்து கொள்ளும். இது பொதுவாக வயிற்றில் ஏற்படும், மற்றும் தானாக சரியாகாது. இது ஏற்படும் மற்றொரு இடம் தொடையின் மேல் அல்லது தொப்புளில். மருத்துவர்கள் கூற்றின் படி, மூன்று வகையான குடலிறக்கங்கள் இருக்கின்றன. கவட்டை குடலிறக்கம் – இது தொடைகள் இணையுமிடத்தில் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும். தொப்புள்கொடி குடலிறக்கம் அல்லது தொப்புள் குடலிறக்கம் – இது பெண்களுக்கு பொதுவாக ஏற்படுவது. குடலிறக்கம் எதனால் ஏற்படுகின்றது என்று பாப்போம்:

Table of Contents 1.வயிறு தசைகளில் ஏற்படும் சேதம்

2.முதுமை

3.அறுவை சிகிச்சை

4.பிறவி குறைபாடு

5.தொடர்ந்த மலசிக்கல்

6.அதீத உடல் எடை


குடலிறக்கத்தின் அறிகுறிகள்


1. வயிறு தசைகளில் ஏற்படும் சேதம்


பலருக்கு தொடர் இருமல் இருக்கும், அது வயிற்றின் மெல்லிய தசைகளுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கும். சில சமயங்களில், ஒருவர் கனமான பொருளை தூக்கும் பொழுது வயிற்றின் தசைகள் இருகும், இதனால் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

2. முதுமை


இளைஞனர்களை விட முதியவர்களுக்கு குடலிறக்க பிரச்சனை அதிகம், ஏனென்றால் முதுமையில் தசைகள் பலவீனமடைந்து விடும். தோல் சரியும் பொழுது உடலில் உள்ள உறுப்புகள் தொங்கி போவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

3. அறுவை சிகிச்சை


எந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும் குடலிறக்கம் ஏற்படலாம். வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு எந்நேரமும் குடலிறக்கம் ஏற்படலாம். அதிக எடை உள்ள பெண்களுக்கு மெலிந்த பெண்களை விட அதிக வாய்ப்பு இருக்கிறது குடலிறக்கம் ஏற்படுவதற்கு.

4. பிறவி குறைபாடு


பிறந்த நாள் முதல் சிலருக்கு தொப்புளில் மேடிட்டு காணப்படும். இதுவும் ஒரு வகை குடலிறக்கம் தான். இது பொதுவாக வயிற்றின் சுவரில் ஏற்படும் பிறவி குறைபாடால் ஏற்படுகின்றன.

5. தொடர்ந்த மலசிக்கல்


மலசிக்கலினால் அவதி படும் ஆட்கள், சிறுநீர் கழிப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் செய்வர். இதனால் வயிற்றின் மெல்லிய தசைகள் கிழிய வாய்ப்புண்டு. இது நேர்ந்தால் குடலிறக்கமும் ஏற்படும்.

6. அதீத உடல் எடை


அதிக கொழுப்பு படிதலால் வயிற்றின் தசைகள் விரிவடையும், இதனால் அவை பலவீனமாகும். பலவீனமடைந்த தசைகள் தான் குடலிறக்கத்திற்கு முதல் காரணம்.

குடலிறக்கத்தின் அறிகுறிகள்

குடலிறக்கத்தின் அறிகுறிகள் தெளிவாக வரையறுக்க படவில்லை என்றாலும், உங்களுக்கு குடலிறக்கம் இருக்கிறதா இல்லையா என்று சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்:

  • வயிறு அல்லது குடல் பகுதியில் வீங்குதல்

  • தோலின் அடியில் கட்டி, அது நீங்கள் நிற்கும் பொழுது வருதல் அழுத்தினால் உள்ளே செல்லுதல்

  • தோல் கட்டியில் சிரமம் அல்லது வலி ஏற்படுதல்

  • நெடுநேரம் நிற்கும் பொழுதோ அல்லது சிறுநீர் கழிக்கும் பொழுதோ அசௌகரியம் ஏற்படுதல்

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனடியாக சந்தியுங்கள். பெரும்பாலும் குடலிறக்கத்தை தீர்க்கும் ஒரே வழி அறுவை சிகிச்சை தான். பெரும்பாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு குடலிறக்கம் ஏற்படுதல் மிக அரிது. இருந்தாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு கனமான பொருட்களை தூக்கினால் மீண்டும் வர வாய்ப்புண்டு. ஆகையால் குடலிறக்க சிகிச்சை பெற்ற ஒருவர் கனமான பொருட்களை தூக்கி வயிற்றின் தசைகளுக்கு அழுத்தம் தராமல் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுதல் நலம்.

பட மூலம்: www.pixabay.com, www.medium.com, https://commons.wikimedia.org, www.iimef.marines.mil, tuasaude


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3VAQvXP


0 views

Comentários


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page