ஒற்றை தலைவலியை குணப்படுத்த உதவும் யோகாசனங்கள்
இன்றைய காலக் கட்டத்தில் நம் வாழக்கை முறை மற்றும் சூழ்நிலைகளால் ஒற்றை தலைவலி நமக்கு மிக பொதுவாக ஆகி விட்டது. ஒற்றை தலைவலி என்பது நரம்பியல் கோளாறால் தலையின் ஒரு பக்கத்தில் ஏற்படும் தாங்க முடியாத வலியும், வெளிச்சம் மற்றும் சத்தத்தின் மேல் வெறுப்பும் உண்டாக்க கூடிய ஒன்றாகும். பொதுவாக ஒற்றை தலைவலி மிதமான வலியிலிருந்து கடுமையான வலி வரை இருக்கும். ஒரு மணி நேரம் முதல் ஒரு நாள் அல்லது ஓரு வாரம் வரை கூட நீடிக்கும். வாந்தி, வயிற்று பிரட்டல், மந்தம், லேசான தலை சுற்றல், கண்களின் பின்புறம் வலி, சிதைந்த பார்வை போன்றவை ஒற்றை தலை வலியின் அறிகுறிகள் ஆகும். மேலும் வெளிச்சத்தை பார்க்கும் பொழுதும், வேலை செய்யும் பொழுதும் வலி அதிகரிக்கும்.
மருந்துகள் மூலம் ஒற்றை தலை வலியை சமாளிக்கலாம் என்றாலும் சிகிச்சை மற்றும் சில வாழ்கை முறை மாற்றங்களான மன அழுத்தம் சமாளிப்பு, முறையான தூக்கம், உணவு திட்டத்தில் மாற்றம் , தினசரி யோகா பயிற்சி போன்றவை உங்களுக்கு இப்பிரச்னைக்கு தீர்வை அளிக்கும். ஒற்றை தலை வலியை உங்களிடமிருந்து விரட்டக் கூடிய சில யோகாசனங்களை இங்கு பார்ப்போம்.
1. பத்மாசனம்
எளிமையான தாமரை மலர் போல் அமரக் கூடிய இந்த பத்மாசனம் முறையாக தினசரி செய்வதால் உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இந்த ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, அடிக்கடி ஏற்படும் தலை வலியிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
2. பாலாசனம்
குழந்தை நிலை என சொல்லப்படும் இந்த பாலாசனம் உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்து, உங்கள் உடல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. ஒற்றை தலைவலியினால் உங்களை தாக்கும் வலியை ஒழிக்கக் கூடியது. உங்கள் இடுப்பு பகுதி, குதிகால், தொடை போன்ற பகுதிகளுக்கு நன்கு நீட்டி, விரிக்கப் படுவதால்,ஒற்றை தலைவலியால் ஏற்படும் வலி மற்றும் சோர்வை நீக்குகிறது.
3. உத்தனாசனம்
பாத ஹச்தாசனா என்றும் அழைக்கப் படும் உத்தனாசனம் நின்றபடி உடலை வளைக்கக் கூடிய ஒரு ஆசனம் ஆகும். இது முழு உடலையும் பலப் படுத்தி, நரம்பு மண்டலத்தை தூண்டி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதனால் மனம் அமைதி படுகிறது. மனம் அமைதிபடுவதால் ஒற்றை தலைவலி ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இந்த ஆசனம ஒற்றை தலைவலியால் ஏற்படும் வலியையும் ஒழிக்கிறது.
4. அதோ முகா ஸ்வானாசனா
முன்புறமாக குனிந்த நாயின் நிலை போன்ற ஆசனம் இது. இந்த ஆசனம் உங்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மனதையும் அமைதி படுத்தி, ஒற்றை தலைவலியால் உண்டாகும் வலியை குறைக்கிறது. முறையாக இப்பயிற்சியை தினசரி செய்தால் இந்நோயைக்கு சிகிச்சையாக அமையும்.
5. மர்ஜரியாசனம்
பசு மற்றும் பூனை போன்ற நிலைகளை சேர்த்து செய்யப்படும் இந்த ஆசனம் உங்கள் தசை மற்றும் நரம்புகளுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது. உங்கள் சுவாசம் இதனால் சீர் படுவதால் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. அதனால் வலியும் குறைகிறது. இந்த ஆசனம் செய்வதனால் அடிக்கடி ஏற்படும் ஒற்றை தலைவலி தடுக்கப்படுகிறது.
6. சேது பந்தாசனம்
பாலத்தின் நிலை போன்ற இந்த ஆசனம் இரத்தத்தை உங்கள் மூளைக்கு செலுத்த உதவுகிறது. அதனால் இரத்த அழுத்தம், பதட்டம் இரண்டிலிருந்தும் விடுபட முடிகிறது. மூளைக்கு செலுத்தப்படும் அதிகமான இரத்தத்தால் அடிக்கடி ஏற்படும் ஒற்றை தலைவலி குறைய தொடங்குகிறது.
7. பிரசாரித்த பாதோத்தாணாசனம்
பிரசாரித்த பாதோத்தாணாசனம், கால்களை அகற்றி வைத்து முன்புறமாக குனிந்து செய்யப்படும் ஆசனம் ஆகும். இந்த ஆசனம் உங்கள் உடல் மற்றும் தசைகளை வலுப் பெறச் செய்கிறது. மூளைக்கு செலுத்தப் படும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி உடலுக்கு சமன் நிலை அளிக்கிறது. மனம் மற்றும் மூலை அமைதி பெறுவதால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
8. ஷாவாசனம்
உங்கள் யோகா பயிற்சியின் கடைசி ஆசனமாக ஷாவாசனம் செய்யவும். பட்டாளத்தின் படை போன்ற இந்த நிலை உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி, மனதுக்கு அமைதி தருகிறது. அழுத்தம் குறைவதால் வலியும் நீங்குகிறது.
ஒற்றை தலைவலியை சமாளிக்க ஒரு சிறந்த வழி யோகாசனம் ஆகும். இருந்தாலும் இங்கு ஒரு விஷயத்தை சுட்டி காட்ட வேண்டியிருக்கிறது. நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரைகளை நிறுத்தப் போவதற்கு முன் உங்கள் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுவது மிக அவசியம். யோகா மருந்துகளுக்கான மாற்று வழி அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3VFxtzO
Comments