top of page

உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள்



ஒரு குறிப்பிட்ட ஆளவுக்கு மீறி இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சமயம், இரத்த அழுத்ததுக்கான அறிகுறிகள் வெளியே தெரிய வரும். இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது. இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் எனப்படுகிறது. நம் இதயம் சுருங்கும் போதும், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தும் போதும் தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகமாகவும் இதயம் விரிந்து இரத்தம் இதயத்தில் நிரம்பும்போது தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் குறைவாகவும் காணப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சராசரி அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும். ஆரம்பக் கால கட்டத்தில் இந்நோயால் பெரிய அளவான ஆபத்து ஏற்படாது என்றாலும், நாளடைவில் இதனால் கண் பார்வை, சிறுநீரகம், மூளை மற்றும் இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படும்.


தாங்கள் உயர் இரத்த அழுதத்தால் பாதிக்கப் பட்டிருப்பதையே உணராமல் பலர் உள்ளனர். இந்நோயை சமாளித்து, ஆரோக்யமான வாழ்க்கையை மேற்கொள்ள உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்திருப்பது மிக அவசியம்.


Table of Contents

  • இரத்த அழுத்தத்தின் வகைகள்:

  • அறிகுறிகள்:

  • உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • இந்த எளிமையான வழிமுறைகளை முறையாக பின்பற்றினால், எளிதாக உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்கலாம்:

இரத்த அழுத்தத்தின் வகைகள்:

இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன – அதில் ஒன்று ஆரம்பக்கட்ட நிலை. இதில் இரத்த அழுத்தத்தின் அளவு பல வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வரும், ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் வெளியே தெரியாது. மற்றொரு நிலையானது இரண்டாம் கட்ட நிலை. இரத்த அழுத்தம் திடீரென்று அதிகரிக்கும். இந்த திடீர் உயர்வு, கர்ப்பம், மாத்திரை மருந்து விளைவுகள், போதை பொருட்கள், கட்டி, சிறுநீரக கோளாறு போன்றவற்றால் ஏற்படலாம்.

அறிகுறிகள்:

உயர் இரத்த அழுத்தத்தினை ஆரம்ப நிலையில் கண்டுப்பிடிக்கவோ, உணரவோ முடியாது என்றாலும் நாளடைவில் கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் தென்படத் தொடங்கும். இவை கண்டிப்பாக இரத்த கொதிப்பினால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நலம்.

  • சிறுநீரில் இரத்தம்

  • கடுமையான தலை வலி

  • மூச்சு திணறல்

  • தலைச் சுற்றல் அல்லது மயக்க உணர்வு

  • மூக்கில் இரத்தக் கசிவு

  • மங்கலான கண் பார்வை

  • நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • உடல் பருமனால் இரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். உடல் எடை கூடும் பொழுது, உங்கள் உடலால் எளிதாக இரத்தத்தை இதயத்திற்கு செலுத்துவது கடினமாகிறது.

  • புகையிலை உபயோகிப்பதால் தமனி சுவர்கள் குறுகி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

  • உங்கள் உணவில் சேர்க்கப்படும் அதிகப்படியான உப்பு, உடலில் நீரை அதிகமாக்கி உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.

  • உடற்பயிற்சி முறைப்படி செய்யவில்லை என்றால் இதயத்துடிப்பு அதிகமாகும். அதனால் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

  • உங்கள் குடும்பம் அல்லது பரம்பரையில் யாருக்கேனும் உயர் இரத்த அழுத்தம் இருந்திருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்பிருக்கிறது.

  • வேலை பளு மற்றும் மன அழுத்தமும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

இந்த எளிமையான வழிமுறைகளை முறையாக பின்பற்றினால், எளிதாக உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்கலாம்:

  • உங்கள் உடல் பருமனை முறையான பயிற்சி மூலம் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். தினமும் 30 நிமிட பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அல்லது ஒரு வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சியை இலக்காக வைத்து முயற்சிக்க வேண்டும். இது உங்கள் எடையை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ஆரோக்யமான இதய செயல்பாட்டிற்கு வழி வகுக்கும்.

  • தினசரி 10-20 நிமிடங்கள் தியானம் செய்வது மன அழுத்தத்தை சமாளிக்க மிகச் சிறந்த வழியாகும். உடல் மசாஜ் செய்துக் கொள்வது நல்ல புத்துணர்வை அளிக்கும். யோகாசனங்கள் செய்வதன் மூலம் எளிதாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

  • உங்கள் தினசரி உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். துரித உணவு, எண்ணெய் பண்டங்கள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். அதிக நீர் அருந்தவும்.

  • புகைப்பிடித்தல், மது அருந்துதல் இரண்டையும் தவிர்க்கவும்.

Thanks for the Sources.

Credited to https://bit.ly/3WCKag0

Image Source: pixnio, libreshot,pixabay

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page