உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க!
சாதாரண ரொட்டிகளை தவிர்த்து கோதுமையிலான ரொட்டிகளை சாப்பிட வேண்டும் மற்றும் வழக்கமாக சாப்பிடுவதை விட அளவை குறைத்து சாப்பிட வேண்டும்.
Written by - RK Spark
உடல் எடையை குறைக்க சாப்பாட்டை தவிர்க்க கூடாது.
சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம்.
உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து அவசியம்.
![](https://static.wixstatic.com/media/79b069_46e435cfbef04adb9e5462d80e9168fa~mv2.png/v1/fill/w_600,h_336,al_c,q_85,enc_auto/79b069_46e435cfbef04adb9e5462d80e9168fa~mv2.png)
பலரும் உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள், டயட்டுகளை கடைபிடிப்பது என்று பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் சாப்பாட்டை தவிர்ப்பார்கள், ஆனால் அது தவறு, உணவை தவிர்க்கக்கூடாது. நாம் குறைவாக சாப்பிட்டாலும் அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டியது அவசியம். உடல் எடை குறைப்பு என்று வரும்போது நீங்கள் சாப்பிடுவது முக்கியமல்ல எதை சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம்.
உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் உள்ளவர்கள் உடலுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்தினை பெறாவிட்டால் அவர்களுக்கு சீக்கிரமே உடல் சோர்வடைந்துவிடும், இதனால் சிலர் அந்த செயல்முறையையே நிறுத்திவிடுவார்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மினி-மீல்ஸ்களை எடுத்துக்கொள்வது நல்லது, இதன் மூலம் பசி கட்டுப்படும் மற்றும் உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். இந்த மினி-மீல்ஸ்களை குறைந்தது 3 மணி நேரம் இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும், எந்த மாதிரியான மினி மீல்ஸ் சாப்பிடலாம் என்று இப்போது காண்போம்.
![](https://static.wixstatic.com/media/79b069_c28709181c744f55bba9425e0c96b1d7~mv2.png/v1/fill/w_578,h_322,al_c,q_85,enc_auto/79b069_c28709181c744f55bba9425e0c96b1d7~mv2.png)
- 1 கப் சோயா பாலுடன் பாதாம் பருப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.
- 1 ஸ்லைஸ் முழு கோதுமை பிரெட் கொண்ட சாண்ட்விச் சாப்பிட வேண்டும், அதில் பில்லிங்க்சாக கோழித்துண்டுகள், வெள்ளரிக்காய், தக்காளி, சட்னி அல்லது பன்னீர் வைத்து சாப்பிடலாம்.
- 1 கப் முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து சாலட் சாப்பிடலாம்.
- 1:1 என்கிற விகிதத்தில் வேர்கடலையுடன், கொண்டைக்கடலை சேர்த்து சாப்பிடலாம்.
- சாதாரண ரொட்டிகளை தவிர்த்து கோதுமையிலான ரொட்டிகளை சாப்பிட வேண்டும் மற்றும் வழக்கமாக சாப்பிடுவதை விட அளவை குறைத்து சாப்பிட வேண்டும்.
- 1 டோஸ்ட் உடன் இரண்டு வெள்ளைக்கரு ஆம்ப்லேட் அல்லது ஒரு முழு முட்டையில் செய்த ஆம்ப்லேட் சாப்பிட வேண்டும்.
- ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, 20 செர்ரி பழங்கள் அல்லது 1 பவுல் தர்பூசணிப்பழம் போன்ற ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம்.
- 1 கப் பருப்பு அல்லது தயிர் சேர்த்து சாலட் சாப்பிடலாம்
Thanks to Sources.
Credited to Zeenews.india.com
https://bit.ly/3j45mN3
Comentarios