உங்கள் கல்லீரலை சுத்தப் படுத்த உதவும் 12 உணவுகள்
- 1stopview Vasanth
- Jan 7, 2023
- 1 min read

கல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான அமைப்பிலிருந்து பெறப்படும் இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்தும் முன் அதை வடிகட்டி அனுப்புகிறது கல்லீரல். கல்லீரல் ரசாயனங்கள், மருந்துகள் போன்றவற்றால் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்கி, சமன் படுத்தி நச்சு பொருள்களை உடலை விட்டு வெளியேற்றுகிறது.
கல்லீரலின் முறையான செயல்பாட்டிற்கும், அதை சுத்தப் படுத்தவும் உதவக் கூடிய உணவுகளை பற்றி இங்கு காண்போம்:
Table of Contents
1. பீட்ரூட்
2. காரட்
3. கிரீன் டீ
4. ஆப்பிள்
5. ப்ரோகொலி
6. எலுமிச்சை
7. வால்நட்
8. முட்டைகோஸ்
9. காலிப்ளவர்
10. பசலை கீரை
11. பூண்டு
12. மஞ்சள்
1.பீட்ரூட்

பீட்ரூட்டில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும், நச்சுத்தன்மையை வெளியேற்றும் தன்மையும் நிறைந்து இருக்கிறது. அதில் உள்ள அழற்சி நீக்கும் குணம் சுத்தம் செய்யவும், நச்சு பொருகளை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.
2.காரட்

காரட்டில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் கல்லீரலில் உள்ள நச்சு பொருளை குறைக்க உதவுகிறது.
3.கிரீன் டீ

கிரீன் டீ ஆன்டிஆக்சிடன்ட்களை அதிகரித்து உடலை மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது.
4.ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் மற்றும் மாலிக் ஆசிட் இருப்பதால் நச்சு பொருள்களையும் கார்சினோஜென்ஸ் எனப்படும் புற்றுநோய் காரணிகளையும் வெளியேற்ற உதவுகிறது.
5.ப்ரோகொலி

ப்ரொகொலி ஒரு ப்ராஸ்ஸிகா காய்கறி ஆகும். இது உங்கள் கல்லீரலில் சேரும் கொழுப்பை நிறுத்த உதவுகிறது. இதனால் கல்லீரல் சுருங்காமல், தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
6. எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமாக உள்ள வைட்டமின்C, கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
7.வால்நட்

வால்நட்களில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கல்லீரலை சுத்தப் படுத்தி நச்சுத்தன்மையை அழிக்கிறது.
8.முட்டைகோஸ்

முட்டைகோஸ் அதில் உள்ள சல்பர் உதவியுடன் கல்லீரலில் ஏற்படும் நச்சு பொருள்களை உடைத்து, எளிதாக அவற்றை வெளியேற்ற உதவுகிறது.
9.காலிப்ளவர்

காலிப்ளவர் கல்லீரலுக்கு அதில் உள்ள நச்சு பொருள்களை சுலபமாக வெளியே தள்ள உதவுகிறது.
10.பசலை கீரை

பசலைக் கீரை போன்ற பச்சை இல்லை கீரை வகைகள் கல்லீரலின் முறையான செயலாற்றலுக்கு உதவுகிறது.
11.பூண்டு

பூண்டில் உள்ள அலிசின் மற்றும் செலிநியம என்ற இரட்டை இயற்கை கலவைகள் கல்லீரலை சுத்தமாக்க உதவுகின்றன.
12.மஞ்சள்

மஞ்சள் கல்லீரலுக்கு அதில் உள்ள நச்சு பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் கல்லீரலில் பித்த நீர் சுரக்க உதவுகிறது.
Sources: BBC Good Food, CureJoy, DIY Network, Fifteen Spatulas, Fisher Titus Medical Center, Global Healing Center, Good Housekeeping, Healthline, HuffPost, IndiWo, Medical News Today, Medium, Mind Body Green, Organic Facts, Pixabay, Savory Lotus, Swanson Vitamins, Verywell Fit, WebMD.
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3vpWhkl
Comments