top of page

இளமையில் தோன்றும் நரை முடியை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !! - தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை நீக்கும்


கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றை தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.

மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.


நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து விடும்.

அவுரிப் பொடி, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் நாளடைவில் தலை முடி நன்கு கருமை நிறமாக மாறி விடும். வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்றாக சிகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரைமுடி மறைந்து கருமையான தலை முடியை பெற முடியும்.


தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை நீக்கும் தேங்காய் எண்ணெய் !!


தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய்யை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளித்தால் உடலில் உள்ள உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும். தேங்காய் எண்ணெய்யில் தோலை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளன. தலைமுடி கொட்டுதல், பித்த நரை, இளநரை, பொடுகு, வழுக்கை போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய்யை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

தினமும் காலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றி ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணெய்யை துப்பி விட வேண்டும். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்சொத்தை, ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.


தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே இருக்கும் நோய்களை இருந்த இடம் தெரியாமல் வெளியேற்றும்.

வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

சிறுநீரகங்களில் அதிகம் உப்பு சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.


தலைமுடி உதிர்வை தடுக்க சில இயற்கை முறையிலான வைத்திய குறிப்புகள் !!



தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி, வைட்டமின் இ மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.

தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். தினமும் தலைக்கு குளித்து தலையில் அழுக்கு தூசு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். பொடுகை நீக்கும் மருந்தை பயன்படுத்தி தலையை பொடுகு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.

கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெற முடியும். கறிவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்புசத்து தலைமுடிக்கு அதிக அளவு போஷக்கினை கொடுத்து முடி உதிர்வை தடுக்கிறது.

வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிரை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.

தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை அலசுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம். வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.


Thanks to Sources.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/some-natural-remedies-to-prevent-hair-fall-122083000040_1.html

1 view

Kommentarer


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page