top of page

இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் ஐந்து உணவுகள்:



நம் உடலுக்கு எந்தவிதமான உபாதைகளோ,தொல்லைகள் வந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டு தலைகீழாய் மாறுவது நமது தினசரி வேலைகளும், சாப்பாடும்தான். இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால், உடலின் அங்கங்கள் அனைத்தும் பாதிப்படையும். நாம் உட்கொள்ளும் உணவில் சில பத்திய முறைகளைக் கடைபிடித்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கலாம்.


இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் சில உணவு வகைகள் இதோ:


Table of Contents

1) புரதச்சத்து(புரோட்டீன்):

2) மாவுச்சத்து:

3) கீரை வகைகள்:

4) பால் பொருட்கள்:

5) உலர் பழங்கள்:


1) புரதச்சத்து(புரோட்டீன்):


புரதச்சத்து (புரோட்டீன்) அதிகமுள்ள உணவுகள் “குளுக்கோனியோஜெனெஸிஸ்” எனப்படும் சர்க்கரை அளவு கூடுவதால் உண்டாகும் தசை இழப்பை சரிசெய்யக்கூடியவை. கோழியிறைச்சி, முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளும், பருப்புகள், பால், பீன்ஸ், கஞ்சி மற்றும் இதர பால் பொருட்கள் போன்ற சைவ உணவுகளும் உட்கொள்வது புரதச்சத்தை அதிகரிக்கும்

2) மாவுச்சத்து:


உங்கள் உடல் பலம்பெற மாவுச்சத்து தேவை எனினும், அதிகமான மாவுச்சத்தினால் உடல் எடை அதிகரித்துவிடும். அதனால், உணவில் மாவுச்சத்து உள்ள பொருட்களை ஒரு குறிப்பிட்ட அளவு சேர்த்து பத்தியமாக உண்பது பயனைத்தரும். முழுதானியம், சிகப்பரிசி, பாதாம், சிவப்பு கிட்னி பீன்ஸ், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் முளைவிட்ட பயிர்களை உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி உடல் எடையும் சீராக பராமரிக்கலாம்.

3) கீரை வகைகள்:

மாவுப்பசையற்ற கீரைவகைகளை நம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரைவகைகள் சர்க்கரை அளவை பராமரிக்க மட்டுமின்றி, உடலிலுள்ள இரும்புச்சத்து குறைபாட்டையும் நீக்குகின்றன. இவற்றில் நார்ச்சத்து மிகுந்தும், மாவுச்சத்து குறைந்தும் காணப்படுவதால், பசலைக்கீரை, பர்க்கோலி, வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்ணீர்விட்டாங்கிழங்கு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், நார்ச்சத்தும், கனிமங்களும் அதிகமாக கிடைக்கும்

4) பால் பொருட்கள்:

கொழுப்புச்சத்து குறைவாக உள்ள பால் மற்றும் சீஸ், தயிர் போன்ற பால் பொருட்களை பயன்படுத்துவதால், புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கும். இவை சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இவற்றிலுள்ள இயற்கையான சர்க்கரைச் சத்து மற்றும் பால் புரதங்கள் வயிற்றின் உணவுச் சுழற்சி அளவைக் குறைத்து, வயிறார சாப்பிட்ட உணர்வைத்தரும். அதனால், நம் உடல் அதிக நேரம் சுறுசுறுப்புடன் இருக்கும்

5) உலர் பழங்கள்:

கொழுப்புச் சத்து குறைந்த அளவு உள்ள உலர் பழங்கள் ஒரு சிறந்த உணவாகும். உடலின் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, வாதுமை, பாதாம் போன்ற உலர் பழங்களை உட்கொள்வது சிறந்தது,. சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சீமை வாதுமை (ஆப்ரிகாட்) மற்றும் பழப்பாகு (ஜாம்) வகைகளை தவிர்க்க வேண்டும்.


குறிப்பு: உங்கள் உடலிலுள்ள சர்க்கரை அளவை தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உங்கள் உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உணவு 60:20:20 என்ற விகிதத்தில், அதாவது, 60 விழுக்காடு மாவுச்சத்து, 20 விழுக்க்காடு கொழுப்புச்சத்து மற்றும் 20 விழுக்காடு புரதச்சத்து என்ற வகையில் அமைத்துக்கொள்வது சிறப்பானது.

மூலப்படங்கள் நச்சுரல் ஃபொட் சீரீஸ், லீன் அண்ட் மஸ்குலர், மதர் ஆஃப் ஹெல்த், மெடிக்கல் நியூஸ் டுடே, டிஜுவானா பாரியாட்ரிக் செண்டர், ஸ்மாக் யு கே ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது


Thanks for the Sources.

Credited to https://bit.ly/3VCGcTe

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page