இந்த வீட்டு சிகிச்சை முறைகளை பின்பற்றி உங்கள் கழுத்து பிடிப்பை விரட்டுங்கள்!
- 1stopview Vasanth
- Jan 6, 2023
- 2 min read

உங்கள் கழுத்து பகுதியில் நீங்கள் கனத்தை உணர்வது, கழுத்தை திருப்பி பார்ப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் அதை கழுத்து பிடிப்பு என்கிறோம். இது பெரும்பாலும் நீண்ட தூக்கத்திற்கு பிறகு அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்து இருந்தாலோ ஏற்படுகிறது. தூங்கும் பொழுது எதோ மிக கடினமான வேலையை செய்தது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கும். கழுத்து பிடிப்பு ஏற்பட நாம் பின்பற்றும் சில தவறான ப்பழக்க வழக்கங்களே ஆகும். அவற்றில் சில, தலையை குனிந்தவாறு அதிக நேரம் அலைபேசி உபயோகிப்பது, நிமிர்ந்து நேராக உட்காராமல் தவறான நிலையில் அமருதல், மோசமான தலையணை, தவறாக படுத்து உறங்குதல், அழுத்தம் அல்லது உடல் உறுப்புகளும் மூட்டுகளும் சேதமடையும் ஆஸ்டியோஆர்திரைட்டிஸ் என்று சொல்லப்படும் நிலை போன்றவை ஆகும்.
இது ஒரு தீவிர பிரச்சினை இல்லாவிட்டாலும், சரியான முறையில் கவனித்தால் இந்த எரிச்சலூட்டும் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு நம் தினசரி வேலைகளை சரிவர எளிதாக செய்யலாம். கழுத்து பிடிப்பிலிருந்து விடுபட கீழே சில வீட்டு சிகிச்சை முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது:
Table of Contents
1. கழுத்து பயிற்சி
2. மஞ்சள்
3. சூடான அழுத்தம் / ஒத்தடம்
4. எப்சம் உப்பு
5. மஸாஜ்
1. கழுத்து பயிற்சி

தோள்பட்டையிலும், கழுத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஏற்படும் வலியை கழுத்திற்கு பயிற்சி அளிப்பதன் மூலம் குணமாக்க முடியும்.
செய்யும் முறை:
நிமிர்ந்து உட்கார்ந்துக் கொண்டு உங்கள் தலையை உங்கள் நெஞ்சு நோக்கி குனியவும். உங்கள் தாடை உங்கள் நெஞ்சை தொட வேண்டும்.
பிறகு பின் புறமாக வளைந்து மேற்கூரையை பார்க்கவும்.
இதை மெதுவாக 10 முறை அல்லது உங்களால் முடியும் வரை தொடர்ந்து செய்யவும்.
அதே முறையில் உங்கள் தலையை நேராக வைத்துக் கொண்டு, வலப்புறமாக திரும்பவும். பின் இடப் புறம் திரும்பவும்.
இதை 10 முறை தொடர்ந்து செய்தால் நீங்கள் இலகுவாக உணர்வீர்கள்.
2. மஞ்சள்

ஆன்டி இன்ப்ளமேட்டரி எனப்படும் வலி நிவாரண குணங்களுக்கு பெயர் போன மஞ்சள் கழுத்து பிடிப்பை குணமாக்க நல்லதொரு தேர்வு.
செய்முறை:
ஒரு தேக்கரண்டி மஞ்சளை பாலில் சேர்க்கவும்.
அதை 5 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடு செய்யவும்.
அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.
3. சூடான அழுத்தம் / ஒத்தடம்

உடலின் மேல் எந்த இடத்தில் சூடான அழுத்தம் கொடுக்கப் படுகிறதோ, அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள விறைப்பு தன்மையை நீக்கப் படுகிறது.
செய்முறை:
ஹாட் வாட்டர் பாக் / சூடான நீர் பை உபயோகித்து தோல் மற்றும் கழுத்து பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும்.
10 – 15 நிமிடங்கள் அதை அப்படியே செய்து வந்தால் நீங்கள் இதமாக உணர்வீர்கள்.
இதற்கு பதிலாக நீங்கள் சூடான நீரில் சில நிமிடங்கள் ஷவர் குளியல் எடுத்துக் கொள்ளலாம். இது கழுத்து பிடிப்பிற்கான மற்றுமொரு அருமையான சிகிச்சை. ஆனால் வெகு நேரம் அப்படி நின்றால் உங்கள் சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.
தினமும் 2 – 3 முறை இவ்வாறு செய்யலாம்.
4. எப்சம் உப்பு

கழுத்து பிடிப்பிற்கான இன்னொரு அருமையான சிகிச்சை எப்சம் உப்பு ஆகும். தசையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை விலக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்முறை:
குளியல் தொட்டியில் 3/4 பாகம் வெதுவெதுப்பான நீர் கொண்டு நிரப்பவும்.
அதில் எப்சம் உப்பை சேர்க்கவும்.
அதனுள் சில நிடங்கள் மூழ்கி இருக்கவும்.
இதை ஒரு நாளைக்கு இரு முறை செய்யவும்.
5. மஸாஜ்

உங்கள் கழுத்து பகுதியில் மஸாஜ் கொடுப்பதன் மூலம் அவ்விடத்தில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரித்து உங்களுக்கு நிவாரணத்தை அளிக்கிறது.
செய்முறை:
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தவும்.
நிதானமாக உங்கள் கழுத்து பகுதியில் தடவி வட்டமாக மஸாஜ் செய்யவும்.
நல்ல நிவாரணம் பெற சுடு நீரில் ஷவர் குளியல் எடுத்துவிட்டு இதை செய்யவும்.
தினமும் இவ்வாறு செய்வதன் மூலம் நீங்களே நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள்.
Image source: pixabay,youtube
Writer. Subhashni Venkatesh
Thanks for the Sources.
Credited to https://bit.ly/3ihQJpg
Comments