இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும்
இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். சமைக்கும் போது மிக மிக முக்கியமாக தேவைப்படும் சில பொருட்கள் இல்லை என்றாலும் சமையலை சமாளித்து விடலாம்.
By
Rajesh
![](https://static.wixstatic.com/media/79b069_d2b32caa76c444f49e9d93df4a66122f~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/79b069_d2b32caa76c444f49e9d93df4a66122f~mv2.jpg)
சமைக்கும்போது வீட்டில் முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருட்கள் சில குறைவாக இருக்கும். இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சமையலை சமாளித்து விட வேண்டும். அதே சமயம் மீதமான பொருட்களை அடிக்கடி குப்பையில் தூக்கி கொட்ட கூடாது. அதில் தான் பெண்களின் திறமைகள் அடங்கி இருக்குது. உங்களுக்கு சமையலே தெரியவில்லை என்றாலும் இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்திற்கு, சமையலை சமாளிக்க இது உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
![](https://static.wixstatic.com/media/79b069_be70fb56cad54a21ab27af3ac6169785~mv2.jpg/v1/fill/w_670,h_636,al_c,q_85,enc_auto/79b069_be70fb56cad54a21ab27af3ac6169785~mv2.jpg)
Tips 1:
டீ போடும்போது இஞ்சி தீர்த்து விட்டதா. உடனடியாக நான்கு மிளகு எடுத்து நன்றாக தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து, டீ தூள் போட்டு, டீ போட்டால் இஞ்சி டீ விட, இந்த மிளகு டீ சூப்பராக இருக்கும்.
Tips 2:
எப்போதுமே பாசிப்பருப்பை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். சட்னி அரைக்கும் போது தான் பொட்டுக்கடலை டப்பாவில் இல்லை என்று பார்க்கிறீர்களா. மிக்சி ஜாரில் 1 கைப்பிடி தேங்காய், 1 கைப்பிடி அளவு வறுத்த பாசிப்பருப்பை போட்டு பச்சை மிளகாய் உப்பு போட்டு, அரைத்தால் சூப்பரான தேங்காய் சட்னி தயார்.
pasi-parupu
![](https://static.wixstatic.com/media/79b069_081cd3c69845444099173b9525c779f1~mv2.jpg/v1/fill/w_194,h_259,al_c,q_80,enc_auto/79b069_081cd3c69845444099173b9525c779f1~mv2.jpg)
Tips 3:
குக்கரில் குருமாவுக்கு, தாளித்துவிட்டு காய்கறிகளை எல்லாம் போட்டு வதக்கி விட்டீர்களா. இறுதியாக தேங்காய் அரைத்து ஊற்ற வேண்டுமா. ஃப்ரிட்ஜில் தேங்காய் இல்லையா. உடனடியாக மிக்ஸி ஜாரை எடுத்து பொட்டுக்கடலை 2 ஸ்பூன், முந்திரி 10, சோம்பு 1 ஸ்பூன், தேவைப்பட்டால் பச்சை மிளகாய், இவை எல்லாம் போட்டு ஒரு முறை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி இதை விழுதாக அரைத்து குருமாவில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்தால் திக்கான சூப்பர் குருமா ரெடி. இதை சிக்கன் மட்டன் குருமாவுக்கு கூட பயன்படுத்தலாம்.
Tips 4:
தேங்காய் ரொம்ப ரொம்ப கொஞ்சமாகத்தான் இருக்கிறது. இடியாப்பத்திற்கு ஆப்பத்திற்கு கொஞ்சம் நிறைய பால் தேவை. தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்த பச்சரிசியையும் இதில் போட்டு, எப்போதும் போல தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்தால் தேங்காய் பால் திக்காகவும் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் கூடுதலாகவும் கிடைக்கும். அதேசமயம் சுவையாகவும் இருக்கும். (இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் இருந்தால் ஒரு ஸ்பூன் பச்சரிசி போதும். தேங்காய் தண்ணீர் இருந்து அதை ஊற்றி தேங்காய் பால் எடுத்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.)
coconut1
![](https://static.wixstatic.com/media/79b069_00bb3afbc7fb4fbca90232dfc22eb18b~mv2.jpg/v1/fill/w_225,h_258,al_c,q_80,enc_auto/79b069_00bb3afbc7fb4fbca90232dfc22eb18b~mv2.jpg)
Tips 5:
அப்பளம் பொரிக்கும்போது முதலில் அப்பளத்தை நான்கு துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயில் மிகக் குறைந்த அளவு எண்ணெயை ஊற்றி இந்த அப்பளத்தை பொறுத்துக் கொள்ளலாம். நிறைய எண்ணெயில் அப்பளத்தை முழுசாக போட்டு பொறித்தால் அந்த காய்ந்த எண்ணெய் முழுவதும் கருப்பாகிவிடும். நிறைய காய்ந்த எண்ணெயை வைத்து மீண்டும் பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப சிரமம். இப்படி அப்பளம் பொரித்து மீதம் இருக்கும் அந்த கடாயிலேயே குழம்பு அல்லது ஏதாவது பொரியல் செய்தால், அந்த கடாயில் ஒட்டி இருக்கும் எண்ணெயை கூட வீணாகாமல் சேமிக்கலாம்.
macroni
![](https://static.wixstatic.com/media/79b069_3c9a62faa93b4fe9adef4e9ff3189864~mv2.jpg/v1/fill/w_490,h_365,al_c,q_80,enc_auto/79b069_3c9a62faa93b4fe9adef4e9ff3189864~mv2.jpg)
Tips 6:
நேற்று வைத்த சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு மீதமாகிவிட்டதா. அல்லது காலை வைத்த மதியம் வைத்த சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு, இரவு மீதம் இருக்கிறதா. கவலையே படாதீங்க. அதை கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். கொஞ்சமாக அதில் தேங்காய் பாலை அரைத்து ஊற்றுங்கள், தேவையான அளவு தண்ணீரையும் கொஞ்சம் அதிகமாக ஊற்றிக் கொள்ளுங்கள். ஊற்றிய தேங்காய் பாலுக்கு தேவையான உப்பு காரம், கரம் மசாலா, அல்லது சிக்கன் மசாலா எது தேவையோ அதை போட்டுக் கொள்ளுங்கள். இது நன்றாக கொதிக்கட்டும். இப்போது இந்த கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரான குழம்புக்கு ஏற்ற அளவில் மக்ரோனி அல்லது நூடுல்ஸ் உங்களுக்கு எது தேவையோ அதை போட்டு வேகவைத்து எடுத்தால், சூப்பரான ஒரு டிஷ் கமகமன்னு வாசத்தோட தயாராகி இருக்கும்.
dosa-mavu
![](https://static.wixstatic.com/media/79b069_9604d4219a1a4ebf9b425364dd1969ce~mv2.jpg/v1/fill/w_300,h_405,al_c,q_80,enc_auto/79b069_9604d4219a1a4ebf9b425364dd1969ce~mv2.jpg)
Tips 7:
தோசை மாவு ரொம்ப அடியாகி விட்டதா. அது சூப்பராக தோசை வார்ப்பது எப்படி. அதில் இருக்கும் புளிப்பு சுவையை எப்படி குறைக்கலாம். மீதமான தோசை மாவில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு போட்டு, கொஞ்சமாக தேவையான அளவு உப்புத்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைத்து இதை தோசை வார்த்து, இதன் மேலே மசாலா பொடியை தூவினால் சூப்பரான தோசை தயார். ஒரு துளி கூட புளிப்பு தெரியாது.
omblette
![](https://static.wixstatic.com/media/79b069_4e3f4b5261884952a4b2578ead262a47~mv2.png/v1/fill/w_500,h_500,al_c,q_85,enc_auto/79b069_4e3f4b5261884952a4b2578ead262a47~mv2.png)
Tips 8:
காலையில் செய்த முட்டைக்கோஸ் பொரியல், வெண்டைக்காய் பொரியல், புடலங்காய் பொரியல், மீதம் ஆகிவிட்டதா. யோசிக்கவே யோசிக்காதீங்க எந்த பொரியல் மீதமானாலும் அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து, தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்து, நன்றாக நுரை வர அடித்து இரண்டு அல்லது மூன்று ஆம்லெட் போட்டால் இதை வீட்டில் இருப்பவர்கள் மீதம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
Comments