top of page

இத்தனை நோய்களை குணப்படுத்துவதில் முந்திகொள்ளும் முந்திரி

இத்தனை நோய்களை குணப்படுத்துவதில் முந்திகொள்ளும் முந்திரி:

முந்திரி அதிக அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்தவை.

முந்திரி நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும்.இதில், பொட்டாசிய சத்து அதிக அளவிலும், சோடியம் குறைவாகவும் உள்ளது.

இது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் தரக் கூடியது.

முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் பிளேவோனால் உள்ளது மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட்களும் இருக்கின்றன.

மேலும், இதில் செலினியம், வைட்டமின் ஈ, காப்பர், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்சத்து ஆகியவை உள்ளன.

சிறிதளவு முந்திரியில் கூட 553 கலோரிகள் உள்ளன.

மேலும், இவற்றில் டைராமைன் மற்றும் பினைலேதைலாமின் போன்ற அமினோ அமிலங்களும் உள்ளன.

கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

பயன்கள்:

சுவாசக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

எலும்புகளின் சக்தியை அதிகரிக்க செய்யும்

தூக்கமின்மை கோளாறுகளை குணப்படுத்தும்.

செரிமானக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

நரம்பு சம்பந்தபட்ட பிரச்சினைகளை குணப்படுத்தி ஆரோக்கியத்தை கொடுக்கும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை சீராகவும் வைத்துக் கொள்ள உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

புற்றுநோய் வருவதிலிருந்தும் விடுபடலாம்.

வெள்ளை முடி வந்தால் முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் கருமை நிறமாக மாறும்.

மேலும், முடியை நன்கு வளர செய்யும்.

சிறுநீரகக் கற்கள் உருவாவதிலிருந்து விடுபடலாம்.

எடையைக் குறைக்க உதவுகிறது.

சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கச் செய்யும்.

பற்கள் மற்றும் ஈறுகளின் சக்தியை அதிகரிக்கும்.

காசநோய் மற்றும் தொழுநோய்களை குணப்படுத்த செய்யும்.

முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம்

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page