ஆண்களுக்கான அருமருந்து
ஆண்கள் சந்தித்து வரும் ஆண்மைக்குறைபாடு பிரச்சனையை வீட்டுமருத்துவ முறையில் தீர்வு காணலாம்.
Written by - S.Karthikeyan
திப்பிலியின் கஷாயம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது. இதற்கு ஆண்களின் குறைந்த விந்தணு எண்ணிக்கை, விந்து முந்துதல் ஆகியவையும் காரணமாக அமைகின்றன.உங்கள் சமையலறையில் வைத்திருக்கும் திரிகடுகங்களில் ஒன்றான திப்பிலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . பசுவின் நெய்யில் திப்பிலியை வறுத்து பொடி செய்து பசும்பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்து வர ஆண்மை குறைபாடு மற்றும் முன்கூட்டியே விந்து வெளியேறுவது சரியாகும்.
திப்பிலியின் நன்மைகள்
1. புரதங்கள், அழற்சி எதிர்ப்பு, கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை திப்பிலியில் காணப்படுகின்றன.திப்பிலி உடம்பு சூட்டை அதிகரிப்பதால் அளவுக்கு மீறி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2.திப்பிலியை உட்கொள்வதால் செரிமான அமைப்பு வலுப்பெறுகிறது. உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதன் பொடியை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன் வயிறு விரைவில் சுத்தமாகும்.
3. திப்பிலி இருமல், சளி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. அஜீரணம், வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் காக்கிறது. மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு திப்பிலி வரப்பிரசாதம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
Thanks to Sources.
Credited to Zeenews.india.com
https://bit.ly/3FRSUJ4
Comentarios