top of page

அரிய நோய்கள் போக்கும் அருமருந்து வெந்நீர்.!


பெரும்பாலானோர் குளிர்ந்த நீரை அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கப்படுத்துகிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீரினை அருந்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.


தாகம் எடுக்கும் போது பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சு டான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடிப்பதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.


திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாமல் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். ஏனெனில் அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி உண்டாகும்.

அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட் அல்லது புரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உணவும் செரித்துவிடும்.


காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்றால் ஒரு டம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள். இதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும்.


நன்மைகள்:


பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும்வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.


சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது


அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.


வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.


நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.


மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.


கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.


பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.


தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

பலன்கள்:


வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் அதிகப்படி சதை குறையவும் உதவும். ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெண்நீரை மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்.


உடம்பு வலிக்கு வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.


கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுக்கவும். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெண்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.


மூக்கு அடைப்பாக இருந்தால் வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போகும்.


வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.


ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது நல்லது.


தலைவலி, அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும்.


சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவு ஒரு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.


Thanks for the Sources.

Credited to :

https://bit.ly/3XcDJ3d

https://bit.ly/3VB3mcF

 
 
 

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page