top of page

Nervous system: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்து

Nerves: நரம்புகள் வலுப்பெற உதவும் சைவ உணவுகள் இவை தான்!


உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் நரம்புகளும் ஒன்று. முறையான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடவில்லை எனில், உடலில் உள்ள நரம்புகளில் பாதிப்புகள் வரக் கூடும்.


நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய காரணமாக விளங்குபவை பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். தினந்தோறும் பழங்களை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய்கள் வந்த பின்னர், மருத்துவமனைகளை நாடிச் செல்வதைக் காட்டிலும், வருமுன் காப்பதே சிறந்தது. நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் நரம்புகளும் ஒன்று. முறையான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடவில்லை எனில், உடலில் உள்ள நரம்புகளில் பாதிப்புகள் வரக் கூடும்.


வைட்டமின் பி12


உடலில் உள்ள நரம்புகள் வலுப்பெறவும், நரம்பியல் நோய்கள் அனைத்தும் குணமடையவும் சில உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைத் தரும். வைட்டமின் பி12 சத்து உடல் நரம்புகள் வலுப்பெறுவதற்கு மிக முக்கியம். கோழியின் ஈரல் போன்ற அசைவ உணவுகளில் மட்டுமே வைட்டமின் பி12 சத்து அதிகமாக உள்ளது. ஆனால், அதுவே சைவ உணவுகளை சாப்பிடும் நபர்கள் என்றால், பால் பொருட்களை அதிகமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.


நரம்புகள் வலுப்பெற சாப்பிட வேண்டியவை


40 வயதைக் கடந்த அனைவரும், தினந்தோறும் ஒரு முறையாவது ஏதேனும் ஒருசில பழங்களை அவசியமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இதனை தொடரந்துப் பின்பற்றினால் நரம்பு மண்டலம் வலுப்பெறுவது உறுதி.


உலர் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் மிகவும் முக்கியமானது, நரம்பு மண்டத்தை வலுவாக்குவது. உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இருக்கும் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாமல், எல்லாருமே பாதாம், முந்திரி மற்றும் வாதுமைப் பருப்புகள் ஆகியவற்றை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், நமது நரம்பு மண்டலம் மிக வலுவாக இருக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரையை பகல் உணவில் சேர்த்துக் கொள்வது நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது.


தேநீரில் லவங்கப்பட்டை சேர்த்துக் குடிப்பது, நரம்புகளுக்கு நன்மையை அளிக்கும்.


நரம்புகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகையான உணவுகளிலும் மஞ்சள் தூள் மற்றும் வெந்தயத்தை தவறாமல் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.


தாமரைத் தண்டு அல்லது தாமரை விதையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தாலும், இந்த நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகள் அனைத்தும் குணமாகி விடும்.


நரம்பு மண்டலத்தை இயற்கையான முறையில் வலிமையாக்க எந்தெந்த உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan


  • உடலின் நரம்புகளுக்கு மெக்னீசியம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.

  • நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.

  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு மிகவும் முக்கியம்.


நாம் அனைவரும் அலுவலக வேலை, நண்பர்கள், திருமணம், குடும்ப விஷயங்கள் மற்றும் பிற விஷயங்களில் மிகவும் பிஸியாக இருப்பதால், நமது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். பெரும்பாலானோர் நேரம் இல்லை என்ற காரணத்தை கூறி, உடற்பயிற்சி செய்வது இல்லை.தினமும் வெளியில் ஜங்க் ஃபுட்களை சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இவை அனைத்தும் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நம் நரம்பு மண்டலுமும் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, ​​உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். அதற்கு உங்கள் டயட்டில் எந்தெந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


உலர் பழங்கள்


உலர் பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நமது நரம்புக மண்டத்தை வலுவாக்குவது. உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும்.


மீன் உணவுகள்


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு மிகவும் முக்கியம். இது நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனால் தான் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


பச்சை காய்கறிகள்


பச்சை காய்கறிகளில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன., இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உங்கள் உணவின் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்


நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்!

தொகுப்பு: பாலு சத்யா


வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.


ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

உணவு, பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல. விருந்தாகவோ, மருந்தாகவோகூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. உடலுக்குத் திறனை உருவாக்க உதவும். கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. ஆறிய கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாக இருந்தாலும், உணவும் நம் மனித வாழ்வின் அடித்தளம். எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இன்றைக்கு உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகிவிட்டது. கொஞ்சம் கவனமாக நம் பாரம்பர்ய உணவு விஷயங்களை, நவீன அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில், தலைவாழை இலையில், பச்சை கலர் மாத்திரைகள் பதினைந்தைப் போட்டு, வைட்டமின் சிரப் ஊற்றிப் பிசைந்து, வேண்டுமானால் தொட்டுக்கொள்ள லேகியம், தாகத்துக்கு கஷாயம் என உணவு வாழ்க்கை, தலைகீழாக மாறிவிடும். எனவே, காய், கனி, கீரைகளைக் காதலிப்போம். தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன் அலங்காரமாகச் செய்து ஆரவாரமாகப் பரிமாறிடுவோம்.


நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்... பார்க்கலாமா?


* கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.


* நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது.


* இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.


* தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.


* நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.


* வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.


* ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்.


நரம்புகள் பலம்பெற தினம் ஒரு செவ்வாழை...!

வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

செவ்வாழை சாப்பிடுவதால் கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.

செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.


உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை



எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

1. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

2. இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது. *கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.


3. செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.


4. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

5. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும். பல்வலி குணமடையும்.

6. பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

7. சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

8. நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு

9. செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

10. குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

11. தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.


'ஆண் நண்பர்களே உஷார்..!! "நரம்பு தளர்ச்சியா"..இனி கவலை வேண்டாம்,உணவில் மருந்து..!!'


இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும்.அதேபோல் இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..!


கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் அதிகளவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய 'அல்சீமர் நோய்' எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.உடல் ஆரோக்கியத்தை காக்க தினமும் அதிகளவு பொன்னாங்கன்னிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடும்.



உங்க நரம்புகள் பலவீனமா இருக்கா? அத வலிமையாக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...


நாம் நமது இதயம், நுரையீரல், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவை அன்றாடம் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யவும், அவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம். ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது நரம்பு மண்டலத்தை தான். இது நமது உடலின் இயல்பான செயல்பாட்டின் ஒருங்கிணைந்த ஒரு முக்கிய பகுதியாகும்.



நரம்பு மண்டலம் தான் நமது நரம்பு முனைகளில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புகிறது. நரம்புகள் தான் ஒருவரது உணர்வுகளை வெளிப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் முக்கியம். அத்துடன் நரம்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள அன்றாட உணவில் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நரம்புகள் பலவீனமாவது தடுக்கப்பட்டு, வலிமையாக இருக்கும். இப்போது நரம்புகளை வலுப்படுத்தும் உணவுகள் எவையென்று காண்போம்.



விதைகள் மற்றும் நட்ஸ்

வால்நட்ஸ், பாதாம், ஆளி விதைகள் போன்றவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் தான் ஆரோக்கியமான சருமம் மற்றும் நரம்புகள் மற்றும் உயிரணு சவ்வுகளைப் பெற உதவுகின்றன. அதோடு இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. பிஸ்தாவில் வைட்டமின் பி என்னும் தியாமின் வளமான அளவில் உள்ளது. இது நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.



பன்றி இறைச்சி

பன்றி இறைச்சியில் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய சத்தான வைட்டமின் பி என்னும் தியாமின் வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் புரோட்டீன் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.



ஓட்ஸ்

நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால், பன்றி இறைச்சிக்கு மாற்றாக ஓட்ஸை சாப்பிடலாம். ஏனெனில் ஓட்ஸிலும் வைட்டமின் பி அதிகம் உள்ளது. கூடுதலாக இதில் புரோட்டீன், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் நரம்புகளை அமைதியடையச் செய்து, நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



கடல் உணவுகள்

நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்து என்றால் அது வைட்டமின் பி12 தான். இந்த வைட்டமின் பி12 மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது மற்றும் மன இறுக்கத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் முக்கியமான சத்து. இந்த வைட்டமின் குறைபாடு தான் இதய பிரச்சனைகள் மற்றும் நரம்பு சேதத்தை உண்டாக்குகின்றன. கடல் உணவுகளான மீனில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. ஆகவே அடிக்கடி மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.



இறைச்சி

இறைச்சிகளில் வைட்டமின் பி12 அதிக அளவில் உள்ளது. இது நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. எனவே உங்கள் டயட்டில் சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வைட்டமின் பி12 மட்டுமின்றி, இதர வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன் போன்றவையும் உடலுக்கு கிடைக்கும்.



முழு தானியங்கள்

முழு தானியங்களான கைக்குத்தல் அரிசி, பார்லி, திணை போன்றவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் பி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இச்சத்து மிகவும் அவசியமானது. ஏனெனில் இது தான் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவான நரம்பு மண்டலத்துடனும் பிறக்க, உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.



பால் பொருட்கள் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மற்றொரு முக்கியமான சத்து என்றால் அது பொட்டாசியம். இத்தகைய பொட்டாசியம் பால் பொருட்களில் அதிகம் உள்ளது. பால், தயிர், மோர் போன்றவற்றில் கால்சியம் மட்டுமின்றி பொட்டாசியமும் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த பிற உணவுப் பொருட்களாவன இறைச்சி, பச்சை இலைக் காய்கறிகள், மீன் போன்றவை.


Thanks to Sources.

Credited to Zeenews.india.com

https://bit.ly/3Bzl6xQ

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page